5 September 2015

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)

இவரால்தானே மன நோயாளிகளின் எண்ணிக்கை கூடியிருக்கு :)

                  ''மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான தொண்டு அமைப்பை தொடங்கி உள்ளாராமே ,அந்த நடிகை ?''

                  ''விசுவாசமுள்ள நடிகை ,தன் ரசிகர்களுக்காக் நல்ல காரியம் பண்ணியிருக்காரே !''
               

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)

           ''குலம் கோத்திரம்  தெரியக்கூடாதுன்னு ஜாதகம்  கொடுக்காம கல்யாணம் பண்ணியும் புண்ணியமில்லாமப்  போச்சா ,ஏன் ?''
           ''வீட்டிலே எனக்கு தினசரி அர்ச்சனை நடந்துகிட்டுதானே இருக்கு ?''
.
சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !
             ''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''

திருமணம் நிற்க வலுவான காரணம் வேணும் !

அந்நிய செலாவணியை குறைப்பதற்கு ...
பெட்ரோல் நிலையங்களை இரவு மூடிவிடலாம் என்று
திருவாய் மலர்ந்து இருக்கிறார் பெட்ரோலிய மந்திரி !
அவர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் ...
ஏனென்றால்  ...
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா என்ற பழமொழி 
செம்மொழி தமிழில் மட்டும்தானே இருக்கிறது ?


 1. KILLERGEE DevakottaiFri Sep 05, 11:10:00 a.m.
  01. அவளோட பேரு அர்ச்சணாவோ ?

  02. ஸ்வீட் திங்காட்டாலும் மிக்சரை காலி பண்ணுவானே....

  03. இந்த மாதிரி அறிவாளியெல்லாம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
  ReplyDelete

  Replies

  1. அர்ச்சனா என்றால் அர்ச்சனைக்குரியவள் ஆச்சே !

   மிக்சர் போடுற இடமே வேற ...அங்கே உப்பு சாப்பிடக்கூடாதவங்க மட்டும் வேலை செய்றாங்க !

   இந்திய நாட்டுக்கே கிடைத்த வரப் பிரசாதம்னு சொல்லணும் !

37 comments:

 1. 01. பழைய கனவுக்கன்னியா ?
  02. இதுதான் தலையெழுத்து.
  03. இப்பத்தான் ஸுகர் இல்லாதவங்க கிடைப்பது அபூர்வமாகி விட்டதே.....
  04. அவருக்கு கண்டிப்பாக நைட் டூட்டி கிடையாதே...

  ReplyDelete
  Replies
  1. படத்தைப் பார்த்தால் அப்படியா தெரியுது :)
   ம அ இ வரம் என்பார்கள் ,அர்ச்சனை சேர்த்துதானே வரம்:)
   சுகர் உள்ளோர் அதிகபட்சம் 15 சதம் பேர் தானே :)
   பிறகேன் அப்படி சொன்னார் :)

   Delete
 2. சோ ஸ்வீட் துணுக்குகள்.... அருமை அய்யா

  ReplyDelete
  Replies
  1. ஓ அந்த சோவா :)
   முதல் வருகைக்கு நன்றி !

   Delete
 3. Replies
  1. சக்கரைக்கு வந்த அதிர்ஷ்டமா இது :)

   Delete
 4. எங்க வீட்டம்மா குலம் கோத்திரம் ஏன் மதம் கூட பார்க்காமல் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணி இப்ப தினமும் பூரிக்கட்டையால் அர்ச்சனை பண்ணுறாங்க ஹும்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. உங்க பாடு எவ்வளவோ பரவாயில்லை ,ஒன்லி பூரிக்கட்டை அடி மட்டும்தானே :)

   Delete
  2. Mythily kasthuri renganSat Sep 05, 11:20:00 a.m.
   ஹாஹாஹா!
   Reply>>>
   இப்படி சிரிக்கும் படியா ஆயிடிச்சே எங்க பொழப்பு :)

   Delete
 5. Replies
  1. நாட்டிலே மனநோயாளிகள் பெருக இவர்களும் ஒரு காரணம்தானே :)

   Delete
 6. அவர் மருந்து கொடுத்தால் சரியாகி விடுமோ ஜி...?

  ReplyDelete
  Replies
  1. விஷத்துக்கு மருந்து விஷம்தானே :)

   Delete
 7. தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையும் கிள்ளி விடுவது இதுதானோ...? மனம் ஒரு குரங்குன்னு தெரியும்... வேறு எங்கேயும் தாவிடக் கூடாதிங்கிற எச்சரிக்கைதான்...! தொண்டு செய்து பழுத்த பழம்...! பார்த்தா தெரியுதே...!


  சரி... கவலைய விடுங்க... பேஷா... பொண்டாட்டி பேருல்ல ஓர் அர்ச்சனை செஞ்சிட்டாப் போச்சு... பேரச் சொல்லுங்க...?


