6 October 2015

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)

மனைவி கையால்  குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)

            ''என்னது ,என் நல்லதுக்குதான்  வைர மோதிரம் கேட்கிறீயா?''
             ''ஆமாங்க ,குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட்டேன்னு சொல்லிக்கலாம் இல்லையா ?''


            இதுவல்லவோ நாணயம்:)

               ''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாத்துறதிலே  நாணயமானவரா , எப்படி?''


     ''ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திக்கிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமா பெயரை  மாத்திக்கிட்டாரே !''
--------------------------------------------------------------------------------------------------------
                                                                                           `                              
பிரசுரம்  செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !


இவர்கள் லஞ்சம் வாங்குவதும் 'நாட்டு நலன் 'கருதித்தான்!
                    ''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
                 ''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை  எடுக்கலே !'' 
பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)

வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப்போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

30 comments:

 1. இது என்னடா கொடுமை! ஒவ்வொண்னா வறேன்!
  <<<>>>
  இந்தியர்களின் பொழுது போக்கே பொது இடத்தில் மூக்கு காது நோண்டுவது தானே! அப்புறம் எப்படி?

  <>
  தண்ணியில இறங்கினவுடன் முதல் வேலையே அதானே!

  ReplyDelete
  Replies
  1. அங்கேயும் அப்படி இருப்பதால்தானே இந்த அறிவிப்பு :)

   Delete
 2. <<>>
  இது இந்தியாவை நோக்கி எழுதப்பட்டதாக இருக்கும்.

  திறந்தவெளியில் போங்கடா என்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. திறந்த வெளியில் இப்படி ஒரு அசிங்கத்தை செய்கிறோமே என்று செய்பவர்களுக்கு உறுத்தாதா :)

   Delete
 3. என்ன பெருந்தன்மை!

  எத்தனை பேர்தான் வச்சுப்பார்!

  மறுபடியும், என்ன ஒரு பெருந்தன்மை!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பேரா முக்கியம் ,கடன்தானே முக்கியம் :)

   Delete
 4. குனியக் குனியக் குட்டு வாங்கிறவன் முட்டாள்ன்னு நினைக்காதே... நானெல்லாம் ஆம்பளயாக்கும்... மோதிரதுன்னு முடிவாயிடுச்சு... அப்புறம் வைர மோதிரமா... எதாயிருந்தாலும் என்னிட்ட பேசுற வேலை வச்சுக்காத...ஒங்க அப்பாட்ட பேசிக்க...!


  ‘கோடிஸ்வரன்’ னு பேர மாத்தி வச்சிட்டாரு... நாணயமானவருதான்... வாங்கின நாணயத்த எப்ப திரும்பிக் கொடுப்பாரு... நா நயமா பேசுனா மட்டும் போதுமா...?


  ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’- சாதகத்தில இவருக்கு சாதகமா எழுதலங்கிறதுனால... ஆயுள் காப்பீடுதான்...!


  பதிவர்கள் கவனத்திற்கு... பயணம் இனிதாக... ஆறு வழி காட்டி ஆற்றுப்படுத்தினீர்கள்... ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் செல்வதால் ஒன்றும் செய்ய முடியவில்லை...!

  த.ம. 3.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை, உங்க அப்பாவிடம் எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வான்னு சொல்லாம் போனாரே :)

   கோடீஸ்வரன் ,ஆனலும் தரித்திரம் போகாதே :)

   காப்பீடு ,இவருக்கு உதவாதே :)

   ஏழாவது ஒரு வழி.....இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க :)

   Delete
 5. ஹாஹா... சீன அரசின் விளம்பரம்.... :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அது என்னை சிந்திக்க வைத்துள்ளதே :)

   Delete
 6. குட்டு கொடுத்ததும் இல்லை வாங்கியதும் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. நீங்க கொடுத்து வைச்சது அவ்வளவுதான் :)

   Delete
 7. மோதிரக் கையால் குட்டு என்று கேட்டது வைர மோதிரகையால்.....!பதிவர்களை ஏன் தனியே அடையாளப் படுத்துகிறீர்கள்? ஒருவர் எத்தனை முறைப் பெயரை மாற்றுவார்.?

  ReplyDelete
  Replies
  1. காலத்துக்கு ஏற்ற மாதிரி கை மாறத்தானே வேணும் :)
   நம்ம ஆட்களைத்தானே கலாய்க்க முடியும் :)
   பணத்தேவை இருக்கும் வரை :)

   Delete
 8. அட போங்கப்பா.... “நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் ,கடலிலே கலந்த பின் எந்த துளி மழைத் துளி என்று பாடுபவர்களாய் இருப்பார்கள் :)

   Delete
 9. பதிவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்று உங்க ஸ்டைலில் எழுதுங்க.ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. அதையெல்லாம் நான் சொல்லியாத் தெரியணும்:)

   Delete
 10. பயணிகள் மட்டுமல்ல,
  பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)
  இவ்வளவுமா? - இவை
  பதிவர்களுக்கு வழங்கும்
  சொல்லடியாக இருக்கே!

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. சொல்லடி இல்லே ,இதுவும் ஜோக் தான் :)

   Delete
 11. 01. இதுவும் சரிதா’’ன்
  02. இது மனுஷனுக்கு அழகு
  03. கப்பல் மூழ்கிடுச்சுனா ஸ்விஸ் போட்ட பணத்தை யாரு ? எடுக்குறது..
  04. இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்’’கொல்ல’’ கூடிய தத்துவங்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. சொந்தக் காசிலே சூனியம் ,சரிதானா :)
   ஆனால் பழக்கத்துக்கு அழகில்லையே :)
   வாரிசுகள் எதுக்கு இருக்காங்க :)
   ஆனால்,நாம வெளிப்படையா ஒத்துக்'கொல்ல' மாட்டோம் :)

   Delete
 12. சரியான குட்டுதான்(மோதிரக்கை)

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ,வைர மோதிரக் கையால் என்றால் கொடுத்துதானே வச்சி இருக்கணும் :)

   Delete
 13. சிறப்பான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க கையால் குட்டுப்பட எனக்கும் ஆசை ,சுரேஷ் ஜி :)

   Delete
 14. ரசித்தேன் ஜி...
  மோதிரக் கையால் குட்டு.... ஆஹா... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

  வாரமலரில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. குட்டுவதற்கென்றே யோசிப்பவர்களோ :)

   Delete
 15. எல்லாவற்றையும் ரசித்தோம் அதுவும் அந்த இறுதி சூப்பர் பயணிகள் மட்டுமல்ல......

  வாரமலரில் வெளிவந்ததுக்கு வாழ்த்துகள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. கலாய்த்தலை ரசிக்க முடிந்ததா :)

   Delete