29 September 2015

பூவின் மணம் பூவையருக்கும் உண்டா :)

இது கபாலிக்கு புகுந்த வீடு :)

             ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''
           ''உங்களுக்குத்தான் அவங்க Pol'ice' ,எனக்கு அவங்க வெறும் ICE தான் !''


சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
             ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''


டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?

            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேட்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''
            ''விடுங்க டாக்டர் ,எழுதி இருந்தாலும் என்ன மருந்தை எழுதுவீங்க எங்களுக்குத் தெரியாதா ?''


பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் ! 1. Yarlpavanan KasirajalingamMon Sep 29, 03:42:00 a.m.
  பூவின் மணம்
  பூவைத் தாங்கும்
  காம்புக்கு உண்டென்றால்
  பூவைச் சூடும்
  பெண்ணுக்கு இருக்காதா?
  1. Bagawanjee KAMon Sep 29, 06:51:00 p.m.
   இருக்காதான்னு நீங்களும் கேட்டா எப்படி ?


30 comments:

 1. டாக்டர் ஜோக் முதலிடம்! அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தும் முதலிடம் பிடித்து விட்டது ,நன்றி :)

   Delete
 2. Replies
  1. பூவின் மணத்திலும் மேன்மையானது அந்த நாற்றம்,..அருமைதானே :)

   Delete
 3. Replies
  1. பால் ICE போல் இனித்ததா :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன், டாக்டர் எழுத்தினை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. தலைஎழுத்தை படிக்க முடியாது ,டாக்டர் எழுத்தை படிக்க முடிந்தாலும் புரிந்து கொள்ளமுடியாது :)

   Delete
 5. எப்படியோ ஐஸ் வச்சு கபாலி படத்துல நடிச்சாச் சரி...!


  கிணறு வெட்ட அந்த பூதம் கிளம்பிடுச்சா...?


  விடுங்க டாக்டர் நீங்க கிறுக்கங்கிறது... சாரி... கிறுக்கினது அந்தக் குறுக்குக்கு எங்க தெரியப்போவுது... ? மனோதத்துவம் படிச்சது பேஷண்ட்ட இருந்து ஒங்கள காப்பாத்திடுச்சு...!


  மனிதன் என்னதான் மாடா உழைத்தாலும் இதழ்களில் இருந்து வியர்வை வெளிவராதில்ல... உழைப்பின் இரகசியம் வெளியே கசிந்துவிடாமல் காக்கின்றதோ...? சரி விடுங்க பொன்மலர் நாற்றம் உடைத்து!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. போலீஸ்காரங்க தானே :)

   பூதம் கிணறு வெட்டுற வேலை செய்யுமா :)

   எல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் தான் :)

   பொன்மலர் நாற்றம் உடைத்து!சரியான பொருத்தமே :)

   Delete
 6. பூவின் மனம் நாறுதோ..இல்லையோ...டாஸ்மாக்கால் நல்லாவே நாறுது தலைவரே....

  ReplyDelete
  Replies
  1. குடி மகன்களுக்கு நாற்றமே பழகி போச்சு :)

   Delete
 7. அப்பா வுக்கு இப்பவாவது புரியுமா?????????
  அனைத்தும் அருமை ஜீ,,,,,

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் முடிந்த பின் புரிந்தென்ன செய்ய :)

   Delete

 8. மாமியார் வீட்டுக்குப் போக கபாலி மாதிரி இருப்பவர் யாராவது பயப்படுவார்களா? அந்தக் கிணற்றில் அவளது கணவனும் இருக்கணுமே.டாக்டரைப் பற்றி அதிகம் தெரிந்தவர் எனக்கு பாண்டிய மன்னனின் சந்தேகமும் இறையனாரின் பதிலும் நினைவுக்கு வந்தது

  ReplyDelete
  Replies
  1. போலீசே டபாலி வேலை செய்யும் போது கபாலிக்கு என்ன கவலை :)
   தள்ளி விட்டவரே அவர்தானே :)
   மன்னனின் சந்தேகத்தை நான் தீர்த்து இருப்பதைக் கவனிக்கவில்லையா :)

   Delete
 9. 01. ஸூப்பர் போலீஸ் ஜி
  02. பொருத்தமான பதிலை கொடுக்கிறாளே மகள்..
  03. பல இடங்களில் இப்படித்தான் நடக்குது
  04. தத்துவம் ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. போலீஸ்னா இதுதாண்டா போலீஸ் :)
   கிணற்றின் அல்ல ,உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்ததாச்சே :)
   எப்படிக் கிறுக்கினாலும் காசுதானே :)
   தத்துவம் என்றால் புரிந்து இருக்கக் கூடாதே :)

   Delete
 10. நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
  ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''//
  பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
  அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !
  மிக நல்ல நகைச்சவைகள்
  ரசித்தேன்.
  மிக்க நன்றி சகோதரா.

  ReplyDelete
  Replies
  1. நான் சீரியஸா சொல்றது கூட நகைச்சுவையாவது ,நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் :)

   Delete
 11. உழைப்பினால் உண்டாகும் வியர்வைக்கும்,உஷ்ணத்தினால் வெளியேறும் வியர்வைக்கும் நாற்றத்தில் வேறுபாடு உண்டோ?

  ReplyDelete
  Replies
  1. அதை ,பட்டிமன்றமோ ,ஆராய்ச்சியோ செய்து கண்டுபிடித்தால் நல்லது :)

   Delete
 12. Replies
  1. இதை தனியாக சொல்வதன் பின்னணி என்ன ,ஜி :)

   Delete
 13. Replies
  1. புரியும் படி உள்ளது ,நான் கரடி விடவில்லை ,அப்படித்தானே அய்யா :)

   Delete
 14. அருமை நண்பரே. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. POLICEல் ICE உள்ளது எதிர்மறையான விஷயம்தானே:)

   Delete
 15. டாக்டர் ஜோக் அருமை ஜி...எல்லாமே ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. குண்டு குண்டா எழுதினா ,டாக்டர்ன்னு யாருமே நம்ப மாட்டாங்க போலிருக்கே

   Delete