14 November 2015

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படியா பண்ணுவது :)

 ஆட்டோவுக்கும்   காசிருக்காது :)             
           
          ''என்ன சொல்றீங்க ,சொந்த காரிலே வந்து இறங்கின அந்த 
நோயாளி ஏழையா ?''
                  
         ''ஆமாம் டாக்டர் ,அட்மிட் ஆகும் போது  கோடீஸ்வரனா 
இருந்தாராம் !''
      

                                   மகிழ்ச்சியும் ,வெறுப்பும் தரும் ஒரே வார்த்தை  இதுதான் !

             ''ஒரே வார்த்தைதான் ...டாக்டர் சொன்னப்ப சந்தோசமும் ,ரேசன் கடைக்காரர் சொன்னப்ப  கோபமும் வந்ததா,அதென்ன வார்த்தை ?''
             
       '' உங்களுக்கு சர்க்கரை இல்லைங்கிற வார்த்தைதான் !''

ஓடிப் போக நல்ல நேரம்தான் !
             ''ஐயையோ ,கல்யாணம் பண்ணிக்க ,நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''
              ''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவர் கண்டுக்க மாட்டார்  ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படியா  பண்ணுவது :)

புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...
சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...
கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
       நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

காதலில் உண்மை உண்டா?

                    ''உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்று  பாடுற பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணனும்!'' 

                 ''என்னான்னு?''
               
                ''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும்  ஏன் காதலிக்கிறேன்னுதான் !''

26 comments:

 1. Replies
  1. பாலும் பழமும் ருசித்ததா :)

   Delete
 2. சிரிக்க வைத்தீர்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்று சொல்லி மகிழச் செய்த உங்களுக்கு என் நன்றி :)

   Delete
 3. சர்க்கரை நாளில்... நல்ல ஜோக்...!

  ReplyDelete
  Replies
  1. ஓ,இன்று உலக சர்க்கரை தினமா ?பொருத்தமா இருக்கே :)

   Delete
 4. வணக்கம்
  ஜி
  தூக்கத்தில் நடக்கும் வியாதி எல்லா அப்பாக்களும் இல்ல ஜி.... ஒரு சிலர்தான்... மற்றவைகளை இரசித்தேன்
  த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இவருக்கும் இருக்கிற மாதிரி தெரியலே ,மகளைப் பத்திரமா வழியனுப்ப வந்த மாதிரியிருக்கு :)

   Delete
 5. 01. ஆஸ்பெட்டல் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்குது...
  02.. ஹாஹாஹா ஸூப்பர்
  03. அப்பனைப்பற்றி புள்ளை தெரிஞ்சு வச்சுருக்கு
  04. சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விடமும் உள்ளது
  05. நியாயமான கேள்வி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,ஆரோக்கியமா இருக்கும்போதே சாகணும்னு:)
   சர்க்கரை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நல்லது :)
   அதனாலேதானே ஓடிப் போகப் பார்க்குது :)
   விஷயம் இருப்பதால்தானே நானும் ரசித்தேன் :)
   அந்த வயசுலே ,எங்கே கேள்வியெல்லாம் மண்டையில் ஏறப் போவுது :)

   Delete
 6. சிரிக்கக் கதைக்கிறீர்கள்.

  அருமை பகவானே!

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னையும் ,தம்பதிகள் செய்கை சிரிக்க வைத்ததால் நானும் கதைக்க வேண்டியதா போச்சு :)

   Delete
 7. சர்க்கரை ஜோக் அட்டகாசம்! மற்றவையும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை போலிருக்கா :)

   Delete
 8. ஆமாம்... டாக்டர்! இவரு ஒருத்தர்தான் ஏழையாகியும் உயிரோட திரியுறாரு... அதிஷ்டக்காரரு...!


  சர்க்கரை இருந்தால் முந்தைய சந்ததியரால் ரேஷனில் வந்தது... ரேஷனில் சர்க்கரை இல்லையென்றால் சர்க்காரால் வந்தது... !


  தூக்கத்திலே நடக்கிற வியாதியா...? இல்ல... தூக்கறமாதரி நடந்து நடிக்கிறாரா...? உண்மையச் சொல்லு...!


  ஒன்ன யாருய்யா கூப்பிட்டது...! பக்கத்தில பாத்துக்கிட்டு இருக்கிற பக்கத்து வீட்டுகாரர கூப்பிட்டேன்...!


  நான் காதலிக்கிறேன்னு சொன்னதும் உண்மைன்னு நம்பிட்டீங்களா... அய்யோ... அசடு...!

  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. பைசா வசூல் பண்ண டாக்டர் அவரை உயிரோட விட்டு வைத்திருக்காரோ :)

   அடடா ,நீங்க சொல்றது சிந்(தித்தி)க்க வைக்குதே :)

   நீங்க சொல்றமாதிரிதான் தெரியுது :)

   அப்படின்னா ,புருஷன் செய்தது சரிதான் :)

   இது ,அந்த பாட்டு இடம்பெற்ற புதிய பறவை படத்தின் நாயகி ,சொல்ற மாதிரியிருக்கு:)

   Delete
 9. ஹஹஹஹ்ஹ் சர்க்கரை இல்லைனு சொல்லிட்டான்....

  தூக்கதுல நடக்கறவியாதி..ஹஹஹ்ஹஹ்

  ReplyDelete
  Replies
  1. இல்லைன்னா சிரிக்கிறதா ,அழுவுறதா :)

   கதவைத் திறந்து விட்டு வந்தது தப்புன்னு ,வீட்டுக்கு போனதும் அவருக்குப் புரியும் :)

   Delete
 10. இரசித்தேன்...
  அனைத்தும் சுவை!

  ReplyDelete
  Replies
  1. இந்த தம்பதிகளை முன் உதாரணமாய் எடுத்துக்க கூடாது என்பது சரிதானே :)

   Delete
 11. தூக்கத்திலே நடக்கிற வியாதி
  இப்படியும் உதவுமா?

  ReplyDelete
  Replies
  1. ஓடிப் போறவங்களுக்கு உதவுதே :)

   Delete
 12. எல்லாவற்றையும் படித்தேன் ரசித்தேன். சொன்ன கதையை நான் ஏற்கனவே படித்து இருந்தாலும், உங்கள் வார்த்தைகளால் மீண்டும் படித்ததில் ரசனைதான்.

  ReplyDelete
  Replies
  1. அதை எப்போது படித்தாலும் சிரிக்கத்தான் தோன்றுகிறது :)

   Delete
 13. அனைத்தும் ரசித்தேன்... கதை உட்பட.

  ReplyDelete
  Replies
  1. கதையும்,கற்பனையும் அருமைதானே :)

   Delete