  ‘சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியுது...!’ பாடலைப் பாடிக்கிட்டே வியபாரத்தை;f கவலையில்லாம மொதலாளி பார்ப்பாருன்னு சொல்லுங்க...!


  இரவில் வண்டி வேறு பக்கம் போயி... டேங்க நிரப்பங் போறாங்க...! அப்புறம் டெலிவரி பார்க்க இரவில் மருத்துவமனைய திறந்து வைக்கனுமுன்னு மந்திரிக்கிட்ட சொல்லி வைங்க... ஆமாம்...! இவ்வளவு சீப்பான முடிவெல்லாம் எதுக்குத்தான் எடுக்கிறாருன்னு தெரியல...?

  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. #தொண்டு செய்து பழுத்த பழம்...! பார்த்தா தெரியுதே...!#
   உங்க பார்வைக் கோணமே வித்தியாசம்தான் :)

   பெண்டாட்டி பேரில் அர்ச்சனையா ,தட்சணை நிறைய வைக்க வேண்டியிருக்குமே :)

   மாஸ்டர் வியர்வை மழையில்,முதலாளி தேன் மழையிலா:)

   அதுக்குதான் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பண்றாங்களே :)


   Delete
 8. தன்னால் ஏற்பட்டதற்கு தானேதானே மருந்து தர வேண்டும்!

  கிடைப்பது கிடைக்காமல் போகாது!!

  அடப்பாவி முதலாளி!!!

  மற்ற மொழிகளில் என்னென்ன சொல்லி இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்!!!!

  ReplyDelete
  Replies
  1. முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரிதானே :)

   ஒவ்வொரு அரிசியிலும் இது யார் வாய்க்கு போக வேண்டுமென்று எழுதப் பட்டிருக்குமாம் :)

   அந்த பாவி முதலாளிக்கு உப்பும் ,சர்க்கரை இரண்டுமே ஆகாதாம் :)

   தெரிஞ்சுகிட்டா போச்சு :)

   Delete
 9. அருமை. நடிகை நகைச்சுமை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. மன நலம் பாதிக்காத விதத்தில் கண்ணியமாய் காட்சி தந்தாலே போதுமே :)

   Delete
 10. ஓஹோ! அந்த அம்மையாரின் கிறுக்குப் பிடித்தவர்களுக்கு வைத்தியமா???!!

  ReplyDelete
  Replies
  1. கிறுக்கு பிடிக்க வைத்தவரே,தெளிய வைக்கவும் முடியுமா :)

   Delete
 11. மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா ??..என்று...அனுபவ பட்டவர்களும், அனுபவ படுகிறர்களும் தான் சொல்ல வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சொன்னால் ,வலி போக்க வந்து உதவுவீர்களா ,வலிப்போக்கனாரே :)

   Delete
 12. இனிப்பான செய்தி
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இனிப்பு செய்தி ரசிக்காதோர் யார் :)

   Delete
 13. ரசித்தேன்... ரசித்தேன்ஜி...

  ReplyDelete
  Replies
  1. பதிவையும் ,வந்த கமெண்டுக்களையும் தானே :)

   Delete
 14. நன்று! இனிப்புக்கடை வேலைக்கு நான் தகுதி!

  ReplyDelete
  Replies
  1. அந்த கடையில் வேலைக்கு சேர்ந்த பின் சொல்லுங்க,அடிக்கடி வந்து இனிப்பு வாங்கிட்டுப் போறேன் (ஓசியில்தான் :)

   Delete
 15. அந்த ஸ்வீட் கடைக்கு ஈசியா ஆள் கிடைச்சுருவாங்க...என்ன, எறும்பு நிறைய வந்துருமோ...

  பூரிக்கட்டை பற்றிச் சொல்லவந்தால் மதுரைத் தமிழனே அதைச் சொல்லிவிட்டார்...

  அனைத்தையும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. எறும்பு வந்துட்டு போவுது ,மனுசனையா அது கடிக்கப் போவுது :)

   அவரை பூரிக்கட்டைத் தமிழன் என்றே ஆக்கிவிடுவீங்க போலிருக்கே :)

   Delete
 16. அனைத்தும் அருமை ரசித்தேன் !

  ReplyDelete
  Replies
  1. இனிப்பைப் பற்றி சொன்னதும் ,நீங்க வந்ததும் பொருத்தமே :)

   Delete
 17. நீங்கள் பேட்மிண்டன் ரசிகரா?

  ReplyDelete
  Replies
  1. பிரகாஷ் படுகோன் ஆடியது பேட்மிண்டன் ஆட்டம் ,அவரோட மகளான தீபிகா படுகோன் போடுவது ' பேட் ' ஆட்டம் ..இரண்டுக்கும் ரசிகன் நான் :)

   Delete