7 September 2015

காதலி மூணாறு தேவதைதான் :)

 முட்டைத்  தோசை போடவாவது தெரியுமா :)          


                  ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''
             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே    !'' மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ  ?         
             ''துணை மேயர்  கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
              ''மேயரை நகரத் தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு  கேட்கிறாரே  !''


காதலி மூணாறு தேவதைதான் !
             ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
            ''மூணாறுதான்!''

இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !

நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே ! 1. வலிப் போக்கன்Sun Sep 07, 10:56:00 a.m.
  ஓ.....சொல்லலாமே...நகரத்தேவதை.....நகரத் தேவாங்கு நகர தாரை..நத்தை, என்று....


  1. அங்கே ஆறறிவு பிறவியில் இருந்து ஓரறிவு ஜந்து வரை இருப்பதால் நீங்கள் சொல்வது சரிதான் !

30 comments:

 1. 01. சமையல்கலை வல்லுனர்தான்
  02. இதுவும் சரியாகத்தான் இருக்கு
  03. இப்போ என்ன வயசு ?
  04. உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த ஜென்மத்தில் கூட வாய்ப்பில்லை :)
   நரக மகன்னு சொன்னால் இன்னும் சரியாயிருக்கும்:)
   யாருக்கு காதலிக்கா ,கவிஞருக்கா :)
   கோப்பு காணாமல் போகும் ,எரிந்து போகும் ,காரணம் ஊழல்தான் :)

   Delete
 2. Replies
  1. மூணாறு காதலியைப் பார்த்ததுண்டா ,ஜி :)

   Delete

 3. கோப்புக்கள் காணாமல் போனால் தானே
  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும்
  "சான்றழிப்பு!"

  ReplyDelete
  Replies
  1. கோப்பு தானாக எப்படி போகும் ,அதுக்கென்ன காலாயிருக்கு :)

   Delete
 4. முட்டைத் தோசை போடச்சொன்னா... ? சரியான கூமுட்டையா இருப்பாங்க போல இருக்கே! உன் புதுப்பெண்டாட்டி
  ‘புதிய வார்ப்பு’ -ன்னு நிருபிச்சுட்டாங்க...! ஒன்னய வருத்தெடுக்கப் போறாங்க...!


  எப்படி பேர் வச்சா என்ன? ‘தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
  முந்தி யிருப்பச் செயல்.’ மேயர்-துண்ணு முடிவு பண்ணியாச்சு...! நல்லா பிரிச்சு மேயுங்க சாமியோ...!

  மூனாறும் நிறையாத பருவ மங்கை... எ தங்கைன்னு சொல்லுங்க...! சரியான வயசுதான்... கல்யாணம் செஞ்சாலும் உள்ள புடுச்சு போடமுடியாது... பொண்ணு மேஜர் ஆயிடுச்சில்ல...!
  “சொன்னா நம்ப மாட்டா... அது ஈராறு முடியதுக்குள்ளவே மேஜர் ஆயிடுச்சாம்...!”


  இதெல்லாம் ‘கோப்பியத்தில’ போட்டுக் காண்பிக்க வேண்டியதுதானே...! இனிமேல் யாரும் ‘பைல்’ நகரமாட்டிக்கிது... பைல்ஸ் மூவ் ஆகலைண்ணு கம்ப்ளைண்டு கொடுக்க மாட்டாங்கல்ல...கோப்பு காட்சியா... இருந்தாலும் பரவாயில்லை...! போடுங்க...!

  த.ம. 1
  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் ,சட்டியில் வறுக்கப் போறாங்களா :)

   மேயர் ,நல்ல விளக்கம் :)

   ஈராறு ,மூவாறு கணக்கு டாலி ஆகுதே :)

   பைல் நகரவும் ,காணாமல் போகவும் செய்வது பைசாதானே :)

   Delete
 5. Replies
  1. மூணாறு என்றாலே மனதிலே குளுமை :)

   Delete
 6. Replies
  1. ஆம்லேட் எப்படி ருசியா இருந்ததா :)

   Delete
 7. ஆமா நல்ல கேள்வி தானே,,,,,,,,,
  அனைத்தும் அருமை,

  ReplyDelete
  Replies
  1. பல நேரங்களில் நல்ல கேள்விகளுக்கு பதில் கிடைக்காதே :)

   Delete
 8. துணை மேயரைத் துணைத்தந்தை என்று அழைக்கலாமே படத்தில் இருக்கும் ஆம்லெட் எதில் போட்டது. அதன் மேல் கருப்பாய் பச்சையாய் என்ன.? ஒதுக்கீட்டுக் கோப்புகள் காணாமல் போய் விட்டதா.?

  ReplyDelete
  Replies
  1. தந்தை ஒருவன்தானே இருக்கமுடியும் :)
   ஆம்லெட்டை சாப்பிட்டுப் பாருங்க ,தெரியும் :)
   அதே உங்களுக்குத் தெரியாதா :)

   Delete
 9. முட்டைத் தோசை என்றதும் ஒரு பாடல்தான் நினைவுக்கு வருது பாடல் மட்டுமல்ல....காட்சியும் ஹஹஹஹ்

  மூணாறு ஹஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. தொப்புளில் ஆம்லேட் போட்டது தெரியும் ,முட்டைத் தோசையுமா :)

   உங்களுக்கு பக்கம்தானே மூணாறு:)

   Delete
 10. அந்த மூணாறு வயது எனக்கு தெரிந்து விட்டது நண்பரே...3x6=18 தானே......????

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் ,நீங்க பாஸாயிட்டீங்க :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தேன்! :)

  ReplyDelete
  Replies
  1. நீங்க டெல்லியில் இருப்பதால் கேட்கிறேன் ,காணாமல் போன கோப்புகளை பார்த்தீர்களா :)

   Delete
 12. கொண்ணு புடுவன் இப்புடி எல்லாம் யோசிக்கக் கூடாது :))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஆம்பளே ,ஆம்ளேட் சாப்பிட நினைச்சது தப்பாம்மா :)

   Delete
 13. ஹா..ஹா..

  ஏன், நகரச் சித்தப்பான்னு சொல்லலாமே...

  சிம்பிள் மேத்ஸ்!

  .அதானே.. இதென்ன பிரமாதம்!

  ReplyDelete
  Replies
  1. நகரச் சித்தப்பான்னு சொல்லிப் பார்த்தால் ,ஏனோ தகர டப்பான்னு சொல்லத் தோணுது :)

   சிலருக்கு இதுகூட புரிஞ்சிக்க நேரமாகுதே :)

   விட்டால் இவர்கள் தாஜ் மகாலைக் கூட காணோம் என்பார்கள் :)

   Delete
 14. அருமை. முட்டை தோசை மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முட்டைத் தோசையின் அருமை ,அதை சாப்பிடாதவர்களுக்கு தெரியாது :)

   Delete
 15. சிரித்தேன்
  நகைப்பணி தொடரட்டும்
  அப்புறம்
  தம +
  வலை வடிமைப்பு மாற்றம் பெற்றால் ஏற்றம் பெறலாமே என்பது என்னுடைய சிறிய வேண்டுகோள்
  லோட் ஆக நீண்ட நேரம் ஆகிறது ...

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கு மிகவும் நன்றி !
   இரண்டு கேட்ஜெட்களை எடுத்து விட்டேன் ,இனி சரியாக உள்ளதா என்பதை சொன்னால் நல்லது :)

   Delete