7 October 2015

ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா :)

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
       '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
      ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  
போகாதுங்கிறாரே !''
ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா ?

             ''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
             ''123 ஜூட்னு சொல்லிட்டு  ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''
        (அதென்ன 144,143 என்று  தெரியாதவர்கள் நேற்று முந்தின நாள் பதிவைப் பார்க்கவும் :)எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !
நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !

மனைவி அமைவதெல்லாம் ..........?
            ''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
             ''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?
               ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''


வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் !

நாம் ,வீட்டில் இருந்தால் 
கொசுவுக்கு  கொண்டாட்டம் !
இல்லாவிட்டால் 
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம் !
10 comments:

 1. வெளில வந்துட்டா வாந்திதான்!

  பார்த்து... 3, 4, 5 என்று கௌ கொ ஆயிடப் போகுது!

  நல்ல தகவல்.

  சாபம்னு பாடினாத்தான் தப்பு. வரம்னுதானே பாடறார்?

  கொசுவும் ஒரு கொள்ளைக்காரனே... ரத்தக் கொள்ளைக்காரன்!

  ReplyDelete
  Replies
  1. வாந்தியை மட்டுமல்ல ,வார்த்தையையும் அல்ல முடியாதுதான் :)

   ஆகத்தானே செய்யும் ,காலம் பூரா இருவர் மட்டுமே காதலித்துக் கொண்டே இருக்க முடியுமா :)

   மாத்திரை சாப்பிடும் போதெல்லாம் நினைவுக்கு வருமே :)

   வரத்தைக் கெடுத்தா சாபம்தானே :)

   கொள்ளையை முழுவதும் தடுக்க முடிய வில்லையே :)

   Delete
 2. சிவந்த இதழும் சிரிக்கக் கண்டு... இதழே கதை எழுது...! உவ... மை...!


  ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்... வாழவிட்டார்களா...?


  ‘ஜெலட்டின்....’ ’ஜெலாட்டின்’ இரண்டுமே வெடிபோல இடியாத் தாக்குதோ...? கொன்றால் பாவம் தின்றால் போச்சு...! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?


  வரம் கேட்டால்... சாபம் வந்து சேர்ந்திடுச்சு... கொடுத்தவனே எடுத்துக் கொண்டால் பரவாயில்லை...சாபத்தை..! பாவபட்ட ஜென்மம்...!


  கொண்டாட இங்க என்ன இருக்கு...? கொசுவுக்கு இரத்தம் இல்ல... கொள்ளக்காரனுக்கு பணம் இல்ல... ஒனக்கெல்லாம் வீடு ஒரு கேடா? எங்க பொழப்பு திண்டாட்டம்தான்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உவ ..மை ,உண்மைக் கதையைச் சொல்லட்டும் :)

   கோகுல் ராஜின் சோக முடிவை நினைவு படுத்துகிறது :)

   தின்பதற்கு எப்படி வேண்டுமானாலும் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம் :)

   இந்த சாபம் வந்தது ஒருவழிபாதையில் :)

   இல்லையென்றாலும் கொசு விடவா போகிறது :)

   Delete
 3. ஹஹஹ அனைத்தும் ரசித்தோம் ஜி....ஆமாம் அனிமல் ஜெலாட்டின் பல உனவுப் பொருட்களிலும் கலக்கப்படுகிறது. நம்மூரில் அதற்கு சிவப்பு நிறப் புள்ளி கவரில் வைத்து விடுவார்கள். கம்பெனி பொருட்களாக இருந்தால். குடிசைத் தொழில் பொருட்களாக இருந்தால் அவை இன்னும் தரக் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பது மிக வேதனையான விஷயம். ஆனால் தரக் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்றால் அதற்கு நிறைய வெட்ட வேண்டி வருமே....குடிசைத் தொழில் செய்வோர் அதற்கு எங்கே போவார்கள்...

  கொசு...கொள்ளை ஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. உண்ணும் பொருளுக்கு பச்சைப் புள்ளி தெரியும் ,அனிமல் ஜெலாட்டினுக்கு சிவப்பு நிறப் புள்ளி என்பது நீங்க சொல்லித்தான் தெரிகிறது :)

   Delete
 4. Replies
  1. பேஸ்ட்டும்,பேச்சும் சரிதானே :)

   Delete
 5. 01. வாயை விட்டுப்போன வாந்தியும், செத்துப்போன சாந்தியும் போல..
  02. 1. 2. 3. சொல்லி ஓடிப்போயி அ. ஆ. இ. ஈ. படிக்கப் போறாங்களோ ?
  03. உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விடயம் ஜி
  04. ஒரு துணைக்கால் வாழ்க்கைத் துணையை கேவலப்படுத்துதே...
  05. வீட்டுக்கு வரலைனா சோத்துக்கு திண்டாட்டம்

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்லலாமோ :)
   ABC நீ வாசின்னு கூட படிக்கலாம் :)
   அசைவமா இல்லைஎன்றா :)
   இந்த கால் செய்யும் வேலையிருக்கே ,ரொம்ப மோசம் :)
   வீட்டுக்கு வரும் அழையா விருந்தாளிகள் :)

   Delete