27 November 2015

இதென்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)

 உயிரோடு இருக்கும் வரை செலவுதானே :)            

                ''அரிசி மூட்டை இப்போதான் வாங்கின மாதிரியிருக்கு ,அதுக்குள்ளே தீர்ந்து போயிருச்சா ?''

                        ''என்னங்க செய்றது ,வாய்க்கரிசி  விழுகிற வரைக்கும் வயிற்றிலே  விழுந்து கிட்டே இருக்கே !''
                                                 


இதென்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

               ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''

                  ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''
பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

             '' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''

              ''சம்பாதிக்கவேண்டிய வயசுலே பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

பார் இல்லா பாருலகம் உண்டா?

''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''

''என்ன பாடுவார்?''

''  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னுதான்  !''

 கால் வைத்தாலே கலவரம் !

நீதி கேட்டு நீண்ட பயணம் ...
பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
தலைவர்  முடித்துக் கொண்டார் ...
பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

26 comments:

 1. வந்ததும் அப்படி...வாய்ச்சதும் அப்படி... வாய்க்கும் வாக்கரிசின்னா... அரிசி தீராம என்ன பண்ணும்...!


  ஒரு இன்ஞ் ‘மிஸ்’ஸான்னாலும் மாட்ட முடியாதில்ல...டியூப் லைட்ட...! கெட்டிக்காரப் பையன்...!


  செத்ததுக்கு அப்புறம்தானே குடுப்பாங்க...இவ்வளவு சீக்கிரமாவா... தெரியாம சும்மா பேசாதம்மா...படத்துல ‘பாரதரத்னா’ விருதுவாங்கிறமாதரிறி சீன்னா இருக்கப் போவுது...?  ” 'பார்’ இன்றி அமையாது அரசுன்னு’’ பாடியிருப்பாரோ...?


  தலைவர் தலை தப்பியது தம்புறான் செயல்ன்னு ‘குமரி’ கண்டதும் முடித்துவிட்டாரோ நீண்ட பயணத்தை...!

  த.ம.1
  ReplyDelete
  Replies
  1. மூடை காலி ஆவதற்குள் மண்டை போட்டு விட்டால் அரிசி தீராமல் அப்படியே இருக்கும்தானே :)

   நல்ல வேலை விளக்கம் சொன்னீர்கள் :)

   செத்த பின்னும் தகுதியுள்ள பலருக்கும் வழங்கப் படாதது வேறு விஷயம் :)

   அப்படித்தான் ஆகிப்ம்போச்சு :)

   கன்னியாகுமரி வரை செல்லாதது இதுக்குத் தானா :)   Delete
 2. Replies
  1. பாஸ்ட் புட் பார்க்க மட்டுமே அழகு ,அப்படித்தானே :)

   Delete
 3. Replies
  1. அந்த பையனைத் தானே :)

   Delete
 4. எல்லாவற்றையும் ரசித்தேன். முதல் ஜோக், ஜோக் இல்லை, தத்துவம்.

  ReplyDelete
  Replies
  1. இனி, தத்துவ ஜோக்கும் தொடரும் :)

   Delete
 5. 01. பசி வந்தால் என்னசெய்யிறது... ?
  02. தகப்பனைப்போல பிள்ளை
  03. அதானே அதுக்குள்ளே சங்கா ?
  04. நல்லவேளை போயிட்டாரு...
  05. இவரு காலடி மண்ணு கிடைக்குமா ?

  ReplyDelete
  Replies
  1. உயிரோடு இருக்கப் போய்தானே பசிக்குது :)
   அப்பன் எதை அளந்தார் :)
   நடப்பை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)
   இருந்திருந்தால் எழுதுவதை விட்டிருப்பாரா :)
   எஜமான் காலடி மண்ணெடுத்து பூசிக்கப் போறீங்களா :)

   Delete
 6. வணக்கம்
  ஜி
  இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாய்க்கரிசி போடுவதை ரசிக்க முடியுதா :)

   Delete
 7. Replies
  1. தலைவரின் பயண இலக்கு சரிதானே :)

   Delete
 8. பார் 'இன்றி அமையாது உலகு. உண்மை

  ReplyDelete
  Replies
  1. போர் இன்றியும் அமையாது போலிருக்கே :)

   Delete
 9. Replies
  1. ஆமாம் ,அவருக்கு பிடித்த ரைசும் நைஸ்தான் :)

   Delete
 10. //பயண இலக்கை அடைந்துவிட்டோம்//

  இது மேல் உலகப் பயணமால்ல இருக்கு?
  .
  .

  ReplyDelete
  Replies
  1. இது அடுத்தவரை அனுப்பும் பயணமா இருக்கே :)

   Delete
 11. வாக்கரிசி... டேப் அளவு... பயண இலக்கு
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கு நன்றி ஜி :)

   Delete
 12. மூட்டை மூடை ஆனதில் மூச்சே மூடே போச்சு எப்படியோ அறிந்து வாங்கினால் சரி.அடப் பார்ரா பரத ரத்னாவின் கதியை.?வள்ளுவர் நிறையவே மாற்றிப் பாடி இருப்பார்..!பயணத்தின் இலக்கு ப் பிணமா?

  ReplyDelete
 13. முடை அரிசி ஆகாமல் போச்சே :)
  இருக்கும் போது வாங்கியவர்கள் கதி இறந்தவர்களின் கதி ஆகி விடுகிறதே :)
  உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதும் மறக்குமோ :)
  யார் செத்தா அவருக்கென்னா :)

  ReplyDelete
 14. அந்தப் “பார் ” மூலம்தான் 40 வக்கீல்களை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள்.. நண்பரே........

  ReplyDelete
  Replies
  1. ஆஹா .நீங்க அந்த விஷயத்தை சொல்றீங்களா :)

   Delete