11 November 2015

கவர்ச்சி நடிகைக்கு கவிதாஞ்சலி :)

அரசவை நர்த்தகியின் நடனத்தைக் கூட  ரசிக்க முடியலியாம் :)

                  ''அரிப்பாசனத்தை உடனே மாற்றுங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள் ,மன்னா ?''
                  ''அரியாசனமா இது ?மூட்டைத் தொல்லை தாங்க முடியவில்லை !''

தற்கொலை நடிகைக்கு கவிதாஞ்சலி :)

                ''அவர் கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ,அளவுக்கு அதிகமாய் தூக்கமாத்திரையை உண்டு ,துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னு எழுதி இருக்காரே !''


தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் ?

                ''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம 

உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
              
            ''டி வி மெகா சீரியலைப் பார்த்து அழுதுகிட்டு  

இருக்காங்கப்பா !''

பொன்மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?

       ''தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !''
         இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் பேட்மிண்டன் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !
தந்தையின் பெயரை சொன்னால் ...
அப்படி ஒருவரை தெரியாதே என்பீர்கள் ...
மகளின் பெயரை சொன்னால் ...
இவரை தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்பீர்கள் ...
தந்தை பிரகாஷ் படுகோன் ????
மகள் தீபிகா படுகோன் !!!!
தீபிகா படுகோன் தன் ரசிக கண்மணிகளுக்கு ஒரு நல்ல காரியம் செய்வதாய்  இருந்தால் ...
 தந்தையின் பொன்மொழிவுடன் கூடிய ஆட்டோகிராப் போட்டோவைக்  கொடுக்கலாம் ...
ஆனால் ஒரேஒரு கண்டிஷன்...
அந்த போட்டோவிலாவது உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு போஸ்  கொடுப்பது  நல்லது !                       ''மன்னான்னு அழைக்கக் கூடாதுன்னு அரசர் கட்டளையாமே ,ஏன்?''
                     ''தமன்னா ஞாபகம் வந்து வந்து விடுகிறதாம் அவருக்கு !''


                                                            
                                                                                            

30 comments:

 1. மிகவும் இரசித்தேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வட இந்தியாவில் தானே இன்று தீபாவளி ?மதுரைவாசியான நீங்களும் டெல்லிவாலா ஆகிட்டீங்களா ?
   வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 2. புரியவில்லை மன்னா...! அருகில் இருக்கும் தலையணை மூட்டை நன்றாகத்தானே இருக்கிறது...! நீங்கள் எழுந்திருங்கள் மன்னா... நான் அமர்ந்து பார்த்துச் சொல்கிறேன்...!


  கவர்ச்சி நடிகைங்கிற நிருபிச்ச கவர்ச்சிக் கன்னி...! இருக்கும் போது...இறந்தபோதும் தூ(து)க்கத்தைக் கெ(கொ)டுத்தாய்...! எப்படியிருந்தாலும்... காலை தூக்கிப் போட வைத்துவிட்டாய்...!


  ‘தூளியில ஆட வந்த வானத்து மின் விளக்கே’ன்னு... ‘சின்னத்தம்பி’ய கூப்பிட்டு தொட்டில ஆட்டச் சொல்லுங்க...!


  என்னிட்ட ஒளிவு மறைவுங்கிறது கிடையாது... யார்ட்ட என்ன வார்த்தை பேசுறோங்கிறத பார்த்துப் பேசுங்க...!


  தங்களுக்குத் தெரியாமல்... தமன்னாவை நா அழைக்கலாமா வேந்தே...? அரச கட்டளையிடுங்கள்... மற்றதை தங்களின் இந்த அமைச்சர் பார்த்துக் கொள்வார்...!

  த.ம.3.

  ReplyDelete
  Replies
  1. அரியாசனத்தில் மூட்டைத் தொல்லை தாங்கமுடியாமல் கீழே வந்து அமர்ந்திருக்கின்றேன் ,அதுவும் உமக்கு பிடிக்க வில்லையா :)

   காலை தூக்கிப் போடுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது :)

   அவர் பாடுவார் ,இவர் சீரியலைப் பார்த்துகிட்டே இருக்கட்டும் :)

   ஒளிவு மறைவுங்கிறது கிடையாதுன்னு பார்த்தாலே தெரியுதே :)

   மாமா வேலைக்குமாய்யா அரச கட்டளை :)   Delete
 3. Replies
  1. பொன் மொழி உங்களுக்கு பிடித்து இருக்குமே :)

   Delete
 4. Replies
  1. பதிவைவிட படம் சூப்பர் ,அப்படித்தானே :)

   Delete
 5. ஹஹஹ் முதல் ரெண்டும் செம பகவான் ஜி!

