23 October 2015

சி னி மா சீர்படுத்தலே ,சீரழிக்குது :)

பஸ்ஸிலே சேட்டை ,தர்ம அடி கிடைக்கும்தானே :)                 

       '' கை எலும்பு முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''

                ''   கை சேட்டை பண்ணும்போது ,உங்க மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

கொடுமைகொடுமைன்னுகோவிலுக்குப் போனா :)               

                     ''என் வீட்டிலே கொள்ளை போயிருக்கு ,FIR போட ஏன் சார்  தாமதம் பண்றீங்க ?''
                 ''ஸ்டேசன்லே நாலு துப்பாக்கி களவு போயிருக்கு ,அதை விசாரிச்சுகிட்டு இருக்கோம் !''

நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா ?

'                'நம்ம ஆறுமுகம் ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்துட்டான்னு ,அதே வண்டியிலேயே பாடியை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாமே ?''
             ''அட பரவாயில்லையே ,கெட்டதிலும் நல்லது நடந்துருக்கே !''

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது :)

சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...
அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைக்காவியமாய்த்தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமாவை 
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

வரக்கூடாத சந்தேகம்:)

           " மனைவிக்கு எத்தனை சுழி'ன'  போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சு ! "
" ஏன் ? "
         " முதல் மனைவியா,  'இரண்டாவது மனைவியான்னு கேட்கிறாரே  !''

20 comments:

 1. நீங்க சேட்டுதான்... அதுக்காக இம்புட்டு சேட்டை பண்ணக்கூடாது... உங்களுக்கு மூளைகீழே இருக்கா...? பாக்க வேண்டாமா?


  ‘துப்பாக்கிய பாத்தீங்களா...?’
  ’விஜய் படத்தையா...?’
  ’விளையாடுறதுக்க இதுவா நேரம்... மொதல்ல F.I.R. போடனும்...’
  ‘நானும் அதையே சொல்றேன்... மொதல்ல F.I.R. போடுங்க...’
  ’உன்னோட பேரு... அட்ரஸ சொல்லு... ஒ மேலதான் சந்தேகமாக இருக்கு...!’


  இதுக்குத்தான் ஒரு முகம் மட்டும் இருக்கனும்... ஆம்புளன்ஸ் டிரைவரு நம்ம ஆறுமுகத்தக் காட்டி இது யாருன்னு முகத்த பாத்துச் சொல்லுங்கன்னு கேக்கிறாரு...! கெட்டதிலும் நல்லது நடந்துருக்கேன்னு சொல்லாதீங்க... கெட்டதிலும் நல்லது படுத்துக்கிடக்கிதுன்னு சொல்லுங்க... எதா இருந்தாலும் பாத்துப் பேசுங்க...!


  ‘இதுக்குத்தான் கடன் கேட்டா உடனே கொடுத்திடனும்...! பங்கிட்டு கொடுத்திருந்தா இப்படி முகத்த மூடிட்டு வருசாங்களா...?’
  ‘கத்தி பேசாதே...! நிம்மதியா ஓய்வு பெறுற பாக்கியம் இல்லைன்னு நெனைக்கிறேன்... யாருக்கு நா ‘பாக்கியா’ வச்சிருக்கேன்...! இனி எனக்கு இங்கு வேலை இல்ல... இல்ல வீட்ல போயி ‘கில்லி’ விளையாட்டை பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்... ஒரே கிலியாத்தான் இருக்கு!‘


  ரெண்டு மனைவின்னா... ரெண்டு சுழிதான் போடணும்...! பூஜ்யத்தில் இருந்துகொண்டு இராஜ்யத்தையே ஆண்டுகொண்டு இருக்கிறியேப்பா... நீ... பெரிய ஆளுதான்...!

