9 October 2015

அடுத்தவங்க டைரியைப் படிப்பதில் 'கிக் ' உண்டா :)

 1. கடன் வெட்கமறியாது :)

                    ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
 2.         ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேங்கிறாங்களே !''
 3.  கடகம்னா நண்டு, தெரியும்தானே :)
                  '' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் என்று மணமக்களுக்கு ஜோதிடர் சொன்ன வாழ்த்து  பலிக்கும்னு எப்படி நம்புறே ?''
            ''பொண்ணு 'மீன'ராசி ,பையன் 'கடக'ராசியாச்சே !''
                                                   weds  Image result for கடக ராசி படம்இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)
இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !இது கூகுள் சர்வே ... ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் ஆண்களை காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !

                     ''வீட்டிலே அரை டஜன் பிள்ளைங்களை  வச்சுகிட்டு,குடும்பக்கட்டுபாட்டைக் கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
                   'நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாடி  அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைங்க இருந்ததே !''

அடுத்தவங்க  டைரியைப் படிப்பதில்  'கிக் ' உண்டா :)

             'அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்தின்  பெயர் 

'ஒரு பைத்தியத்தின் டைரி 'யாமே ? '

           'ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை 

கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!'   
    

*முன்னொரு காலத்தில் ,பிரசுரித்த 


ஜூனியர் விகடனுக்கு நன்றி ! 
    1.  அம்பாளடியாள் வலைத்தளம்Fri Oct 10, 07:28:00 p.m.
   கூகுளில் பெண்கள் கூடவே இன்னும் ஒன்றைத் தேடி இருக்கலாம் இல்லையா ?தன் கணவர் இதுவரை எதைத் தேடினாரோ அது என்னவென்று? :))ஜீ இதுக்கு நீங்களும் ஏன் நடுங்குகிறீர்கள் ?..:)
  1. எனக்கா நடுக்கமா :) என் பாஸ் வேர்ட் கூட என் ஹோம் 'பாஸ் 'அமைத்துக் கொடுத்ததுதான் .எனவே ,.மடியில் கனமுமில்லை ,வழியில் பயமுமில்லை: )

         

  

28 comments:

 1. ஜோக்கை ரசித்தேன் ஜி...
  அப்படியே அந்த முதல் போட்டோவையும்... ஹி...ஹி...
  சூப்பரு... எல்லாமே...

  ReplyDelete
  Replies
  1. அழகான வெட்கம் ,மனதை கொள்ளை அடிக்குதா :)

   Delete
 2. ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேங்கிறாங்களே!'' என்ற உண்மையை எவர்தான் மறுப்பாங்க...

  ReplyDelete
  Replies
  1. நல்ல காரியத்துக்கு கடன் தரலாம் ,டாஸ்மாக் செலவுக்கு தர முடியுமா :)

   Delete
 3. தெரிஞ்சவங்களும் கடன் தர மாட்டாங்க... தெரியாதவங்க கிட்டயும் கேக்கக் கூடாது.. என்னதான் பண்ணுவாங்க பாவம்!

  நல்ல உவமைதான்

  ரமணா!

  புதுமை! புரட்சி!! உன் குழந்தையும், என் குழந்தையும் நம் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு கவிதை உண்டு!

  ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. காலையில் கடன்காரனாய் எழுவதை விட இரவினில் பட்டினியாய் தூங்குவதே நல்லது என்கிறார்களே :)

   ஜோடிப் பொருத்தம் அபாரம்தானே :)

   ரமணா நினைவுக்கு வரவில்லை ,ரமணர் வருகிறார் :)

   நாம் ஊரிலே இந்த புரட்சி இன்னும் பரவலாகவில்லையே :)   Delete
 4. நேற்று என் பதிவில் தாங்கள் சொன்ன கருத்தை(நகாசு) தெளிவு படுத்துமாறு கேட்டிருந்தேன்.இது வரை பதில் இல்லை;ஒருவேளை நீங்கள் மீண்டும் அங்கு போகாமல் இருந்திருக்கலாம்.எனவே இங்கு நினைவு படுத்துகிறேன்..உங்கள் பதிலை அங்கு எதிர்பார்ப்பது தவறில்லை என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நினைவு படுத்தியதற்கு நன்றி !
   அங்கே சொன்ன பதில் ..இதோ இங்கேயும் >>>தப்பாக எதுவும் சொல்லவில்லை ,அந்த பத்திரிகை செய்தியில் லிங்க் விலாசம் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கும்.அதை நாங்கள் கிளிக் செய்து படிக்கும் விதமாய் செய்து இருக்கிறீர்கள் ,அதைத்தான்;நகாசு 'வேலை என்று சொன்னேன் !உங்களின் எழுத்துத் திறமை உலகம் அறிந்ததாசே ,நான் சிறியேன் ,குறை சொல்லுவேனா :)