  மற்றதும் ரசித்தோம் ஜி....

  லேட் தீபாவளி வாழ்த்துகள் தங்கள் குடும்பத்தார் சுற்றத்தார் அனைவருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. லேட்டா ,நண்பர் வெங்கட் இன்றுதான் தீபாவளி கொண்டாடுகிறார் ,அவருடன் நாமும் கொண்டாடுவோமே :)

   Delete
 6. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. நல்லது ,உங்களுக்கும் இன்றுதான் தீபாவளியா :)
   வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 7. எல்லாமே அருமைஜி!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. கவிதாஞ்சலியைப் பற்றி உங்க கருத்தென்ன ,சொல்லி இருக்கலாமே :)

   Delete
 8. 01. யார் தருவார் இந்த அரிப்பாசனம்
  02. அடடே இவர் சினிமாவுக்கு டயலாக் எழுதப்போகலாம்
  03. இரண்டு பக்கமும் அழுகைதானோ..
  04. இவர் குலம் த(லை)ளைக்கட்டும் டும் டும்
  05. மண்ணே என்று அழைக்கலாமா...

  ReplyDelete
  Replies
  1. தருவார் என்பதைவிட பெறுவார் என்பதே சரி :)
   எழுதிக்கிட்டுதானே இருக்கார் :)
   ஒன்று பசிக்கு அழுகிறது ,இன்னொன்று :)
   ஜப்பானிலும் வேருன்றி தளைக்கட்டும்:)
   அரசாங்க ரகசியத்தை வெளியிட்ட குற்றத்துக்கு ,கைதாக வேண்டிவருமே :)

   Delete
 9. குழந்தை அழுதா அழுதுட்டுப் போட்டும்;சீரியல் பார்த்து அழாமல் இருக்க முடியுமா!
  ஜோக்கானலும் யதார்த்தம்!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைன்னா புதுசாவா அழுவுது ,பிறக்கும் போதே அழுதுகிட்டே பிறந்ததுதானே :)

   Delete
 10. Replies
  1. அரசரால் நடனத்தை ரசிக்க முடியலையாமே:)

   Delete
 11. //உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது நல்லது !//

  எங்கே மறைத்துக் கொள்ள்ணும்?
  தூணுக்குப் பின்னாலா?
  கதவுக்குப் பின்னாலா?
  அலமாரிக்குப் பின்னாலா?

  ReplyDelete
  Replies
  1. ஓ...அப்படியும் ஒரு கோணம் இருக்கா ?
   ஒரு படத்தில் அமீர்கான் ஒரு ட்ரான்சிஸ்டர் ரேடியோவால் ,மறைக்க வேண்டியதைமட்டும் மறைத்துக் கொண்டு அம்மண போஸ் கொடுத்திருந்தார் !அவருக்காவது அது தேவைப்பட்டது ,இவங்களுக்கு செல்போனே போதுமோ :)

   Delete
 12. தமன்னா ....................!
  அசத்தல் ஜி

  அரிப்பாசனம் செம நல்லவேளை நீர்ப்பாசனம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீங்க !
  அத்தனையும் அருமை ஜி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மன்னன் எப்பவும் தமன்னா நினைப்பில் இருந்தால் , நாடு எப்படி உருப்படும் :)அதே , மன்னர் ,மக்களின் நீர்ப் பாசனத்தை பற்றியும் ஏன் கவலைப் படப் போகிறார் :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மன்னர் அரியாசனத்தில் அமர்ந்து நெளிவதை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 14. அரிப்பாசனம் தொடங்கி தமன்னா வரை அனைத்து ஜோக்குகளும் இன்று அசத்தல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அரிப்பு ,ஆசனத்தில் மட்டுமல்ல ,மன்னரின் மனதிலும் இருக்கும் போலிருக்கே :)

   Delete
 15. ரசித்தேன்.

  உங்க அபிமான அழகி தமிழச்சி ஸ்ரீதேவி பல காலங்களுக்கு பின்பு மறுபடியும் புலி படத்தில் நடித்துள்ளாராமே!

  ReplyDelete
  Replies
  1. வாராது வந்த மாமணிபோல் வந்து ,யாரும் தாராத தகவலை தந்திருக்கும் வேகநரியாருக்கு நன்றி :)
   பேரன் பேத்திகள் எடுத்தாலும் ,மனதில் வாழும் கனவுக்கன்னி என்றும் கிழடாவதில்லையே :)

   Delete