26 October 2015

பின்னழகில் மோகினி ,முன்னழகில்... :)


                 '' என்னை பின்னாலே பார்த்தவங்க எத்தனை பேர் முன்னாடியும் வந்து பார்க்கிறாங்கன்னு உனக்கு  தெரியுமாடீ ?''
                 ''பார்த்துட்டு 'ப்பூ ,இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !''


பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?

                 ''என்னங்க,நம்ம பையன் வாந்தி எடுக்கிறான்னு  சொல்றேன் ...கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கீங்களே ,ஏன் ?''
           ''பொண்ணு வாந்தி எடுத்தாதான் ஏதோ சிக்கல்னு அர்த்தம் ,அதான் !''மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் !

               ''என்ன முத்தம்மா .சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டுதான்  பக்கத்திலே  வரணும்னு அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                 ''சர்க்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு ?

முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...
இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...

கெமிஸ்ட்ரி அப்டேட் ஆகலையே !
              "கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையா ,ஏண்டி ?'' 
                 "கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

34 comments:

 1. *அலட்டுவத் யார் பெண்ணா? ஆணா? ப.மன்றம் வைங்க ஜி :)
  *இ. தொ. நுட்பத்தில் சாத்தியமாகதா? :)
  *முத்தமா மட்டும் முத்தம் தருவாளாக்கும் :)
  *மாப்பு வைச்சுட்டிங்களே ஆஆப்பு :)
  மேக்ஸ்ல வீக் போல :)

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமா பட்டி மன்றம் ?
   ஏன் இல்லை ?வாந்தியே இப்போதானே வந்து இருக்கு :)
   அதுவும் வேண்டாம்னா சொல்றீங்க :)
   மாப்புக்கு தான் வச்சிருக்கு ஆப்பு :)
   கணக்கு பார்த்து காதல் வேணும்னா வரும் :)

   Delete
 2. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
  ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
  நெருக்கடி மேல் நெருக்கடி வரணும்

  ReplyDelete
  Replies
  1. உங்க வேண்டுதல் பலிக்கட்டும் :)

   Delete
 3. எல்லாம் தெரியும்டா... ரொம்பத்தான் பூ சுத்தாதே...! பின்னாடி மட்டும் பாத்தது ரொம்பத் தப்பாத்தான் போச்சு... முன்னாடி வந்து அன்னைக்கே நா பாத்திருந்தா இன்னைக்கு இம்பூட்டு சிரமம் நா ஏன் படுறேன்...!


  இப்பெல்லாம் காலம் மாறிப்போச்சு... எதுக்கும் டாக்டரை பாத்திடுவோம்...! ஆமா...ஏண்டி... நீ என்னமோ வாந்தி எடுத்தமாதரி தெரிஞ்சுச்சே... பொய் சொல்லாம சொல்லு...!


  முக்தாசீனிவாசன்னு பேர மாத்திக்கட்டா...? ஏண்டி முத்தம்மா... ஏது புன்னகை...!


  ‘எதைக் கொண்டு வந்தேன்... எதை எடுப்பதற்கு’ வெறும் பயல்...ஜீவன் மட்டும் என்னிடம் அம்சமாக இருக்கிறது.


  உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வொர்க்..... அவுட் ஆயிடுச்சே...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. முதல்லேயே முன்னாடி பார்த்திருந்தா பின்னாடி பார்க்க வேண்டியதே இருந்திருக்காது :)

   மக வாந்தி எடுக்கிற வயசுலே தாய்க்காரியுமா :)

   அந்த பேர வச்சுகிட்டா ,அந்தரங்கம் என்று படமே எடுக்கலாம் :)

   ஜீவனாம்சம் தர முடியாத வெறும் பயல் ,ஏன் அம்சமா இன்னொன்னு வேணுங்கிறான்:)

   ஆமா ,அவுட் தான் ஆயிடுச்சு :)

   Delete
 4. ஹா.... ஹா... ஹா... ஆறு வித்தியாசங்கள்?

  அதானே? பார்த்துங்க.. சூஸைட் அட்டெம்ப்ட் ஆக இருக்கப் போவுது!

  ஹா... ஹா... உடல் நலத்தில் கவனம்!

  ஜீவனாம்சம்! இது எப்பப் போட்டது? இதுவரை ஒண்ணும் அல்லது யாரும் மாட்டினதா நியூஸ் இல்லையே?

  சைன்ஸ் வேணாம். அவரைக் கணக்குப் பண்ணச் சொல்லுங்க!

