17 November 2015

முதல் இரவிலும் தூக்கம் போகாதா :)

  மனு கொடுக்கும் போதே இதையும் சொல்லணுமோ :)                 
                  ''உங்க ஊருக்கு பஸ் இல்லேன்னீங்க ,பஸ் விட்டாச்சே ,மறுபடியும் என்ன மனு ?''
                 ''மழை பெய்தால் ஒழுகாத பஸ் வேணும்னுதான் !''


மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் ?

              ''செத்துப் போன உங்க நண்பர்    

ஆப்பாயில்ன்னா விரும்பிச்  சாப்பிடுவாரா ?'' 

       ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

      ''அவரோட பாடி முழுசா எரியறதுக்குள்ளே  

கரெண்ட்போயிடுச்சே !''
ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK !

             ''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா ,ஏன் எரிஞ்சு விழுறீங்க ?'' 
          '' எழவிலே போற அந்த டைய்லர் ,பார்வையிலேயே அளவை எடுப்பானே !''

வீடு பிடிக்கலைன்னா இப்படியா சொல்றது?

'                 '''குறைந்த  வாடகையிலே  இந்த  வீடுதான்  இருக்கு ,உங்களுக்கு  பிடிக்குதா?''
                    ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet ன்னு  
 போர்டுலே எழுதுங்க!''
இனி ,நீங்க படிக்கப் போறது முன்பு நான் எழுதிய 'சிரி'கதை ...எழுத்துரு சிறியதாக இருப்பதால் ஜூம் செய்துக் கொண்டு படிக்கவும் ,சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !


25 comments:

 1. மழை பெய்தாலும் இது நீர் மூழ்கி பஸ்...ஒழுகிறதப்பத்தி கவலைப் படவேண்டாம்... கடைசியா நீங்க... போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்திடலாம்...!


  தப்பா சொல்றீங்க...பச்ச முட்டை பத்து குடிப்பாரு... பச்ச புள்ள மாதரி...!


  ஒங்களுக்குத்தான் பார்வை சரியில்ல... நல்லா பார்க்கிறவ ஏன் குறை சொல்றீங்க...? பார்வை ஒன்றே போதுமே...!


  “இந்த வீட்ல குடியிருந்தா... எ பேருக்கு முன்னாடி Late ன்னு சீக்கிரம் போட வேண்டியதுதான்...!”
  ”Too Late ஆவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே...!”


  சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு... நேத்து ராத்திரி தூக்கம் போச்சு...டீ...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. ஊரெல்லாம் தண்ணிக்காடாய் இருப்பதைப் பார்த்தால் நீர் மூழ்கி பஸ்தான் விட வேண்டியிருக்கும் போலிருக்கு :)

   பத்து முட்டைன்னா வேகுறதுக்கு தாமதமாகத்தானே செய்யும் :)

   பல்லாயிரம் சொல்ல வேண்டுமா ,பார்வை ஒன்றே போதுமே :)

   செத்தவன் குடியிருக்கும் வீடா :)

   மழைக் கொட்டிக்கிட்டு இருக்கு சில்லுன்னு அக சொல்லவா வேணும் :)

   Delete
 2. ஒழுகாத பஸ் கிடைப்பது கஷ்டம்தான்.
  ஜோக்காளியிடம் எந்த ஆலோசைன்யும் கேட்டுவிடக் கூடாது என்று சொல்கிற முன்னெச்சரிக்கை பதிவுதான். அந்த அனுபவக் கதை.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் ,கட்டின வீடே ஒழுகுது என்பார்களோ :)

   Delete
 3. ஒழுகாத பஸ்ஸுக்கு சான்ஸே இல்லை! ஹாஹாஹா! ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மனு கொடுத்து வேண்டப்படும் பஸ் என்பதாலா :)

   Delete
 4. என்ன பாஸ் இப்படிப் பண்ணிட்டீங்களே கண்ணாலையா அளவெடுப்பீங்க சரி அதை விடுங்க ! தூக்க மாத்திரைய போட்டு கல்யாணத்தை நிறுத்திட்டீங்களே அவ்வ்வவ்வ் !

  அருமை ஜி ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள்
  தாம +1

  ReplyDelete
  Replies
  1. கண்ணாலே பேசலாம் ,அளவெடுக்கக் கூடாதா :)
   நிறுத்தியது கல்யாணத்தை அல்ல ,முதல் இரவை :)

   Delete
 5. 01. மழை ஓஞ்சும் தூறல் முடிலை...
  02. எல்லாம் வெட்டி(யான்) ஞானம்
  03. டெய்லர் பார்த்தால்தானே அளவெடுக்க முடியும்...
  04. வர்றவன் பூராம் டோக்கன் கேட்பானே....
  05. ஹாஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. எப்படி முடியும் ,மேல் தொட்டி முழுதும் தண்ணியிருக்கே:)
   வெட்டியான ஞானம் இல்லையே :)
   கையில் இன்ச் டேப் வேண்டாமா :)
   கொடுத்தா போச்சு :)
   படித்ததால் வந்த சிரிப்புதானா இது :)

   Delete
 6. வணக்கம்
  எல்லாம் இரசித்தேன்.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஜி... த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தையல்காரரின் மோசமான பார்வை தையல் மேல் விழக்கூடாதுதானே:)

   Delete
 7. Replies
  1. மீண்டும் ரசிக்கலாமே ,ரூபன் ஜி க்கு போட்ட என் மறுமொழியை :)

   Delete
 8. கதையைப் படிச்சேன்...
  தூக்கம் , தூக்கமா வருது!

  ReplyDelete
  Replies
  1. நல்லா தூங்குங்க ,கனவாய் விரியும் என் தொல்லை :)

   Delete
 9. Replies
  1. ஜென்ட்ஸ் டைலரைத் தானே :)

   Delete
 10. சுவை வரிகள்அத்தனையும் ரசித்தேன்
  சகோதரா சிரித்தேன்
  நன்றி பணி தொடர்க!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 11. Replies
  1. to let ..வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  தமிழ் நாட்டு பேரூந்தின் நிலையை அறிந்தேன் ஜி..
  டைய்லரின் கண்.. மீற்றர் கோல் போலா.....

  மற்றவைகளை இரசித்தேன் த.ம 13

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அவங்கண்ணிலே கொள்ளி வைக்க என்று தாய்க்குலம் வாழ்த்தியதாக தகவல் :)

   Delete