4 September 2015

'வீடியோ காலில்' தெரிந்த அழகு முகத்தை :)

  வயதை மறைக்க முடியாதே :)            

             ''என்னடா சொல்றே ,எனக்கு நக்கல் ஜாஸ்தியா ?'' 

             ''ஆமா மச்சி ,அந்த நடிகை கஷ்டப் பட்டு 18 கிலோ எடையைக் குறைச்சிருக்கேன்னு சொன்னா ,வயசுலேயும் 18 வருசம் குறைஞ்சா நல்லாயிருக்கும்னு  நக்கல் அடிக்கிறீயே!''


மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !

            ''எலிப் பொறியில் வைத்த எதுக்குமே சிக்காத எலி ,அந்த ஹோட்டல் மசால் வடைக்கு மட்டும் மாட்டும்னு எப்படி உறுதியாய் சொல்றே ?''
               ''காதலிக்கும் போது நீங்க வாங்கித்தந்த அந்த ஹோட்டல் மசால் வடையைத் தின்னுட்டு ,நானே மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே !'''வீடியோ காலில் 'தெரிந்த அழகு முகத்தை ...!
              ''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு  தலைவர் 'வைடா போனை 'ன்னு கோபமா கத்துறாரே ?''
              ''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டாரோ என்னவோ ?''

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?

நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
ஒருபேச்சுக்குக்கூடசொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க மாட்டேன் 'என்கிறாள் !


காதலிக்கு நாக்கு நீளம், மனைவிக்கு வாய் நீளம், தலைவர்க்குதான் புத்தி கம்மியா இருக்கு பாஸ்:)
ReplyDelete

Replies


 1. நீளம் அதிகமானதால் மாட்டிகிட்டு முழிக்கிறாங்களோ ?))))))))

  அரசியல்வாதிக்கு இந்த அளவிற்கு புத்தி இருக்கேன்னு சந்தோசப் படணும் )))))

26 comments:

 1. Replies
  1. வயதைக் குறைக்கும் வழியேதாவது இருக்கா ஜி :)

   Delete
 2. இந்த நக்கல்தானே வேணாங்கிறது... இந்தப் படத்துக்கு ‘18 கிலோவிகிலே / 18 வயதினிலே / இஞ்சி இடுப்பழகி...’ -இதுல எந்த பேர வக்கிலாமுன்னு டைரக்டரு என்னக் கேட்டு இருக்கு...! நா வேற ஜிம்மியோட ஜாக்கிங் போயி ரெண்டு அவர்ல ரெண்டு கிலோ எடை கொறைச்சு ’மீண்டும் 16 வயதினிலே’ வைக்கச் சொல்லனும்...அய்யோ...!எங்க மம்மி வந்துட்டாங்க... !இனி யாரோடவும் பேச மாட்டேன்... எனக்கு நடிப்புதான் முக்கியம்...!


  எலி வலைன்னாலும் தனி வலை... சாரி...தனி வடைங்கிறா...! இன்னக்கி நம்ம கல்யாண நாள்... கோயிலுக்கு போயி வடை மாலை சாத்துவோம்...!


  “தலைவர்ட்ட நமக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்புன்னு சொல்லி புரிய வையுங்க...”
  “அவரு சொல்லி புரிஞ்சிக்கிற ஆளா... தலைவரு இந்த வயசுல பொண்ணுகளோட...செல்லுல செல்பி எடுத்துக்கிட்டு பிஸியா இருக்கிறத பாரு... நேரம் பாத்து சொல்றேன்...!”


  ஒருபேச்சுக்கு சொன்னாப் பரவாயில்ல... இவரு செஞ்சுல்ல காட்டுறாரு...இவரு கைக்குத்தல் அரிசி தின்னா என்ன... மண்ணா போனா என்ன.... இவரு குத்தி குத்தி எ மூக்கப் பாருங்க...!


  த.ம. 1


  ReplyDelete
  Replies
  1. அது சரி ,மம்மியோட வயதே உங்களை விட நாலு வயசுதான் அதிகம் போலிருக்கே :)
   வடைமாலை யாருக்கு ,கல்யாணம் பண்ணிக்காதவருக்கா :)
   அவர் தலைவரா ,மன்மத ராசாவா :)
   பேச்சு பேச்சா இருக்கணும் ,இல்லேன்னா நானும்னு...சொல்லிப் பாருங்க :)   Delete
 3. Replies
  1. கைக்குத்தல் அரிசி ஆரோக்கியத்துக்கு நல்லதுதானே :)

   Delete
 4. சிரித்து ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மசால் வடையை நினைத்துதானே :)

   Delete
 5. 'வீடியோ காலில் 'தெரிந்த அழகு முகத்தை ...! நா....பார்க்கலீயே.......

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் பார்க்கத்தானே போறீங்க ,வலிப்போக்கனாரே :)

   Delete
 6. 01. 81ல 18ஐ குறைத்தால்தான் என்ன குறைஞ்ஞா போயிடுவாங்க....
  02. கிளியே மாட்டியபோது எலி மாட்டாதா ?
  03. பின்னே... இது லொள்ளுதானே...
  04. இவ மேலயும் நியாயம் இருக்கே....

  ReplyDelete
  Replies
  1. அதானே குறைஞ்சுருக்குன்னு நாம இல்லே சொல்லணும் :)
   பெருச்சாளியே மாட்டும் :)
   தலைவர் என்றாலே லொள்ளுக்கு பஞ்சமேது :)
   பலத்தைக் காட்ட பெண்டாட்டிதான் கிடைத்தாளா:)

   Delete
 7. மாசால் வடைக்கு மாட்டிய கிளியும் எலியும் ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. கிளி, பழம்தானே விரும்பும் ,மசால் வடையுமா:)

   Delete
 8. நக்கல் அல்ல அது அவனது கற்பனை.!மசால் வடைக்கே கலெக்ட் ஆன காதலியா.?செல்லில் செல்ஃபியில் சொல்லி இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. கற்பனை மனத்தால் காண்பது ,நக்கல் வாயால் வருவது (கெடுவது ) ஆச்சே :)
   இவர் பெயர் மசால் வடை தேசிகனா இருக்குமோ :)
   இவர் மட்டுமல்ல .பலரும் செல்பியில் 'குல்பி'யாய் தெரிகிறார்களே :)

   Delete
 9. கிளி போல் இல்லை,எலி போல் மனைவி!

  ReplyDelete
  Replies
  1. எலி வால் கொண்டை அழகு ,மனைவியே எலி என்றால்:)

   Delete
 10. மசால் வடையின் ரகசியம் புரிந்தது...ஹஹஹஹ்

  ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. வசிய மையால் சுட்ட மசால் வடையாய் இருக்குமோ :)

   Delete
 11. Replies
  1. ஊசிப் போகும் முன்னால் சாப்பிட்டதற்கு நன்றி:)

   Delete
 12. நக்கல், நையாண்டி இல்லையென்றால்
  இலக்கியத்தில் சுவை இருக்காதே!

  ReplyDelete
  Replies
  1. நல்லா சொல்லுங்க ,நான் எப்பேர்ப்பட்ட இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கேன் என்று :)

   Delete
 13. Replies
  1. அந்த இளமை ரகசியத்தை தானே :)

   Delete