31 October 2015

கனவுக் கன்னி தெரிவாளா :)

 கூகுளில் தேடச் சொன்ன கூமுட்டை :)

                           ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''

              '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட பொண்ணு ,எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''


கனவுக் கன்னி தெரிவாளா :)

               ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
               ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
              ''ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு:)

                 

             ''குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா 

சொல்றாங்க ,அதனாலே ....''

                     
             ''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
                  
            ''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''

                                                                                                                

                                

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !

அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !


மலை முழுங்கி அவர்தானா ?
             ''நீண்ட  நாளுக்கு  பிறகு இப்போதான் ஊருக்கு வர்றேன் ,யானை மலை ஸ்டாப்பிலே இறக்கி விடச் சொன்னா ,கண்மாய்க் கரையில் இறக்கி விடுறீயே ,நியாயமா கண்டக்டர் ?''
              ''உங்க நியாயத்தை அங்கிருந்த மலையை  உடைச்ச குவாரி காண்ட்ராக்டர்கிட்டே போய்க் கேளுங்க  !''

30 October 2015

மனைவி சொல் எல்லாமே காதில் விழுமா :)

                   

                          ''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ  வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது என்  காதுலே விழலே !''
             ''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''


திறமைக்கேற்ற பரிசு இது !
         
            ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச  கொள்ளைக்காரனை 
 கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
           
           ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
 குண்டு மனைவியை  இப்படியா கிண்டல் பண்றது ?
            ''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம்  என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
           ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

இது காதல் தோல்வி தற்கொலை அல்ல !

 செய்தி தாளில் சமீபத்தில் ஒரு தற்கொலை செய்தி... 
விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத்தோன்றியது!
புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம்போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறியஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லது என தோன்றுகிறது !

என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்!

         ''ஜெயிலுக்குப்போன  தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''          
             
              ''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''

29 October 2015

இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் வரவே வராது :)

 மாமூலை வீட்டிலே வாங்குவாரோ :)           

                       ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
                  ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''


இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் வரவே வராது !

            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
               ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''


I T வேலை என்பதும் இப்படித்தானா ?

             ''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
                   ''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார் நெனைப்பு சரி ?

நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த  அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !

அதுக்கு இப்படியும் அர்த்தமா?

                   ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
                        ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''

28 October 2015

பெண்களின் லெக்கின்ஸ் உடைக்கு 'அது'தான் முன்னோடியோ :)

   

                ''என்னங்க ,வெள்ளை நிற லெக்கின்ஸ் டிரஸ்ஸை நான் போட்டுக்கவே கூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''


                  ''ஜெகன் மோகினி படத்திலே வர்ற பேய் ஞாபகம் வருதே !'' 


ஃபேஷன் டீவியை இன்னுமா மறக்கலே ?

                  ''குருவே ,அந்த சிஷ்யன்   என்ன கேட்டார் ,ஆசிரமத்தில் இருந்து உடனே 'கல்தா 'கொடுத்து விட்டீர்களே ?''
             ''ஞானக் கண்ணால் ஃபேஷன் டீவியைப் பார்க்க அருள் புரியுங்கள் என்று கேட்கிறானே !''

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் ?

               ''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
                

            ''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

பேஸ் புக் வடிவில் வந்த எமன் !

எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...
ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !


ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

          ''கர்நாடகாவிலே  எல்லாமே 'ஹள்ளி'ன்னுதான் முடியுமோ ?''

            ''நம்ம ஊரு அல்லி ராணி கூட அங்கே போனா ஹள்ளி  ராணிதான்  !''

27 October 2015

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல :)

 இலவசமா கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க :)                 
                    ''டிவி வாங்கினா கவிதைப் புத்தகம் இலவசம்னு போட்டீங்களே ,வியாபாரம் அமோகம்தானா ?''
             ''அட நீங்க ஒண்ணு,புத்தகத்தை நீங்களே வைச்சுகிட்டு  , டிவி  விலையில் தள்ளுபடி கொடுங்கன்னு கேட்கிறாங்களே!''

இனியும் தொண்டர்களை ஏமாற்ற முடியாதோ ?             
           ''ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறைன்னு தொண்டர்களிடம் கேட்டது தப்பாப் போச்சா ,ஏன் தலைவா ?''
             ''ஆளும் கட்சி முதல்வரின் காலை நக்கிட்டு இருந்தா ஆள முடியாது ,நீங்க வேணா வாழ முடியும்னு திருப்பித் தாக்குறாங்களே !''

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா ?

               ''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
               

         ''அப்படின்னா மூக்கிலே தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''
ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !

(குறிப்பு ,இது ஒரு காங்கிரஸ் காலத்து பதிவு )143ன்னா I love you ஆச்சே !
               ''எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
              ''காதலர்களுக்கு பிடித்த '143'வது காந்தி ஜெயந்தி  ஆச்சே இது !''


(குறிப்பு ,இது வெளிவந்தது சென்ற ஆண்டு )

26 October 2015

பின்னழகில் மோகினி ,முன்னழகில்... :)


                 '' என்னை பின்னாலே பார்த்தவங்க எத்தனை பேர் முன்னாடியும் வந்து பார்க்கிறாங்கன்னு உனக்கு  தெரியுமாடீ ?''
                 ''பார்த்துட்டு 'ப்பூ ,இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !''


பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?

                 ''என்னங்க,நம்ம பையன் வாந்தி எடுக்கிறான்னு  சொல்றேன் ...கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கீங்களே ,ஏன் ?''
           ''பொண்ணு வாந்தி எடுத்தாதான் ஏதோ சிக்கல்னு அர்த்தம் ,அதான் !''மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் !

               ''என்ன முத்தம்மா .சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டுதான்  பக்கத்திலே  வரணும்னு அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                 ''சர்க்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு ?

முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...
இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...

கெமிஸ்ட்ரி அப்டேட் ஆகலையே !
              "கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையா ,ஏண்டி ?'' 
                 "கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

25 October 2015

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே!:)

 தெரிந்ததை  பையன் சொன்னா தப்பா :)           

              ''என் பையன் சரியான சாப்பாட்டு ராமனா வருவான்னு  ஏன் சொல்றீங்க ?''

                       '' ஆனாவுக்கு  அப்பம் ,ஆவன்னாவுக்கு  ஆப்பம் ,ஈனாவுக்கு  இடியாப்பம்னு சொல்றானே !''

வம்பு பிடிச்ச ஆட்டோ டிரைவர் !                 
              '' ஆஸ்பத்திரி  வாசலில் இறக்கி விட்டுட்டு காசு  கேட்கிறே,பிறகேன்  'பிரசவத்துக்கு இலவசம்'னு ஆட்டோவிலே எழுதியிருக்கே?''
               ''ஆட்டோவில் பிரசவமானால்தான் இலவசம் !''


சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் ?

             ''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
              ''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிக்கிறீங்களா ?''

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே! 

கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?
ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

வரக்கூடாத அந்நியன்!

          "புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலீடா ?''

       " ஆமா ,ஒரு அந்நியன் நடமாட்டம் அந்த வீட்டிலே அடிக்கடிதெரியுதே ! "

24 October 2015

கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

காவல் துறையில்  என்கவுண்டர் டீம் உண்டா :)
                  ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
             ''  இவர் சுடுவதற்குள் ரவுடிகள்  தப்பிச்சி ஓடி விடுகிறார்களாம் !''

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கே !
           ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
           ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''


கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யபடாமல்  ,தெருக்களில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...
அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
                       இப்படி வாசகங்களை கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
            இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை எதிர்ப்பார்க்கலாம் !

ஏன் படம் தயாரிக்கக் கூடாதா?

" மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "

" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

23 October 2015

சி னி மா சீர்படுத்தலே ,சீரழிக்குது :)

பஸ்ஸிலே சேட்டை ,தர்ம அடி கிடைக்கும்தானே :)                 

       '' கை எலும்பு முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''

                ''   கை சேட்டை பண்ணும்போது ,உங்க மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

கொடுமைகொடுமைன்னுகோவிலுக்குப் போனா :)               

                     ''என் வீட்டிலே கொள்ளை போயிருக்கு ,FIR போட ஏன் சார்  தாமதம் பண்றீங்க ?''
                 ''ஸ்டேசன்லே நாலு துப்பாக்கி களவு போயிருக்கு ,அதை விசாரிச்சுகிட்டு இருக்கோம் !''

நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா ?

'                'நம்ம ஆறுமுகம் ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்துட்டான்னு ,அதே வண்டியிலேயே பாடியை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாமே ?''
             ''அட பரவாயில்லையே ,கெட்டதிலும் நல்லது நடந்துருக்கே !''

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது :)

சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...
அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைக்காவியமாய்த்தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமாவை 
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

வரக்கூடாத சந்தேகம்:)

           " மனைவிக்கு எத்தனை சுழி'ன'  போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சு ! "
" ஏன் ? "
         " முதல் மனைவியா,  'இரண்டாவது மனைவியான்னு கேட்கிறாரே  !''

22 October 2015

'கணக்கு' பண்ணும் வாத்தியார் :)

கத்திக்கும்  உண்டுதானே ஆயுத பூஜை :)              

               ''நேற்று  ,போலீஸ் ஸ்டேஷன்லே ஆயுத பூஜை தடபுடலா இருந்ததே ,எப்படி ?''
               ''கபாலிதான்  ஸ்பான்சராம் ,துப்பாக்கி ,லத்திக்கு நடுவிலே கத்தியை வைத்து பூஜை செய்தானாம் !''
 பிறப்பு மட்டுமா அப்நார்மல் ?         
          '' 
செரியன் சார் ,சிசேரியன்லே  பிறந்த உங்க  பையனுக்கு 
என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
          '' சிசேரியன்னுதான் !''


'கணக்கு 'பண்ணும் வாத்தியார் !

             ''படியிலே தாவி தாவி,மாடிக்கு ஏறி வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
             ''ஏனாம் ?''
            ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

நாம் எதில் மயங்குகிறோம் ?

நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...

நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...
அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அவர் 1846ல் மயக்க மருந்தை கண்டுபிடித்து மயக்கினார் !
இன்றைக்கு  மருத்துவமனை பில்லை பார்த்தாலே நம்மில்  பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது !

கைது ஆனதன் காரணம்!

               ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!
              ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''