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. வயசுப் பய பிள்ளைங்க ,நண்பனை எதுக்கு சேட்டுன்னு சொல்றாங்க :)

   வீட்டிலே களவு போனதை சொல்லப் போனா ,இது வேறயா:)

   சரி பேசலே ,பாத்தா பசுமரம் ,படுத்துவிட்டா நெடுமரம்னு பாடலாமா :)

   கில்லி படம் பாருங்க ,கிலி பறந்துடும் :)

   அதுவும் ஒரு பூஜ்ஜியம் இல்லே ரெண்டு பூஜ்ஜியம் :)


   Delete
 2. ரசித்தேன்.... இரண்டு சுழி! :)

  ReplyDelete
  Replies
  1. சேட்டை அதிகம் இருக்கும்னு சொல்வாங்க :)

   Delete
 3. விவரமான டாக்டர்.

  FIR புத்தகமே களவு போய்விட்டதோ!

  கொடுமையா இருக்கே....


  சினிமாவும் சீரழிவும் என்று ஒரு கட்டுரையே எழுதலாம்.

  அவர் சுழி அப்படி!

  ReplyDelete
  Replies
  1. மூளை ஸ்பெசலிஸ்ட் டா இருப்பாரோ :)

   அதை கொண்டு போனால் பைசா காசுக்கு பிரயோசனம் இருக்காதே :)

   இன்னொரு 108க்கு தேவையில்லாம போச்சே :)

   அது ,வழிகாட்டியாய் இருக்கும் சமூக விரோதிகளுக்கு :)

   சுழியில் விழுந்தவரால் தப்பவே முடியாதோ :)

   Delete
 4. நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !------ ,சீரழிக்கும் அவதாரம் எடுத்து இருக்கிறது..நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. பண்படுத்த முடியவில்லை என்ற ஏமாற்றத்தினால் வந்த வினையோ :)

   Delete
 5. டாக்டரின் சந்தேகம் நியாயமானதுதானே FIR போட்டால் களவுபோனது கிடைக்குமா ஆனால் அதை எழுதவே சங்கடங்கள் பல் ஹை! சுழியை வைத்தே எத்தனையாவது மனைவி என்று கண்டு பிடிக்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. டாக்டருக்கு நீங்களுமா வக்காலத்து :)
   போனது கிடைக்காது ,கூட கொஞ்சம் செலவாகும் :)
   சங்கடம் இருப்பதால் மறந்து விடலாமா :)
   எழுத்தில் சாத்தியம் ,நிஜத்தில் ...:)

   Delete
 6. *டாக்டர் டக்கர் :)
  *நம்ம காவல்படை லட்சனைதானுங்களே :)
  *யாருக்கு நல்லது யாருக்கு கெட்டது :)
  இத செய்யற முட்டாபசங்க படத்தில கலர்கலராக கண்டம் விட்டு டூயட் ஆடுறபோல செய்வாங்களா????? :()
  *அவன் சுழி நல்லாயிக்குது :)

  ReplyDelete
  Replies
  1. டாப் டக்கர் இல்லையா :)
   அங்கே தட்சனை வைத்தால் காரியமாகும் என்பதும் தெரிந்தது தானே :)
   எனக்கு நல்லது ,படிக்கிற உங்களுக்கு கெட்டது :)
   புரியலே :)
   அதான் ரெண்டு பெண்டாட்டியா :)

   Delete
 7. அசத்தல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி :)

   Delete
 8. வணக்கம்
  ஜி
  இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 9. சீரழிக்கும் சினிமா! சரிதான்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. இது நம்ம தமிழ் சினிமாவுக்கு மிகவும் பொருந்தும் :)

   Delete
 10. மூளை எங்கே போச்சுன்னு
  ஏன் ஸ்கேன் பண்றீங்க டாக்டர்?
  பெண்பிள்ளைச் சேட்டை செய்ய
  தூண்டியது என்னவென்று பார்க்கவா...

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. அந்த அகத் தூண்டுதல் தானே ,அவன் அகத்தில் காயம் உண்டாக்கி விட்டது ,தூண்டுதலை உண்டாக்கிய மூளையை ஆராய வேண்டாமா :)

   Delete