24 October 2015

கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

காவல் துறையில்  என்கவுண்டர் டீம் உண்டா :)
                  ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
             ''  இவர் சுடுவதற்குள் ரவுடிகள்  தப்பிச்சி ஓடி விடுகிறார்களாம் !''

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கே !
           ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
           ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''


கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யபடாமல்  ,தெருக்களில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...
அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
                       இப்படி வாசகங்களை கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
            இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை எதிர்ப்பார்க்கலாம் !

ஏன் படம் தயாரிக்கக் கூடாதா?

" மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "

" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

22 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. பாஸிடிவான உங்க கருத்துக்கு நன்றி :)

   Delete
 2. ஏன் கவுண்டரெல்லாம் டீமில் சேத்திங்க... ? அவருக்கு கவுண்டவுன் நேரம் ஸ்டாட் ஆயிடுச்சே...! போய் ரொட்டியாவது சுட்டுப்போடச் சொல்லுங்க...!

  ‘ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும்...பாடுற மாட்ட பாடிக் கறக்கணுமுன்னு’ தெரியாதா எனக்கு...! கடனக் கொடுங்க... அப்புறம் பாருங்க...’
  ’இப்பவே பொய் சொல்றீங்க... மாடு எங்கே பாடுச்சு...ஒங்களுக்கு கடன் கிடையாது...!’
  ’ஒரு பேச்சுக்குச் சொன்னேன்...’
  ’பேச்சுக்குக்கூட பொய் சொல்லக் கூடாதில்ல...!’


  உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்...! இதற்கெல்லாம் எப்படி காவலர்கள் பொறுப்பாக முடியும்...? தீபாவளி வேற வருது...நாலு எடம் போய் பாக்கணுமுல்ல... நீங்க தப்பா நெனைக்காதிங்க...வசூல் பண்ண இல்ல... உண்மையில பாதுகாப்பு
  கொடுக்கத்தான்...!


  மடத்துக்கு வருங்கால வாரிசை நியமிக்க இருக்காராம்...! அப்பஅப்ப ஆசிரமத்து வந்து தொடர்பு கொண்ட நடிகைதான் இம்பூட்டுப் பேரும்...! அப்பவே இந்த விவரத்த சொல்லியிருந்தா... உண்மையான வாரிசோடவே வந்திருப்பாங்களாம்...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. அட ஈஸ்வரா ,ஜாதிப் பிரச்சினையை உருவாக்கி விடும் போலிருக்கே :)

   பொய் சொல்லவும் தனித்திறமை வேண்டுமோ :)

   நீங்க சொல்லும் போது நல்லாவே புரியுது :)

   'மடம்' இன்னும் நல்லா வளரும் :)

   Delete
 3. Replies
  1. என்கவுண்டர் தானே :)

   Delete
 4. காலை சிரிப்புடன் தொடங்குகிறது

  ReplyDelete
  Replies
  1. நல்ல பொழுதாய் கழிந்ததா என்று நாளை வந்து சொல்லுங்களேன் :)

   Delete
 5. 01. வச்சகுறி தப்பாது
  02. கேள்வி சரிதான்
  03. முன்யோசனை நன்றுதானே..
  04. இதுக்குத்தான் எல்லோரும் சாமியார் ஆகிறாா்ஙகளோ....

  ReplyDelete
  Replies
  1. அந்த பிள்ளை மேலதானே :)
   பிழிந்து எடுத்து விட்டாரா :)
   பொறுப்பில்லாமல் தப்பிக்கிற மாதிரியிருக்கே:)
   சாமி படம் என்றும் இதை சொல்வார்களா :)

   Delete
 6. *பழைய துப்பாக்கியில குறி பார்த்தா இப்படித்தான் ஆகும் :)
  *ஆட்டுக்கு லோன் வாங்குனா மேஞ்சு காண்பிக்கனுமா? :)
  *உண்மைதான் எல்லா காவல்படையும் ஏதோ நாட்டுக்கு காவலுக்கு போகனுமல்ல :)
  *மடா படா தடா :)

  ReplyDelete
  Replies
  1. பழசில் இருந்து ரவை பாயாதோ :)
   அதுக்கு உரிச்சு காண்பிச்சா போதும் :)
   கொல்லி மலைக்கு மான் கறி சாப்பிட்டாலும் அவர்களை யாரும் கேட்க முடியாது :)
   இதற்குமா தடா ,ஏற்கப படாதுடா என்கிறானே ரசிகன் :)

   Delete
 7. Replies
  1. நேற்று சிரித்தமைக்கு இன்று என் நன்றி :)

   Delete
 8. ஹா... ஹா...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. அகமும் புறமும் பார்த்து ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 9. இரசிக்கும்படியுள்ளன...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி,கலையன்பரே :)

   Delete
 10. மடாதிபதிகளும் படாதிபதிகளாக
  வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ
  தொடருங்கள்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. சொல்லுக்கு எதிர்ச் சொல்லை என்கவுண்டர் எனலாம் ,உங்க கருத்தும் அப்படியே :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. போற போக்கைப் பார்த்தால் கற்பழிப்பை கூட புகார் செய்யக்கூடாதுன்னு சொல்வார்கள் போலிருக்கே :)

   Delete