13 November 2015

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ :)

 உண்மைத் தியாகிகளுக்கு சிலை இல்லாத காரணம் :)              

                   ''என் தாத்தா ,தன் சொத்தையெல்லாம் மக்களுக்காக 

தியாகம் செய்தவர் ,ஆனா ,அவர் ஞாபகமா ஒரு சிலைகூட  இல்லை !''
                  ''பாவம் உங்க தாத்தா ,வாழும்போதே நடுத்தெருவுக்கு வந்த அவருக்கு ,நடுத் தெருவில் எதுக்கு சிலைன்னு நினைக்கிறாங்க போலிருக்கு !''

வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

                           ''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
                       ''யார் என்ன சொல்றாங்க ?''
                   ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ !

நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...
அந்தப் பெண்ணை கட்டிக்கிட்டு கை விட்டாரா ,இல்லை...
சும்மாவே கை விட்டாராவென்று தெரியவில்லை ...
படித்தது பத்தாவதுதான் என்றாலும் ...அரசியல்வாதிகளுக்கு 'டபுள் MA'வேலையும் பார்த்தவராம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு உள்நாட்டில் கூட வேலை வாங்கி தராமல் ஏமாற்றியும் உள்ளாராம் ...
நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ...
லட்சக்கணக்கில் வரதட்சணைப் பணத்தையும் ,சீர்வரிசை நகைகளையும் எடுத்துக் கொண்டு 'எஸ்கேப் 'ஆகி விடுவாராம் ...
இவர் இயக்கிய 'வாச்சாத்தி 'படத்தைப் பார்த்து சொல்லமுடிய விட்டாலும் ...
இவர் லீலைகளைப் பார்த்து சொல்ல முடிகிறது ..'அடி ஆத்தீ '...'
கடலும் கடல்சார்ந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ...
ஆனால் உடலும் உடல் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியே படங்களை எடுத்தவர் ...
டெல்லி மாணவி பாலியல் பிரச்சினையை மையப் படுத்தி தற்போது இவர் எடுக்கும் படத்திற்க்கு பெயர் ...
தடை செய்யப்பட்ட இடமாம் ...
இப்போது இவரே தடை செய்யப்பட்ட இடத்திற்கு  சென்றுவிட்டார் ...
சினிமா மோகத்தால் இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் இனியும் தொடரும் ...
ஏன் இப்படி செய்தீர்கள் என்று இவரிடம் கேட்டால் ...
சினிமாவில் வெற்றி பெறும் வரை எனக்கு பெண் தரத் தயங்கிய இந்த சமூகத்தை பழிவாங்கவே இத்தனை திருமணங்களை செய்துக் கொண்டேனென்று 'பூசி மொழுகுவார் '...
ஆரம்பக் காலத்தில் கொத்தனார் வேலைப் பார்த்தவர் ஆச்சே !


அழகை ரசித்தால்......

               ''அழகை ரசித்தால் மெய் மறந்து போகுது டாக்டர்!''
            ''எப்படி?
           ''ஊசியை  நீங்க போட்டா வலிக்குது ,உங்க நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே!

36 comments:

 1. 01. இதுவும் நியாயமாகத்தான் இருக்கு ?
  02. சிரங்காக இருக்கப்போகுது
  03. கொத்தனார் பூசத்தான் செய்வார்
  04. டாக்டர் வேற ஊசி போட்டுறாம...

  ஜி தொடர் பதிவில் மாட்டி விட்டீர்கள் போலயே... ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. சொத்து சேர்க்காத தலைவர் சிலையை வைப்பதில் கூட பாரபட்சமா :)
   தங்களுக்கு நகச் சுற்றி வந்திருக்கும் நேரத்திலா ,நம்மாளுக்குசிரங்கு வரணும் :)
   மொழுகவும் செய்கிறாரே :)
   இப்படி ஆட்களுக்கு போட்டாலும் தப்பில்லே :)

   பழுத்த மரத்துக்கு அடி விழத்தானே செய்யும் ,பழம் விழுமான்னு பார்ப்போம் :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  தாத்தாவும் நடுத்தெரு.. சிலையும் நடுத்தெரு...கேட்ட கேள்வி நியாயம் உள்ளது...
  வைத்தியரும். ஜோதிடரும் நம்மிடம் சொல்லாததை சொல்லி வேண்டுபவர்கள்.
  மற்றவைகளை இரசித்தேன் ஜி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மக்களுக்காக உழைத்தவர்களை இப்படி நடுத்தெருவில் விடுவது ,தப்பில்லையா :)
   இருவரையுமே நம்பக் கூடாதோ :)

   Delete
 3. மாட்டுக்கு போடுகிற ஊசியை போட வேண்டும் ஜி... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. போட்டாலும் ,அந்த மாட்டுக்கு எங்கே உறைக்கப் போகுது :)

   Delete
 4. அடடா....ஊசியை நர்ஸ் போட்டா வலிக்காதா.... அரசு மருத்துவமனை நர்ஸ்கிட்ட ஊசி போடச் சொல்லுங்க...பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. ஜொள்ளு பார்ட்டிக்கு தனியாரா இருந்தாலென்ன , GH யா இருந்தாலென்ன ?வலிக்காதுதான் என்று சொல்கிறார் :)

   Delete
 5. நடுத்தெருல சிலையா நின்னா....ஆஹா...

