16 October 2015

மனைவி ,சயனைட் எது பெட்டர் :)

இது என் சொந்த அனுபவம் இல்லை :)
            ''வலைப் பதிவரா இருந்துகிட்டு ,பையன்கிட்டே  ஒரு வார்த்தையை சொல்ல முடியலையா ,ஏன் ?''
             ''முதல் ரேங்க் வரணும்டா என்று சொன்னால் .நீங்க முதல்லே தமிழ்மணத்தில் வந்து காட்டுங்க என்று சொல்றானே !''


ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாது !


                                            '' காஸ் சிலிண்டர்  போடுகிறவரோட  பெண்டாட்டிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்னு ஏன் சொல்றே ?''

                    ''பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்றாளே ''!

மனைவி ,சயனைட் எது பெட்டர்  ?

                         ''என்னங்க ,சயனைட்னா என்னான்னு கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான் ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
                  ''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''

NRI க்கள் அந்நிய நாட்டில் சுதந்திர பிரஜைகள் !

அமெரிக்க நரி நாட்டாண்மை செய்தே கிடைக்கு ரெண்டு ஆடுகளை தின்று கொழுத்துப் போய் திரிவது கருத்துக்கணிப்பில் நிரூபணம் ஆகியுள்ளது ...
இருபது நாட்டவர்களின் அறிவுத்திறனை ஆய்வு செய்ததில்  கடைசி  இடம் அமெரிக்கர்களுக்குத் தானாம் !
முதலிடம் வகிப்பவர்கள்  ஜப்பானியர்களாம்...
ஹிரோசிமா ,நாகசாகியில் அணுகுண்டு விழுந்தாலும் அவர்கள் எழுந்து நிற்கிறார்கள் !
குட்டையாய் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் !
வெளிநாட்டுக்கு அறிவுத் திறனை விற்றுக் காசாக்கும் அடிமைகள் வரிசையில் நமக்கு முதல் இடம் இருக்கக் கூடும் !


35 comments:

 1. முதல் ரேங்க் எடுக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு தெரியுதில்ல...! சும்மா பேசாதிங்க...! எப்பவும் தரம்...தரம்ன்னு அலையாதிங்க... குணத்த பாருங்க...அம்மாவெல்லாம் அப்படித்தானே பார்க்கிறாங்க...! அம்மான்னா... அம்மாதான்...ஏம்மா...?


  நல்லவேளை பலபேர் அடுப்புல எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்லாமப் போனாங்களே...! சந்தோசப்படுங்க...!


  இப்படிச் சொல்லக்கூடாதா...? ‘அரசன் சயனைடு மாதரி... அன்றே கொல்லும்... நீ தெய்வம் மாதரி... நின்று கொல்வாய்...!’ தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே...!


  இந்த செம்மறி ஆடுகளையெல்லாம் கல்விமேய்ச்சலில் வளர்த்து நன்றாக வைத்துள்ளோம்...அமெரிக்க நரிகள் நாட்டாண்மைக்கு கிடைக்கு ரெண்டென்ன... எத்தனை ஆடுகளை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்(ல்)லலாம்... இங்கு எல்லாமே அடிமை ஆடுகள்தான்... விற்கப்படும்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. அதானே ,அப்பாவால் முடியாதது பையனால் எப்படி முடியும் :)

   அப்படி சொன்னா ,புருஷன் கம்பி என்ன வேண்டி வருமே :)

   விசுவாசம் புல்லரிக்க வைக்குதே :)

   படிக்காதவனை மட்டும் கொத்தடிமை என்போம் :)

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. தந்தை மகர்காற்றும் உதவி...

  வயிறு எரியவும்தான்! ஒன்று 25 நாள்தான் வருது, இரண்டாவது சிலிண்டர் விலைக்குமெல் 50 அல்லது 60 ரூபாய்ப் பிடுங்குவதால்.

  ச்சே... பாவம்ங்க...

  ஆம்... கூடும்!

  தம இன்னும் சப்மிட் ஆகவில்லையே..

  ReplyDelete
  Replies
  1. ஆக ,ரெண்டு பேரும் முதல் இடம் பிடிக்கப் போறதில்லே :)

   எல்லாம் டெலிவரி செய்பவரின் கைவண்ணமா இருக்குமோ :)

   மெல்லக் கொன்றாலும் பாவம்தான் :)

   திறமை மிகுந்த அடிமைகள் :)

   Delete
 4. Replies
  1. காத்திருந்து உங்கள் ஜனநாயக கடமையைச் செய்தமைக்கு நன்றி :)

   Delete
 5. வணக்கம்
  ஜி
  உண்மைதான் தமிழ் மணத்தில் புகுந்து வாக்களிச்சால்தான் வருமுடியும்.
  சும்மா எரியல ஜி.. பணந்தான் எரியுது.. ஜீ.
  மற்றவைகளை இரசித்தேன் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. காசா ,பணமா வாக்களிப்போமே :)

   அந்தம்மாவுக்கு அது புரியலையே :)

   Delete
 6. மகனது வார்த்தையிலும் நியாயம் இருக்கிறது நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அதான் ,முடியாதுன்னு மறைமுகமா சொல்றானா :)

   Delete
 7. மகன் கேட்டது நல்ல கேள்வி!

