1 November 2015

பிணம் தூக்கியின் திகில் அனுபவம் !

  ஒல்லிப் பிச்சி உடம்புக்காரி :)          
                  ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
           ''அந்த பாத்திரத்தில் சமைக்கிற எதுவும்  உன் உடம்பிலேயும் ஒட்ட மாட்டேங்குதே !''

செல் இல்லையென்றாலும் பழக்க தோஷம் விடாது !
                ''செல்லில் பேசிக்கொண்டே நான் பைக் ஓட்டுவேன்னு எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க ?''
               '' எப்பவுமே கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சிக்கிட்டுதானே  வண்டி ஓட்டுறீங்க !''


' பிடித்தம் போனா ' புருஷனை எப்படி பிடிக்கும் ?

             ''ஒண்ணாந்தேதி வரவும் உனக்கு பிடித்தமானவரே ,பிடிக்காதவர் ஆயிட்டாரா,ஏண்டி ?''
               ''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !''

பிணம் தூக்கியின் திகில் அனுபவம் !

உண்மையில் நடந்த சம்பவம் இது ...
குற்றால அருவியில் குளிப்பது எல்லோருக்கும் சுகமான அனுபவம்தான் ...
ஆனால் அதுவே ஒரு சிலருக்கு துக்கத்தை தந்து விடுகிறது ...
வாலிபக் கோளாறால் சில வாலிபர்கள்  ...
மலைமேலே  வெகுதூரம் ஏறிச் சென்று  
நீர்த் தடாகத்தில்  குளித்துக் கொண்டிருக்கையில் ...
காட்டாறு வெள்ளம் வந்து ஒருவனை அடித்துக் கொண்டு சென்று விட்டதாம் ...
நண்பர்கள் பல மணி நேரம்  தேடியும் அவனைக்
கண்டுபிடிக்க  முடியவில்லையாம் ...
இறந்துஇருந்தால்கூடசடலம்ஒதுங்கிஇருக்கவேண்டும் ...அப்படியும் கிடைக்கவில்லை ! 
இப்படிப்பட்ட சம்பவங்களில் பிரபலமான 
'பிணம் தூக்கி 'ஒருவரின் தேடிச் சென்று
இருக்கிறார்கள் ... 
அங்கேயும் அவர்கள் துரதிர்ஷ்டம் ,அவர் வெளியூர் சென்று இருந்ததால் ...
மூன்று நாட்களுக்குப் பின் சம்பவ இடத்திற்கு வந்து பிணம் தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது ...
அவர் ஒருவிதமான எண்ணையை வாயில் அடக்கிக் கொண்டு ஓடும் தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்தாராம் ...
அந்த எண்ணையை நீரினடியில் சென்றபின் துப்புவாறாம்...
அதனால் LED விளக்கைப் போட்டது போல்  பிரகாசமாய் வெளிச்சம் கிடைக்குமாம் ...
பத்து நிமிடத் தேடலுக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ...
காத்திருந்த எல்லோருக்கும் ஆச்சரியப் படும்படியான  தகவலை சொன்னாராம் ...
'உங்கள் நண்பர் குகை ஒன்றில் இன்னும் உயிரோடு இருக்கிறார் !'
பிறகேன் காப்பாற்றிக் கொண்டுவரவில்லை ?
பிணம் தூக்கி தன் அனுபவத்தைச் சொன்னாராம் ...
'பிணமாய் இருந்தால் தலை முடியைப் பிடித்துக் கொண்டு வாழை மட்டையை இழுத்துக் கொண்டு வருவது போல் எளிதாக கொண்டு வந்து விடுவேன் ...
உயிரோடு இருப்பவனை மீட்பது சிரமம் ,ஏனென்றால் உயிராசையுடன் இருப்பவர் என்னையும் தண்ணீரில் இழுப்பார் ...'
என்று சொன்னவர் ,அதன் பின் பாதுகாப்புடன்  கயிற்றின் உதவியுடன் சென்று ...
அந்த வாலிபரை உயிருடன் மீட்டுள்ளார் ...
மறு ஜென்மம் எடுத்த அந்த வாலிபர் தற்போது அமெரிக்காவில் பணி புரிகிறாராம்...
அவர் தன் திருமணத்திற்கு பிணம் தூக்கியை அழைத்து மரியாதை செய்தாராம் !
மூன்று நாள் உண்பதற்கு ஏதுமில்லாமல் ,வெள்ளம் பாய்கின்ற ஒரு குகையில் உயிர் பயத்துடன் எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்தால் நமக்கே 'ஜிலீர் 'என்கிறதே !
            ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில்   புது மொழி சொல்லத்தோணுது!''
           ''எப்படி?''
            ''ஏட்டு தொப்பை கடமைக்கு  உதவாதுன்னுதான்!''34 comments:

