14 October 2015

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

நாய்க்குக் கூட தெரிஞ்சுருக்கு :)
      ‘’நம்ம தலைவரோட நாய்க்கு விசுவாசம் அதிகமா ,எப்படி ?’’
     ''தலைவரோட 'சின்ன வீடு' வந்தா மட்டும் வாலாட்டுதே !''
இப்படியும் அலர்ஜி ஆகுமா ?
                 ''அலர்ஜி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பத்திக்கிட்டு 
வருதா,ஏன் ?''
            ''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

            ''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
                   ''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைதானே நீ 
ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''

இந்திய பல்கலைக் கழகங்கள் TOP 10ல் வரும் ,எதில் ?

உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !


நோகடிக்கும் இரண்டு!

        ''வர வேண்டியது வர மாட்டேங்குது ,வரக் கூடாதது  வருது!''

         ''என்ன  சொல்றிங்க?''

       ''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு  காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''

24 comments:

 1. சக்தி வாய்ந்த ஆயுதம்! சரி தான்!

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. யாராலும் இதை மறுக்க முடியுமா :)

   Delete
 2. நாய்க்குகூட சின்னவிடுதான் பிடிக்கிது... எலும்புத் துண்ட...தொடை பீஸை... அவுங்கதானே அப்பப்ப காட்டுறாங்க...! தலைவரு இங்க வாலாட்ட முடியல... அதான் நாய் வால ஆட்டுது...!


  ‘அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
  பலர்நாண நீத்தக் கடை’ அலர் அறிவுறுத்தல் அதிகாரமே அய்யன் வைத்ததுதானே அல்ர் ’ஜி’!


  மொதல்லயே சொல்லக்கூடாதா... கிளிசரின் பாட்டில்ல தீந்து போச்சே...!


  மொதல்ல இருந்து யாரு பாக்கச் சொன்னது...? கடைசியில இருந்து பாருங்க... இப்ப பத்துக்குள்ள வருதில்ல... அப்புறமென்ன...?


  மிகை மின்கிறதுனால... ‘வாம்மா மின்னல்‘ மாதரி வந்தவுடனே போயிடுச்சு... இனி எப்ப வருமுன்னு பாத்துக்கிட்டே இருங்க...! ‘டெங்கு’ தன்னோட கொசுக்கூட்டத்தோட ‘டங்கு...டங்கு‘ன்னு ஆடிட்டே வருது...!

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. நாய் வாலாட்டும் ரகசியம் புரிந்தது :)

   அய்யன் சொல்லாததும் எதுவும் உண்டா :)

   இது நீலிக் கண்ணீர் கிளிசரின் தேவையில்லே :)

   இதுவும் சரிதான் :)

   காத்துக் கிடப்பதில் சுகமில்லையே :)

   Delete
 3. ஹா...ஹா....ஹா...

  அலற வைப்பதால் மரியாதையோ!

  ஹா...ஹா...ஹா

  அதானே..

  அதானே...!!

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக் கொடுத்தும் அலர்ஜி விட மாட்டேங்குதே :)

   Delete
 4. யார் முக்கியம் என்பது அந்த நாய்க்கும் தெரிந்திருக்கிறது.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. சும்மாவா சொன்னாங்க, நாய்க்கு விசுவாசம் அதிகம்னு :)

   Delete
 5. Replies
  1. நாய்க்கும் தெரியுதே சின்ன வீட்டின் பெருமை :)

   Delete
 6. பெரிய வீடு வந்தால் குரைக்குமோ? அலரையா இல்லையே ஜிதானே ஜி
  அறிவாயுதம் அல்ல அழும் ஆயுதம்....முக்கிய காரணியை கணக்கிட்டால் நம்மை மிஞ்ச எதுவும் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. கடிக்காம விடாது :)
   எனக்கே போட்டியா :)
   ஆனால் ,தரும் வலி அதிகம் :)
   உங்க சொல் ,நூத்துலே ஒண்ணு:)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  நாய் சரியாத்தான் வாலை ஆட்டிருக்கு...
  கண்ணீர்... வித்தியாசமான கற்பனை..ஜி மற்றவைகளை இரசித்தேன் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மூத்த சம்சாரம் கோபப்பட்டு வாலை வெட்டி விட்டார்களாமே :)

   Delete
 8. சக்தி வாய்ந்த ஆயுதம் ரசித்தேன்! நாய் கூட பாரபட்சம் காட்டுதே!

  ReplyDelete
  Replies
  1. பயங்கரமான ஆயுதம் எதுன்னு கேட்ட NSK நினைவுக்கு வந்தாரா :)
   கடவுளுக்கே அடுக்காதே இந்த பாரபட்சம் :)

   Delete
 9. 01. அதுக்கும் தெரியுதே....
  02. இனி அவர் என்று அழைக்கலாம் ஜி
  03. கண்ணீராயுதம்
  04. பெருமைப்படுவோம் ஜி
  05. கரண்டா......ஆ........

  ReplyDelete
  Replies
  1. அதென்ன ,நடுவிலே ஒரு ம்:)
   அலர் என்றால் பூவின் மலர்ந்த நிலையாச்சே :)
   எப்போதும் தயார் :)
   இதுக்கு மட்டுமில்லே :)
   இல்லாத நேரத்திலும் 'ஷாக் 'கா :)

   Delete
 10. உலக்த்திலேயே பயங்கரமான ஆயுதம் அதுதானே!

  ReplyDelete
  Replies
  1. NSK ஏன் அதை பாடாமல் போனாரோ :)

   Delete
 11. இந்த சக்தி வா்ய்நத ஆயுதம் ..ஆட்சியளர்க்களின் இருதயத்தை பாதிக்கவில்லையே.....

  ReplyDelete
  Replies
  1. இதயம் இருந்தாலல்லவா இது அறுக்கும் :)

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. இரு முறை ஒரே கருத்து என்பதால் நீக்கப் பட்டுள்ளது ,வேறேதும் காரணமில்லை :)

   Delete