  ReplyDelete
  Replies
  1. கிழவிக் கூட கேள்வி கேட்பா :)

   Delete
 8. 1*சும்மானாச்சுக்கும் பொய் சொல்லாதிங்க :)
  2*வாய் எவ்வளவு நீளம், மிமீ செ மீ கி மீ அளவு ரெம்ப முக்கியம் அமைச்சரே
  3*ஆயுள் புல்லா அணுஅணுவா கொல்லுவாங்களோ,? :)
  4*இருக்கும் இருக்கலாம் இருக்கவேண்டும் :)

  ReplyDelete
  Replies
  1. நானாவது பொய் சொல்றதாவது :)
   சின்ன நாக்குதான் பெரிய பொய்யை சொல்லுதே :)
   ஆயுள்தண்டனை என்பது இதுதானோ :)
   இருக்கணும்னு அவசியமில்லை :)

   முதல் வருகைக்கு நன்றி கரூர் பூபகீதன் :)
   புதுகைக்கு வந்திருந்தும் ,என்னிடம் வந்து ஏன் அறிமுகப்படுத்திக் கொள்ளலே ?

   Delete
 9. 01. நியாமாகத்தான் இருக்கு..
  02. அந்தக்காலத்துல தீப்பெட்டி தயாரிக்கிறவன் சொல்லியிருப்பானோ..
  03. மனைவியும் சயனைட்டும் ஒன்னா..... ஆ...
  04. ஆராய்ச்சி ஸூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நியாயம்தான் ,ஆனால் முதல் இடம் அவ்வளவு சுலபமா இல்லையே :)
   சொல்லியிருந்தாலும் நியாயம்தானே :)
   ஆ ...சொல்லக்கூட நேரம் இருக்காதே :)
   அபுதாபியில் இருக்கும் நீங்கள் சொவதால் அது உண்மைதான் :)

   Delete
 10. சைலன்டா இருக்கும் பெண்களும் சயனைடா மாறுவது திருமணத்திற்கு பிறகு தானே அதற்கு காரணம் யார்?

  ReplyDelete
  Replies
  1. இந்த கேள்விக்கு, என் சார்பில் வக்கீல் செந்தில் குமார்ஜி சொல்லி இருப்பதை கவனியுங்க சகோ :)

   Delete
 11. இதெல்லாம் சிரிப்புக்குதான் யாரும் சிரியசாக வேண்டாம் ..... அருமை

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் செந்தில் குமார்ஜி ,சீரியசான பதிவுக்குத்தான் உங்க தளமிருக்கே:)

   Delete
 12. சிலிண்டர்காரர் சம்சாரத்துக்கு ரொம்பத்தான் வாய்க்கொழுப்பு! ரேங்க் எல்லாம் முக்கியமல்ல என்று தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. அவர் வீட்டில் அடுப்பெரிய யார் காரணமோ :)
   எப்படியோ முன்னுக்கு வந்தால் சரிதான் :)

   Delete
 13. ஆஹா.... அருமைதான் அனைத்தும்...

  ReplyDelete
 14. மனைவியே பெட்டர்னு தோனுது..தலீவரே.......

  ReplyDelete
  Replies
  1. தூக்குத் தண்டனை எதிர்ப்பாளராச்சே நீங்க :)

   Delete
 15. மன்னிக்கனும் ஜி! நான் வீழாவுக்கு வரும் போது இன்னார் இன்னாரை சந்திக்கவேண்டும் என்று நி கொ இ
  ஆனால் விழாவின் பிரமாண்டத்தை பார்த்து மிரண்டதில் சிலரை மறந்துவிட்டேன! ஆயிரம்வாட்டி மன்னிச்சுடுங்க!!!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வந்த தகவல் அப்போது தெரியவில்லை ,பதிவுகளைப் பார்த்த போதுதான் தெரிந்தது ,இல்லைஎன்றால் நானே பேசியிருப்பேனே :)

   Delete
 16. சிரித்து வாழ வேண்டும்;பகவான் ஜி யின் பதிவைப் படிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பதிவைப் படித்து சிரிக்க முடியாது என்பதாலா :)

   Delete
 17. Replies
  1. துரைஜி,கில்லர்ஜி உடனான உங்கள் சந்திப்பு பதிவை ரசித்து படித்து ,தமிழ் மணத்தில் அரங்கேற்றி விட்டேன் :)

   Delete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. முருகன் ஜி ....
   சாரி ,உங்க விளம்பரத்துக்கு இங்கே இடமில்லை :)

   Delete