 1. பிணம் தூக்குபவர் உயிரோடு இருந்தவரைக் கண்டு அஞ்சியது. நகைப்பான உண்மை. மேலும் அவர் வாயில் எடுத்து சென்றது.. ஒரு விதமான எண்ணையெல்லாம் இல்லை. என்னைப்போல் சாதாரணமான விளக்கெண்ணைதான் ஜீ. இப்ப தெரியுதா விளக்கெண்ணையோட மகத்துவம். (பின் குறிப்பு : நமக்கு இந்த வெளம்பரமெல்லாம் புடிக்காது அப்டின்னு வெளக்கெண்ணை சொல்ல சொல்லுச்சு)

  ReplyDelete
  Replies
  1. உன் பலம் உனக்குத் தெரியலே நீ சரியான விளக்கெண்ணைய்தான் :)

   Delete
  2. என்ன ஜி சூடயிட்டீங்க .. எதாவது கோவம் இருந்த சொல்லுங்க ஜி

   Delete
  3. கோபமா ,உங்க மேலா ? நான் ,உங்ககிட்டே சொல்ல சொன்ன விளக்கெண்ணைய்க்கு சொன்னேன் :)

   Delete
 2. இதுக்கே...நான்...ஸ்டிக்கின்னு என்னிட்ட மட்டும் வந்து கம்முன்னு ஒட்டிக்கிருங்கிறீங்க! அத மட்டும் நிறுத்திராதிங்க...!


  உண்மையச் சொல்றேன்... எங்க அப்பா செல் பேசிப்பேசி... நா பொறந்தப்பவே தலை சாஞ்சிக்கிட்டுதான் இருந்துச்சாம்... அது தெரியாம இருக்கத்தான் செல்பேசிறமாதரி ஒரு பக்கமா செல்ல வச்சுக்கிட்டு... சாய்ச்சிக்கிட்டு இருக்குற மாதரி வண்டி ஓட்டுறேன்! பேசிறதுக்கு பேலன்ஸ் ஒன்னும் இல்ல... எல்லாம் நடிப்புத்தான்...! நீ ஒன்னும் கண்டுக்காதே...!


  கால்ல விழுந்து கட்டிப்பிடிச்சிட்டாரு...! இனி பெறக்கப் போற குழந்தையாலதான் நமக்கு நல்லகாலமே பொறக்கப் போகுதுங்கிறாரு...!


  ‘தூக்குத் தூக்கி’ படம் பார்க்கச் சொல்ல வேண்டியதுதானே...!

  இன்னொன்று குற்றாலத்தில நடந்த உண்மையச் சொல்றேன்.... குற்றாலத்தில் மலைமேல தற்கொலை செய்து கொண்ட ஒருவனின் உடல் கீழே அருவில் குளித்துக்கொண்டிருந்த பெண்மீது விழுந்து அந்தப் பெண் இறந்துவிட்டாள்...! செத்தும் கெடுத்தான்... செத்ததுக்குப் பின் உயிரை எடுத்தவன் இவனாகத்தான் இருக்கும்... கின்னஸ் ரெக்காடுக்கு ரெகமெண்ட் பண்ணுங்களே...! பாரத ரத்னா விருது மட்டும்தான் செத்ததுக்கு பின்னாடியும் கொடுப்பாங்களா என்ன...?


  தொப்பினாலே... தொப்பைக்குத் தொடர்பு உண்டுல்ல...! ஏட்டால தொப்பையத் தூக்கிட்டு ஓடமுடியாதில்ல... திருட்டுப் பய தெரியாம ஓடுறான்...! நிப்பாட்டுங்க...அவ ஓடுறது வேஸ்ட்டு...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. இந்த பசை காயுறதுக்கு இன்னும் நாளிருக்கு :)

   இதுவும் பரம்பரையாய் வந்ததுதானா :)

   பால் பௌடர் வாங்கவாவது காசு தேறுமா :)

   பார்க்கிற மாதிரி நல்ல பிரிண்ட் கிடைக்கலையாம் :)

   செத்தவனுக்கு விருது கொடுப்பதில் அரசுக்கு பிரச்சினை வராது ,ஏன்னா ,விருதை வேண்டாம்னு திருப்பித் தர மாட்டாங்களே :)

