28 September 2015

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது :)

  வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''


 புரியுது ,ஆனா புரியலே !              
                  ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
                   ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?
           ''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
          ''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து ! 1. வெங்கட் நாகராஜ்Fri Oct 10, 07:29:00 a.m.
  கடைசி .... நிச்சயம் நல்லது தான்! அப்படி ஒருவன் இருப்பதை விட இல்லாதிருப்பது மேல்.
  1. அவன் இருந்து கழுத்து அறுப்பதை விட ,அவன் கட்டிய தாலியை அறுப்பது நல்லதுதான் ,அப்படித்தானே )

32 comments:

 1. Replies
  1. பருப்பை சொல்லாமல் சொல்லிய விதம்தானே :)

   Delete
 2. Replies
  1. உங்க பருப்பு இன்று சரியா வேகலையே ,ஏன் :)

   Delete
 3. ஆசை ..பேராசை நல்ல விளக்கம். ஹஹ

  ReplyDelete
  Replies
  1. விளக்கம் சொல்லும் குரு ஆசையை துறந்தவர் ,பேராசையைத் துறந்தவர் மாதிரி தெரியலையே :)

   Delete
 4. துவரம் பருப்பு துயரம் பருப்பானது தெரிகிறது. நம்மில் பலரும் ஆண்மைமிகு குருதான் விதவையின் மகிழ்ச்சிக்கு துக்கம் தெரிவிப்பதா?

  ReplyDelete
  Replies
  1. இந்த பருப்பு வேகவே ஒரு சிலிண்டர் தேவைப் படும் போலிருக்கே :)

   நினைப்புதான் அய்யா பிழைப்பைக் கெடுக்குது :)

   அதானே ,இப்போதானே அவரே துக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கிறார் :)

   Delete
 5. ரேசன் பருப்புல்ல...ஒன்னொன்னா வரிசையாத்தான் வேகும்...! வேகுறதே பெரிய விஷயம்... வெந்தத திண்ட்டு விதி வந்தா சாகவேண்டியதுதான்...! துவரம் பருப்ப நினச்சா ரொம்ப துயரமாத்தா இருக்கு...!


  இதுகூடவா புரியல...எ கல்யாணத்துக்கு அப்புறம்தான்...! அப்புறம் நா கை பட்டாலும் குத்தம்...கால் பட்டாலும் குத்தம் சொல்லமாட்டேன்... ஒங்க பொண்டாட்டி ஒன்னும் சொல்லாம இருந்தாச் சரி...!


  ‘அளவுக்கு அதிகமா ஆசைப்படுற பொம்பள நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல...’ ஆம்பளைக்கு ஒன்னும் அப்படி சொன்னதாத் தெரியல... அதுனால பேராசைப் பட்டாத்தான்...அது நிறைவேறனாலும் ஓராசையாகும் நிறைவேறும்...! பேராசை நிறைவேற நம்ம என்ன ஆன்மீக குருவா ?


  சனியன் தொலைஞ்சு போச்சேன்னு நிம்மதியா இருக்கேன்...! இனிமே குடிச்சிட்டு அடிக்க மாட்டான்ல்ல...! நானும்தான் குடிக்கிறேன்... யாரையாவது அடிச்சிருப்பேனா... சொல்லுங்க...!

  த.ம.6


  ReplyDelete
  Replies
  1. வேகாததை தின்றாலும் சாகத்தானே போகிறோம் :)

   சின்ன வீடா வரட்டுமான்னு பாடாத குறைதான் :)

   சிஷ்யனுக்கு ஒரு பெண்டாட்டிதான் ........?

   குடும்பம் வெளங்கிடும் :)

   Delete
 6. துவரம்பருப்பு,துயரம்பருப்பு ஆயிடிச்சா?!
  அருமை

  ReplyDelete
  Replies
  1. வேகலைன்னா ,ஆகத்தானே செய்யும் :)

   Delete
 7. மணவையார் சொல்லிக் கொண்டே இருப்பார் உங்களை....!
  உண்மை.

  எல்லாம் ரசனை.

  ReplyDelete
  Replies
  1. மணவையாரின் ரசனையை நானும் அவரின் நீண்ட கருத்துரைகள் மூலம் உணர முடிகிறது ,அவருக்கு உங்கள் மூலமாய் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

   Delete
 8. பேராசை விளக்கம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. அனுபவ வார்த்தையாச்சே :)

   Delete
 9. 01. ஸூப்பரப்பூ
  02. குழப்பமான கேள்வி மா3தான் இருக்கு ஜி
  03. ஜி இந்த சாமியார் எங்கே இருக்காரு... ? அட்ரஸ் ப்ளீஸ்..
  04. நாட்டில் இன்று நிறைய பெண்களின் கதி இதுதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. பூ இல்லே பருப்பு :)
   கை விடுவதில் அவர் தெளிவாய் இருக்காரே :)
   அகிலமெங்கும் நிறைந்து இருக்காரே :)
   சீக்கிரம் அவர்களுக்கு சந்தோஷம் வரட்டும் :)

   Delete
 10. ஜோக்குகள் சிரிக்க வைத்தது! விதவையின் துயரம் சிந்திக்க வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. மனுசன் குடிக்காதப்பா தங்கம்னு சொல்லும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :)

   Delete
 11. ரசித்தேன் சிந்தித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. சிரிக்கவில்லையா :)

   Delete
 12. ரசித்தேன் ஜி....
  கலக்கிட்டிங்க...

  ReplyDelete
  Replies
  1. கலக்கக்கூடாதோ பருப்பு வேகும்போது :)

   Delete
 13. ரசித்தேன் ஜி அருமை அருமை !

  ReplyDelete
  Replies
  1. இனியார் சொல்லணும் இனியாவே ரசித்த பிறகு :)

   Delete
 14. விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரிந்தால்..குடிகாரன் செத்ததைகூட.கதை கட்டி நோக அடித்துவிடுவார்கள் ..

  ReplyDelete
  Replies
  1. உண்மை ,உத்தமியைப் பற்றி நா கூசாமல் பேசுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் :ல்;)

   Delete
 15. துயரம் பருப்பு! :))

  அட நானும் பதிவில்!

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்தை ரசித்துதானே , ரசனையான மறுமொழி கூற முடிந்தது ,உங்களை மறக்க முடியுமா :)

   Delete
 16. துவரம் பருப்பு துயரம் பருப்பு ஹஹஹஹ்...

  யார் கல்யாணத்துக்கு அப்புறம் ஹஹஹஹஹ்

  குருவின் ஆசை பேராசை...அதைத்தான் பேரானந்தம் என்கிறாரோ...சிஷ்யர்களுக்கு...ஹ்ஹஹ

  ReplyDelete
  Replies
  1. இதைத் தவிர .எல்லாமே பேருக்குத்தான் ஆனந்தம் என்பாரோ :)

   Delete