   Delete
 5. என்ன உங்களுக்கு தெரியலங்கிறது முக்கியமில்ல... உங்கள எனக்கு நல்லா தெரியுமுங்க...சும்மா யோசிக்கமா கடன் குடுங்க...! அப்புறம் நான் எங்கேயோ போயிடுவேன்...!


  நண்டு ஒன்னையும் மேல ஏற விடாம இழுத்து விட்டுமுன்னு மறைமுகமாக ஜோதிடர் சொல்லிட்டாரோ...?
  தண்ணீரிலே மீன் அழுதா கண்ணீரைத்தான் யார் அறிவார்...?


  இந்திய இதயங்களை இணையத்தில் இணைத்துக் கட்டிப்போட கயிறு கொண்டு வா...யாரங்கே...?


  ஓடிப் போனதுக்கு அப்புறமா நாங்க புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிதாங்க...!


  பைத்தியம் மாதரி பேசாதிங்க... நா ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன்ல்ல...போயி மொதல்ல வைத்தியம் பாருங்க...!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. எங்கேயோ போறதுக்கு காசைக் குடுக்கணுமா :)

   இதுக்கு பரிகாரமே இல்லையா:)

   கயிறே தேவையில்லை ,இணைய அடிமைகள் எங்கேயும் போக மாட்டார்கள் :)

   பிள்ளைங்களை ஏன் பங்கு போட்டுக்கலே :)

   அதானே ,ஒரு பைத்தியமே போதுமே :)

   Delete
 6. Replies
  1. அவரோட டைரியைத் தானே :)

   Delete
 7. Replies
  1. கடன் வாங்குபவரைத் தானே :)

   Delete
 8. அன்று கிக்......இன்று ஹாங்.....நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தூக்குலே தொங்க விட்டுறலாமா :)

   Delete
 9. முதலில் வந்த கடன் ஜோக்கும், பின்னால் வந்த குடும்பக் கட்டுப்பாடு ஜோக்கும் அசத்தல்!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. ஜூ வியில் வந்த ஜோக் சரியில்லையோ :)

   Delete
 10. 01. நியாயம்தானே..
  02. இதுக்குத்தான் கல்யீணத்துல மீன் சோறு போடுறது இல்லையோ...
  03. தகவல் நன்று ஜி
  04. இதுதான் கூட்டுக்குடும்பம்
  05. கேட்டவன் செத்தான்

  ReplyDelete
  Replies
  1. அவர் கவலை அவருக்கு :)
   போட்டால் யார் சாப்பிட மறுக்கப் போறாங்க :)
   கூகுள் ஆண்டவர் கருணை மிக்கவர் ,ஆண்கள் பொறுத்தவரை :)
   கூப்பாடு போடும் கூடமும் கூட :)
   செத்தாண்டா சேகரு :)

   Delete
 11. வழக்கம் போல ! (சிரித்தேன்)

  ReplyDelete
  Replies
  1. அடைப்புக் குறி தான் ரொம்ப முக்கியம் அய்யா :)

   Delete
 12. அனைத்தும் கலகல! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அந்த ஆறு குட்டிகள் உள்ள குடும்பம் போல 'கல கல 'அப்படித்தானே :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  அனைத்தும் அருமையாக உள்ளது படித்து இரசித்தேன்... த.ம10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பார்த்து ரசிக்க வில்லையா :)

   Delete
 14. டைரியைப் படிச்சது தெரிஞ்சா கிக் நிச்சயம்!

  ReplyDelete
  Replies
  1. கொடுக்க வேண்டிய கிக்தான் ,அந்த கிக் கிடைக்குதோ இல்லையோ இது நிச்சயம் :)

   Delete