   குட் பைன்னு கையைக் கொடுத்துட்டு இல்லே ஓடுறான் :)

   Delete
 3. பிணம் தூக்கியின் உண்மைச் சம்பவம் மனதை தொட்டது.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. நமக்கே தொடுதுன்னு உயிர் பிழைத்தவருக்கு எப்படி இருக்கும் :)

   Delete
 4. நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டதால்
  ஒல்லிப் பிச்சி உடம்புக்காரியா - ஏன்
  மண் சட்டி, பானையில சமையல் செய்து சாப்பிட்டால்
  உண்டது உடம்பிலேயும் ஒட்ட
  ஆனை அளவு உடம்புக்காரியானால் சிக்கலோ?

  ReplyDelete
  Replies
  1. ஆனை அளவை விட ஒல்லிதான் அழகோ :)

   Delete
 5. Replies
  1. பிடித்தமில்லா புருஷன் தானே :)

   Delete
 6. எல்லாமே அட்டகாசம்ஜி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. குற்றாலத்தில் குளித்தது போல் இருக்குதா :)

   Delete
 7. Replies
  1. ஜீலிர் என்று இருந்ததா :)

   Delete
 8. 01. மனைவியை இப்படியும் காலை வாரலாமோ..
  02. கழுத்து சுளுக்கு பிடிச்சனையும் இப்படித்தான் நினைக்கனுமோ...
  03. சம்பளப் பிடித்தம் வராத மாதம் இல்லையோ..
  04. நன்றிக்கடன் நன்று
  05. ஸூப்பர் பஞ்ச் ஜி

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு காரணம் ,மச்சான் நடிகையாய் இருக்குமோ :)
   அடுத்த தலை முறையே இப்படி ஆகிடும் போலிருக்கு :)
   பிடித்தமின்றி யார் சம்பளம் தருவார்கள் :)
   இருக்காமல் போகுமா :)
   எல்லா கடமைக்கும் :)

   Delete
 9. தொப்பை, ஏட்டுக்கு அழகு!

  ReplyDelete
  Replies
  1. குறைந்த பட்ச தகுதியில் தொப்பையை சேர்த்து இருப்பார்களோ :)

   Delete
 10. பிணம் தூக்கியின் திகில் அனுபவம் ! 'ஜிலீர் அனுபவம்தான்...நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. இதை கேள்வி பட்டதில் இருந்து செண்பகா தேவி அருவி பக்கம் போகக் கூட பயமாயிருக்கு :)

   Delete
 11. எல்லா நகைச்வையும் . அருமை.

  ReplyDelete
  Replies
  1. நான் ஸ்டிக் பாத்திரத்தில், எண்ணெய் சேர்க்காமல் சமைப்பதால் உடம்பில் கொழுப்பு சேர்ந்து குண்டாக வாய்ப்பில்லைதானே :)

   Delete
 12. நான் ஸ்டிக்கில் சமைப்பதுஉடலுக்கு ஸ்டிக் ஆவதில்லையோ பைக் ஓட்டாத நேரத்தில் கழுத்து நேராக இருக்குமா?அப்படி ஆனால் பித்தமானவராக இருக்கவே முடியாதே ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு தொடர் பிணம் தூக்கி யின் அனுபவம் பற்றிப் படித்த நினைவு கிருஷ்ண வேணி என்னும் தலைப்பு என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஒரு வகையில் உண்மை போலிருக்கு :)
   நிரந்தரமா கழுத்து சாய்ந்து விடும் போலிருக்கே :)
   சம்பளப் பிடித்தம் இல்லைஎன்றால்தான் மனைவிக்கும் பிடிக்கும் :)
   கிருஷ்ண வேணியை எப்படியாவது தேடி பிடித்து படிக்க முயற்சிசெய்கிறேன் :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  எல்லாம் அருமையாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. 'குட் நைட் 'சொல்லும் நேரத்தில் வந்த உங்க கருத்துக்கு நன்றி :)

   Delete
 14. அனைத்தும் ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. நான் ஸ்டிக் பொருத்தம்தானே :)

   Delete
 15. ஏட்டின் தொப்பை...ஹஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. ஏட்டின் தொன்மையையும் ,ஏட்டின் தொப்பையையும் பிரிக்க இயலாதோ :)

   Delete
 16. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)தாமதமான நன்றிக்கு சாரி :)

   Delete