  ReplyDelete
  Replies
  1. காக்கா அசிங்கம் பண்ணும் ,சிலையை பராமரிக்கக் கூட ஆளிருக்காது ,தியாகத் தலைவனுக்கு சிலையே தேவையில்லை :)

   Delete
 6. Replies
  1. அழகு சிலையை ரசித்து மெய் மறந்தீர்களா ,சுரேஷ் ஜி :)

   Delete
 7. அஞ்சு பெண்டாட்டியா, அடி ஆத்தீ!
  என்ற பதிவினூடு
  மூளைக்கு வேலை கொடுத்தாச்சு!

  ReplyDelete
  Replies
  1. நானும் மூளைக்கு வேலைக் கொடுத்து யோசிக்கிறேன் ,என்ன வேலைக் கொடுத்து இருக்கிறேன் என்று :)

   Delete
 8. Replies
  1. நீங்க ஜோதிடர் பக்கமா ,டாக்டர் பக்கமா :)

   Delete
  2. நான் உங்கள் பக்கம் ஜீ!

   Delete
  3. அப்படின்னா ,நியாயத்தின் பக்கம் நிற்கிறீர்கள் என்று அர்த்தம் ..ஹிஹி :)

   Delete
 9. Replies
  1. ஸ்ரீ ராம் ஜியிடம் கேட்ட அதே கேள்விக்கு நீங்களும் பதில் சொல்லுங்க :)

   Delete
 10. // ''அழகை ரசித்தால் மெய் மறந்து போகுது டாக்டர்!''
  ''எப்படி?
  ''ஊசியை நீங்க போட்டா வலிக்குது ,உங்க நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே!
  //


  இவர் 'ஊசி'ப் போன வடையைக் கூட
  "நல்லாயிருக்கு"ன்னு சாப்பிட்ருவாரோ?

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடுவார் ,ஆனால் அதை யார் தருகிறார்கள் என்பதை பொறுத்திருக்கிறது :)

   Delete
 11. வணக்கம். நான் சக்தி .http://sakthiinnisai.blogspot.in/...ரசித்தேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. சக்தி இன்னிசையை ரசிக்க அழைத்தமைக்கு நன்றி :)

   Delete
 12. நர்ஸ்க்கிட்டதான் ஊசி போடுவீங்க போல....
  ம்....
  ரசித்தேன் ஜி...

  மற்ற பதிவுகளும் வாசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் போட மாட்டாரே :)

   Delete
 13. டாக்டர் நீட்டும் பில்லைப் பார்த்தால் உயிரும் மறந்துவிடும்:)
  ரசனை பகவானே!

  ReplyDelete
  Replies
  1. அதையும் நர்ஸ் கொடுத்தால் தொகையும் மறந்து விடும் :)

   Delete
 14. சிலைக்கு விளக்கம் செம்மை!

  ReplyDelete
  Replies
  1. நேர்மைக்கு நாட்டிலே இப்படித்தானே மதிப்பிருக்கு :)

   Delete
 15. தாத்தா என்ன தாதாவா...? சிலை வைக்க...?

  ஜோதிடருக்கும் டாக்டருக்கும்... ரெண்டு பேருக்குமே உள்ளங்கை கைஅரிச்சதை வெளியே சொல்லம இருக்கிறதப் பாரேன்...! வரவுதான்...!


  அடி ஆத்தி...! இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்கிது சரிதானா...?


  உண்மையில மெய் மறந்து போயிட்டீங்க... கற்பனையில மிதந்திட்டீங்க... ஊசி போட்டது நான்தான்...!

  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. தான் சேமித்து வைத்திருந்த பதிவை வெளியிட முடியாமல் இரு நாட்களாக இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதும்,அது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், உங்களுக்குப் பின்னூட்டம் இட முடியவில்லையே என என்னிடத்துப் பலமுறை சொல்லி வருந்திய மணவையாரின் மனதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் பகவானே!

   இது போன்ற வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் மனத்தில் உங்கள் இடத்தை யாராலும் அசைக்க முடியாது.

   நன்றி.

   Delete
  2. உண்மைதான் ,தாதாவுக்கு உள்ள மதிப்புகூட ,தியாகி தாத்தாவுக்கு இல்லைதான் :)

   அதானே ,நம்மை வைத்து அவர்கள் சம்பாதித்து விட்டார்களே :)

   ஒரு ரெக்கைன்னா கஷ்டம்தான் :)

   நீங்களா ,தலை கிறுகிறுன்னு சுற்றுதே :)

   Delete
  3. ஊமைக் கனவுகள் விஜி ஸார்...
   மணவையார் என்னிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் .அவரது இணையத் தொடர்பு மீண்டும் செயல்படத் தொடக்கி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே !
   மணவையார் தன்னுடைய பதிவுக்கு சிந்திப்பதை விட ,என் பதிவுக்கு கருத்துரையிட அதிகமாய் சிந்திக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது .உங்களிமும் அடிக்கடி இது தொடர்பாக பேசுகிறார் என்பதில் இருந்து அவரது அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது .அவரது அன்புக்கு நான் அடிமை !

   Delete
 16. ஹஹாஹ்ஹ் அனைத்தும் ரசித்தோம்...ஜி!

  ReplyDelete
  Replies
  1. கொத்தனார் பூசி மொழுகியதை ரசிக்க முடிந்ததா :)

   Delete