12 October 2015

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...:)

புருஷன் நளன்னா  மனைவிக்கு ஏன் பிடிக்காது :)

           ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
         ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

ஓசியில் திங்க அலையுறாங்களோ  ?

         ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னை ? 

           ''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
             ''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்தது இந்த மருத்துவமனைன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?

நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதைப்  போல  ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !

இப்படியும் ஒரு பிள்ளை !

                    "மனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய  ஷாஜகானை , அவர் மகன் சிறையில்  அடைத்து வைத்து இருந்தாராம்  ..இதுலே  இருந்து என்ன தெரியுது ?"
               "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 

20 comments:

 1. வணக்கம்
  ஜி
  வார்த்தைகளின் விளையாட்டு... இரசித்தேன் ஜி த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உண்மையே ,பதிவு என்பது வார்த்தைகளின் விளையாட்டுதான் :)

   Delete
 2. என்றைக்கும் இதே நிலைதானா...? இந்த நிலை என்று மாறும்...? ஆண்பாவம் பொல்லாதது...!


  உண்மையச் சொல்ல விட மாட்டேங்கிறியே...!


  மிஸ் சென்னைன்னா... யாருக்குத்தான் மிஸ் பண்ண மனசு வரும்...? ‘டாக்டர் காட்டுல மழை’ இந்தப் படத்துக்கு பேரா வச்சிடலாமா...? ஓ... ஆஸ்பத்திரியில்ல...!


  ‘ஓரினச் சேர்க்கையால்-

  மனிதப்பாலின வேரில் வெந்நீர்விட்டு

  மனிதம் பாழ்பட்டுப் போனது...

  காந்தம்கூட ஒரே துருவம் ஒட்டாதபோது

  இதிலே ஏகாந்தம் ஏது?’ -ன்னு நா சொன்னா யாரு கேக்கிறாங்க...!


  ஊதாரிப் பிள்ளையாயிருந்தாக்கூட பரவாயில்லை... ஊதாரி அப்பன்னா எந்தப் பிள்ளைதான் அதை தாங்கிக்க முடியும்...?

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. பெண் பாவம் பொல்லாதது என்று அவர்கள் சொல்கிறார்கள் ,எது உண்மை :)

   உண்மையை எத்தனை மறைக்க முடியும் :)

   வீக்னசைப் புரிந்து கொண்டு தொழில் செய்யும் டாக்டராச்சே:)

   ஏன் கேட்க மாட்டேங்கிறீங்க என்று அவர்களிடமே கேட்டுறலாமா:)

   ஊதாரி அப்பனை மறக்கத்தான் ,பையன் ஊதா கலரு ரிப்பன்னு பாடிக்கிட்டு அலையுறானே :)

   Delete
 3. Replies
  1. சீனாவிலும் இந்த பிரச்சினைதான் போலிருக்கா :)

   Delete
 4. இந்த கேவலத்தை, அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?

  என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா?
  அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

  அனைவரும்

  க்ளிக் செய்து >>> “இங்கே" <<<< படித்து சிந்தியுங்கள்.

  .

  ReplyDelete
  Replies
  1. எங்கே போகிறது ஹிந்து மதம் என்று நீங்களும் தலைப்பு வைக்கலாம் :)

   Delete
 5. நளபாகம் சாப்பிடக் ஒடுத்து வைத்தவள்! அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தமயந்தி ,குழந்தைகளைக் காட்டிற்கு கூட்டிச் சென்ற நளன் ,என்ன ஆக்கிப் போட்டிருப்பார் என்று ஒரு குறிப்பும் இல்லையே :)

   Delete
 6. நளபாகம் போர் ப்ரதர்! அப்போ வெறும் காய்கறிதான். அதைத் தவிர உப்பு கொஞ்சம் காரம் சேர்த்திருப்பாங்க! இப்போதான் நல்லாயிருக்கும்!

  நல்ல ஐடியாவா இருக்கே... இரு கோடுகள் தத்துவம்.

  அப்போ வர்றவங்க எல்லாம் காதல் நோயாளிகள்னு சொல்லுங்க!

  அங்க 'அது' எல்லாம் சகஜம் இல்ல பாஸ்? அதான்!

  காசை வேஸ்ட் செய்யக் கூடாதுன்னு தோணலையா?
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,அதை தமயந்தியே சாப்பிடட்டும் :)

   பொண்ணு வீட்டுக் காரங்களுக்குப் பிடிக்காத தத்துவம் :)

   இந்த ஜூரத்துக்கு மருந்து பலன் தராதே :)

   என்ன கருமம்டா இது ,சகஜமா :)

   வேஸ்ட் என்று பிள்ளைக்கு பட்டாலும் 'ஏழுலே ஒண்ணாகி ' அரசுக்கு வருமானம் தருதே :)

   Delete
 7. 01. உண்மைதான்.
  02. நல்ல டெக்னிக்கல் ஜி
  03. விளம்பரமே வியாபாரமாகி விட்டது உண்மைஜான் ஜி
  04. பஞ்சும், பஞ்சுமா ?
  04. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க ஜி.. நன்றி

  ReplyDelete
  Replies
  1. இன்று ,' செப் ' என்ற பெயரில் ஏகப்பட்ட நளன்கள்:)
   பொண்ணும் சரியில்லே ,காரமும் சரியில்லேன்னுகூட சொல்வார்களே :)
   எதிர்த்த திசையில் ,மிஸ் இந்தியா இங்கே நர்ஸ் என்று விளம்பரம் வைக்கப் பட்டு இருப்பதாக கேள்வி :)
   பற்றிக்கவே வாய்ப்பில்லையே :)
   இல்லேன்னா ,ஜெயில்லே இருக்கணுமே :)

   Delete
 8. Replies
  1. பதிவர் திருவிழாவில் உங்களால் கலந்து கொள்ள முடியாதது ,சந்திக்க நினைத்த எனக்கும் வருத்தம் அளிக்கிறது !

   Delete
 9. நகைச்சுவையைத் தலைகீழ்ப்பாடமாய்ப் படித்துவிட்ட தங்களைச் சந்திக்க முடியாதது எனக்கும் வருத்தமே!‘

  அனைத்தும் ரசனை பகவானே!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விருது தங்களை வந்து சேர்ந்திருக்கும் ,மற்றுமொரு நிகழ்வில் சந்திக்கும் வாய்ப்பு வருமென்று என நம்புகிறேன் :)

   Delete
 10. தங்களை சேரில் கண்டதில் மட்டற்ற உவகை!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பாராட்டை நேரில் பெற்றது,என் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்று .மிக்க நன்றி அய்யா :)

   Delete