18 November 2015

சம்சார ஆசை அவருக்கு இன்னும் குறையலே!

 அப்பன் புத்தி அறிந்த பையன் :)             

                      ''எனக்கு குழந்தைகள் அதிகம் என்று, எப்படி கண்டுபிடீச்சீங்க ?''  
                     ''ஜனவரி ,பிப்ரவரின்னு ஆரம்பித்து  சரியாய் சொல்லி விட்டு  ,பத்தாவது மாதத்தை   டெலிவரி மாசம்னு உங்க மகன் சொல்றானே ! 

இரண்டுமே பரம்பரையாய் தொடருதே !             

         ''என்ன சொல்றே ,உங்க தாத்தா பணமும் கொடுத்து ,செலவும் கொடுத்துட்டு போயிருக்காரா ?''
                ''ஆமா ,சொத்தும் கொடுத்து ,சர்க்கரை நோயையும் கொடுத்துட்டு போயிருக்காரே !''


சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையலே!

              ''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''

             ''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''


ரஜினி மட்டுமா கோச்சடையான் ?

            ''மதுரைக்காரங்க எல்லாரும்    

கோச்சடையான்கள்தான்னு 

சொல்றீங்களே ,எப்படி?''

               ''பல வருசமா கோச்சடையில்  இருந்து வர்ற 

தண்ணீரை குடிச்சிட்டுத்தானே  அவங்க 


வாழ்ந்துகிட்டு இருக்காங்க !''


நேற்றைய 'சிரி ' கதையை  பலரும் ரசித்ததால் ...இதோ அடுத்து ஒன்று ......

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து நடந்தது என்ன ? தெரிஞ்சுக்க நாளைக்கு இதே இடத்திற்கு  வாங்க !

25 comments:

 1. ஐ.... நகைச்சுவைத் தொடரா.... சூப்பர் பகவான்ஜி.

  கோச்சடையான்..... ரசித்தேன்.
  ம்ம்ம்.... பாண்டிச்சேரியில் நாங்கள் முத்திரைப் பாளையத்துத் தண்ணீ குடிச்சவங்கன்னு
  பெருமையாக சொன்னதெல்லாம் இப்போது போயிடுச்சி.....

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளிக்கு புதிதாய் வந்தவர்கள் படிக்க வேண்டாமா ,அதான் இந்த தொடர் மீள் பதிவு :)

   காசு கொடுத்து தண்ணீர் குடிக்க வேண்டி வருமென்று கனவிலாவது நினைத்து பார்த்திருப்போமா :)

   Delete

 2. 1. ஹா... ஹா... ஹா...

  2. ஹா...ஹா... பணத்தை அப்படியே வைத்திருக்கக் கூடாது இல்லே?

  3. ஹா...ஹா... குறும்புக்காரக் கணவன்!

  4. படிச்ச நினைவு இருக்கு.

  5. தொடர்? கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. 2.அதுக்காக பரம்பரைக் கொடுமையா :)

   Delete
 3. ஆண்டவன் கொடுக்கிறான்... நாம வேண்டான்னு சொல்லமுடியுங்களா...?


  பணக்கார நோய்... கொடுத்து வைத்தவர்... உங்க தாத்தான்னு சொல்லுங்க...கொடுத்தவரே எடுத்துக் கொள்ள வருவார்...!


  மாலை நேரத்து மயக்கம்...இது ஒட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசையென்ன...!


  அதான் கோ... சாடையில் இருக்கிறார்களோ...?


  நயன்தாரா(ம்) நாட்டியமா...? இந்த வெடியக் கேட்ட நயன்தாராவுக்கு காது கேக்கலையாம்...! இஎன்டிக்கிட்ட கூட்டிட்டு போங்க...!
  கண் இல்ல காதுகெட்ட பின் சூரிய உதயமா...?

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. கொடுக்கிற கடவுள் கன்னிப் பெண்ணுக்கு தருமா :)

   கொடுத்து கெடுத்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

   பாடல் அருமை ,அதுக்காக துறவி ஆக முடியுமா :)

   அவ்வ்வ்,கோ என்றால் மாடாச்சே :)

   நயன்தாராவை ரசிக்க காது எதுக்கு :)

   Delete
 4. Replies
  1. சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையவில்லை என்பது உண்மைதானே :)

   Delete
 5. அத்தனையும் ரசித்துச் சிரித்தென் சகோதரா
  நன்றி வளர்க!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 6. ஹாஹாஹா! அசத்தல் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. காக்கைக் குளியலை ரசித்தீர்களா :)

   Delete
 7. 01. மூணாவது மார்ச்சுவரி’’னு சொல்லலையா ?
  02. தாத்தாவுடையது பேரனுக்குத்தானே...
  03. பாம்பின் கால் பாம்பறியும்
  04. அடடே ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. அதை ஏற்கனவே அவனோட அண்ணன் சொல்லிட்டானே :)
   பேத்திக்கும்தான்:)
   நாமும் அறிவோம் :)
   குரங்கு மார்க் அங்கேயும் கிடைக்குதா :)

   Delete
 8. நாளைக்கும் வரணுமா?

  ம்....

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு தூக்கம் வருமென்றால் வரவேண்டாம் :)

   Delete
 9. வணக்கம்
  ஜி
  இன்று சொல்லிய எல்லா நகைச்சுவையும் நன்று இரசித்தேன் ஜி...வாழ்த்துக்கள் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஓசைக்கு நோ என்ட்ரி டாக்டர் ஹென்றியை உங்களுக்குத் தெரியுமா :)

   Delete
 10. நாளையும் வருகிறேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வரவேற்க காத்திருக்கிறேன் :)

   Delete
 11. எத்தனை வீடுகளில்
  இரண்டுமே பரம்பரையாய் தொடருதே!

  ReplyDelete
  Replies
  1. கொடுமை ,இதுவுமா பரம்பரையாய் தொடர்வது :)

   Delete
 12. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  இது என்ன கொடுமை நண்பரே..கில்லர்ஜிக்கு ஓட்டு போட முடியவில்லை....உங்களுக்கு ஒட்டு போட முடிகிறது...!!!!!

  ReplyDelete
  Replies
  1. அதானே ,யார் கண் பட்டதோ ,என்னாலும் கில்லர்ஜிக்கு ஓட்டு போட முடியவில்லை :)

   Delete
 13. ரசித்தேன்....

  தொடர் கதையில் அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்! :)

  ReplyDelete