  ReplyDelete
  Replies
  1. மனசு ஆறாத அளவுக்கு வித்தியாசம் என்று வேணும்னா சொல்லலாம் :)

   வாசனையுமா கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருப்பார் :)

   கொலை அல்லது தற்கொலை ஆகத்தான் போகிறது :)

   சட்டம் அது பாட்டுக்கு தூங்கி கிட்டிருக்கும் :)

   பூபகீதன் சொன்னது போல் கணக்கிலும் வீக் :)   Delete
 5. ரசித்தேன் நண்பரே
  வாக்குத்தான் பதிய இயலவில்லை
  சர்வர் எரர் என்றே வருகிறது
  வாக்களிக்க பின்னர் வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மண சர்வரில் ஏதோ மக்கர் ,மறுமொழி பட்டியலில்கூட பாருங்கள் ,ஆறிய சூப்தான் நீண்ட நேரமாய் முதலில் நிற்கிறது :)

   Delete
  2. 'சூப்' கீழே இறங்கி விட்டதே ,நான் சொல்லிய ஐந்து நிமிடத்துக்குள் :)

   Delete
 6. நெத்தியடி இதுதானோ.. ''பார்த்துட்டு 'ப்பூ ,இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !'--

  ReplyDelete
  Replies
  1. தான் அழகி என்று ஒரு பெண் சொன்னால் ,சரியென்று அடுத்த பெண் ஒத்துக்கவே மாட்டாள் ,பெண்ணுக்கே பெண்ணே எதிரி !உன்னழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்னு ஆண்தான் பாட வேண்டியிருக்கே :)

   Delete
 7. பின்னழகில் உன்னை உன் கள் ஏமாற்றினால் யார் என்ன செய்ய. ?ஏதோ சிக்கல் என்றால் அதுதானா பக்கத்தில் நின்றால் சீனிவாசனுக்கு முத்தமா கிடைக்கும் இருவருமே மனைவிகள் என்றாகி விட்டால் சின்ன வீடாவது பெரிய வீடாவது? ஏன் தீர்ப்பில் உடன்பாடு இல்லையா பாடம் வேறு நிஜ வாழ்க்கை வேறு புரியலையா பெண்ணுக்கு

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் கண் ஏமாறித்தான் போகிறது முன்னும் பின்னும் பார்த்துமே :)
   வயிற்றுக் கோளாறு இல்லே ,அது வயசுக்கோளாறு :)
   அது மட்டுமே போதுமா :)
   நீதி அதுதான் செய்யச் சொல்கிறது :)
   வாழ்ந்தால்தானே தெரிகிறது :)

   Delete
 8. மேலே உன் கண் என்றிருந்திருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை

  ReplyDelete
  Replies
  1. கண் ஏமாற்றினாலும் மூளை அதை சரியாக வாசித்து விடுகிறது !

   Delete
 9. Replies
  1. கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்ஆக என்ன செய்யணும் ,சொல்லுங்களேன் :)

   Delete
 10. ஹாஹாஹா! சிரிச்சு மாளலை!

  ReplyDelete
  Replies
  1. முன்னழகை காமி நீ ன்னு சொன்னால் வம்பாய் போய்விடுமே :)

   Delete
 11. 01. முன்னழகில் பிசாசா ?
  02. சரிதானே... ஜி
  03. நல்லவேளை எனக்கு கில்லர்ஜி’’னு பெயர் வச்சாங்க...
  04. விடிவு காலம் பிறக்கட்டும்
  05. கஷ்டம்தான்..

  ReplyDelete
  Replies
  1. பிசாசும் அழகுதானா :)
   பெண்ணைப் பெற்றவர் பாவம் தான் :)
   கில்லர்ஜி ,கொல்லாமல் போனீங்களே சந்தோசம் :)
   சின்ன வீடுகளுக்கு தானே :)
   இஷ்டப் படும் நாளும் வராமலா போய்விடும் :)

   Delete
 12. சிரிப்புதான் வருகுதையா...

  ReplyDelete
  Replies
  1. அட தைய தைய தையா :)

   Delete
 13. சீனி வாசனை கூட! ஹா.ஹா...

  ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 14. வாசனை உங்க மூக்கையும் எட்டிடுச்சா :)

  ReplyDelete
 15. முதல் ஜோக் பகவான்ஜி அனுபவம் போல் தெரிகிறதே!
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,புதுகை சந்திப்பில் நீங்கள் ,என்னை தலை முதல் கால் வரை பார்த்த போது உண்டான அனுபவம் :)

   Delete
 16. 1. இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !''
  எல்லாம் ரசித்தேன்.
  சிந்தனையையும் தூண்டுபவை
  மகிழ்ச்சி சகோதரா....

  ReplyDelete
  Replies
  1. அடிக்கிறது சைட் ,அதிலும் நிறைவா இருக்கணுமாம் ,இம்புட்டு ஆசை :)

   Delete
 17. ஹஹஹஹ் சீனிவாசன் ஹஹஹ்ஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. சீனிவாசன் பாடு கஷ்டம்தான் :)

   Delete