22 October 2015

'கணக்கு' பண்ணும் வாத்தியார் :)

கத்திக்கும்  உண்டுதானே ஆயுத பூஜை :)              

               ''நேற்று  ,போலீஸ் ஸ்டேஷன்லே ஆயுத பூஜை தடபுடலா இருந்ததே ,எப்படி ?''
               ''கபாலிதான்  ஸ்பான்சராம் ,துப்பாக்கி ,லத்திக்கு நடுவிலே கத்தியை வைத்து பூஜை செய்தானாம் !''
 பிறப்பு மட்டுமா அப்நார்மல் ?         
          '' 
செரியன் சார் ,சிசேரியன்லே  பிறந்த உங்க  பையனுக்கு 
என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
          '' சிசேரியன்னுதான் !''


'கணக்கு 'பண்ணும் வாத்தியார் !

             ''படியிலே தாவி தாவி,மாடிக்கு ஏறி வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
             ''ஏனாம் ?''
            ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

நாம் எதில் மயங்குகிறோம் ?

நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...

நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...
அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அவர் 1846ல் மயக்க மருந்தை கண்டுபிடித்து மயக்கினார் !
இன்றைக்கு  மருத்துவமனை பில்லை பார்த்தாலே நம்மில்  பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது !

கைது ஆனதன் காரணம்!

               ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!
              ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

16 comments:

 1. கணக்கு வாத்தியாரையும், கைது ஆனதன் காரணத்தையும் அதிகம் ரசித்தாலும், அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. போலீஸும் ,ஸ்டப் பை ஸ்டப்பா ஆக்சன் எடுத்து தலைவரைக் கைது பண்ணிட்டாங்க போலிருக்கே :)

   Delete
 2. ‘ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்’-ன்னு எழுத்த ஆயுதமா எடுத்த பாரதி ஆயுதபூஜைய மறந்திட்டாரே! ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதின்னு’ நாமக்கல்லார் பாடியது இந்த நடிகர் சங்கத் தேர்தலைப்பத்தியில்லையோ...? இதலெல்லாம் மறைச்சு வச்சுட்டாங்களோ...? ம்...ம்... பூஜை ஆரம்பமாகட்டும்!


  சீ...சேரியன்னு வக்காம இருந்தாச் சரி...! இவனுக்கு ‘சிசர்ஸ்’ ஆயுதம்தான் பிடிக்குமாம்... பூஜைக்கு கத்தரிக்கோல எடுத்து வையுங்க... ‘சியர்ஸ்’ எல்லாம் பூஜைக்கு அப்புறம்தான்... அவசரப்படாதிங்க...!


  ‘கணக்கு பாத்துக் காதல் வந்தது’-ன்னு இனிமே பாடமாட்டீல்ல...!


  மயக்கம் கலக்கம் மனதிலே குழப்பம் வாழ்க்கையில் நடுக்கம்... இத்தனைக்கும் ‘வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன்’-தான் காரணமா? இவரத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்...!


  சின்னவீடு போன் பண்ணினா ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்’ -ன்னு வருதே...! மாமியார் வீடுனாலே சிக்னல் கிடைக்காதில்ல...! எப்படியோ... இனி பெரிய வீட்டுக்க போகமாட்டார்ல்ல...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. பாரதி மறக்கவில்லை ,ஆயுதங்களை பூஜை செய்தால் மட்டும் போதாது ,'கூரோட' அவைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே காரியமாகும் என்று அவருக்குத் தெரியும் :)

   சேரியன் என்று வைத்துக் கொண்டால் என்ன தப்பு :)

   சியர்சுக்கு ஒரு சிசர் போடுங்க :)

   கணக்கு பார்த்து வந்தால் அது காதலே அல்ல :)

   கிரீன் மார்ட்டின் நல்லதுக்கு மட்டுமே கிரீன்கொடி காட்டியுள்ளார் :)

   மாமியார் வீட்டுக்கு கால் போகாதா ,யார் சொன்னது ?சிறைவாசிகளிடம் அடிக்கடி செல் பறிமுதல் ஆவது தெரிந்தது தானே :)

   Delete
 3. Replies
  1. கிரீன் மார்டன் கண்டுபிடிப்பு அருமைதானே :)

   Delete
 4. *கபாலி கத்தி சொல்லு :)
  *சரியான காரண இடுகுறி பெயர் :)
  *சயன்ஸ் வாத்தியார்னா? :)
  பில்லை பார்த்தும் மயக்கம் வராதவங்களுக்காக கண்டுபிடிச்சிருப்பாரா? :)
  *தலைமறையுமா? :)

  ReplyDelete
  Replies
  1. டவாலி தொப்பின்னா சொல்லமுடியும் :)
   நல்லாத்தானே இருக்கு :)
   தண்ணியை மில்லிக் கணக்கில் குடிக்கச் சொல்வாரோ :)
   ஏதோ ஒரு மயக்கம் நிச்சயம்தானே :)
   தலைமட்டும் மறையாதுதான் :)

   Delete
 5. Replies
  1. கபாலி கத்தி சூப்பர்தானே :)

   Delete
 6. Replies
  1. ஆயுத பூஜையில் அவசியம் வைக்கப் பட ஆயுதம் தானே இது :)

   Delete
 7. 01. இனம் இனத்தோடுதான்.. சேரும்...
  02. பொருத்தமாகத்தான் இருக்கு
  03. உள்ளதுதானே.. ஜி
  04. நல்ல தகவலுக்கு நன்றி
  05. கடைசி எல்லை அதுதானோ...

  ReplyDelete
  Replies
  1. தோடு காதோடுதான் சேரும் என்பதைப் போலவா :)
   செரியன் மகன் சி.சேரியன் என்பதும் பொருத்தம்தானே :)
   எது கணக்கு பண்ணுவதா :)
   இந்த தகவல் ,ஜோக்காளியிடம் இருந்தா என்று மயக்கம் வரலியா :)
   கழுதை தப்பினா குட்டிச் சுவர்தானே :)

   Delete
 8. அந்தப் படம் எதுக்கு?!

  கணக்கு வாத்தியாராச்சே,ஸ்டெப்புக்கெல்லாம் மார்க் கொடுத்தவரில்லையா?

  ReplyDelete
  Replies
  1. கபாலி பூஜைக்கு வைத்த கத்திகளின் கண்காட்சி இது :)

   மார்க் கொடுத்தவர் ,பிள்ளைக்கு இப்படி மாத்து கொடுக்கலாமா :)

   Delete