2 November 2015

அவளும் ,அலாவுதீனின் அற்புத விளக்கும்:)

           

                  '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது ,தப்பா போச்சா .ஏண்டா ?''

                     ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்தி படுத்த முடியாது போலிருக்கே !''
சர்வருக்கு வந்த குழப்பம்    !  
           ''என்ன கேட்குறீங்க , 'பொங் 'கொண்டு வரச் சொல்றீங்களே ?''
                ''உங்க ஓட்டல்லே எப்போ  பொங்கல் சாப்பிட்டாலும் கல்லு வருதே !''
               
..
இதுவுமா கிரிமினல் குற்றம் ?
              ''வெள்ளையை  நீங்க கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
                     ''உங்களுக்கு யாரோ தப்பா  தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''

கொன்ற பாவம் போகுமா ?

             ''வீட்டுலே  அட்டகாசம்  பண்ணிக்கிட்டு  இருந்த   

எலியை அடிச்சாச்சு !இப்போ  அதை தின்னுதான் ஆகணும்னு 

சொல்றீயே ,ஏன்?

                        
              ''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு  


சொல்றாங்களே!!"

36 comments:

 1. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம 1

  ReplyDelete
  Replies
  1. பொங்... நன்றாயிருந்ததா :)

   Delete
 2. அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைச்சாலும்... இந்த பூதத்திக்கு அடங்காது...! குத்து விளக்கா இவ? குத்தும் விளக்கு...!


  பொங்கல் வாங்கினா ‘கல்‘ இலவசமா தருவோம் நெனக்காதிங்க... எது வாங்கினாலும் ‘கல்’ இலவசம்தான்... எங்க மொதலாளி ‘கல்‘லாதவருனாலே... ‘நான் பெறாத இன்பம் பெருக இவ் வையகம்... பெருக!‘ன்னு பாடுபடுங்கன்னு சொல்லியிருக்காரு.


  ‘வெள்ளையனே வெளியேறு’ன்னு சொன்னதில இருந்து... எங்க தாத்தா காலத்திலேயே இதே தொழில்தாங்க...! நீங்களே பாருங்கள்... பார்பர்... உட்காருங்க... உங்களுக்கும் வெள்ளைய கருப்பா மாத்திடலாம்! அப்புறம் மாமூலா வந்திடுவீங்க...!


  வீட்ல எலி... வெளியில புலியா...? புலி இப்ப ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு அலையுதாம்... ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு...!’

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. குத்தும் விழிச் சுடரேன்னு பாடிகிட்டு இருக்கிற என்னை யோசிக்க வைக்குதே :)

   உங்க முதலாளி படிக்காத மேதை போலிருக்கே :)

   வெள்ளையன் தானே வெளியேறினாலோ,வெளியேற்றப் பட்டாலோ தப்பில்லை என்றுதான் 'மயிர்' மருத்துவரும் ,மனநல மருத்துவரும் சொல்றாங்க :)

   ஓ..கதை அப்படி போகுதா:)

   Delete
  2. மணவையாரின் மணங்கமழும் பின்னூட்டமும் அதற்கு உங்களின் பதிலும் பதிவைப்போலவே சுவைக்கிறது.

   பொங்கலில் கல் இருந்தாலும் தெரிவதில்லை.
   அவ்வளவு ருசி பகவானே!

   Delete
  3. மணவையார் தன் தளத்தில் கூட தினசரி பதிவு போடாமல் ,என்னைவிட அதிகமா யோசித்து கமெண்ட் போடுவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது ,மகிழ்ச்சியாவும் இருக்கிறது :)

   கல்லும் (முள்ளும் )காலுக்கு மெத்தை என்பதை போல ,கல்லும் நாக்குக்கு ருசிதானா :)

   Delete
 3. Replies
  1. பதிவர்களுக்காக ,நீங்க பாடின 'என் சோகக் கதை 'யை நானும் ரசித்தேன் ஜி :)

   Delete
 4. Replies
  1. வெள்ளையை கறுப்பாக்கியதைதானே:)

   Delete
 5. *மனைவிய தடவினா பூதம் வருமா? :)*பொங் கள் வராதா? :)
  *பணநேட்டு கலராத்தானே இருக்கு அப்புறம் ஏன் கருப்பு வெள்ளைனு சொல்றாங்க டவுட்ஜி :)
  *எ பாவ சிரி போ :)

  ReplyDelete
  Replies
  1. அதென்னவோ தெரியாது ,தடவாட்டி நிச்சயமா பூதம் வரும் :)
   சாம்பாருக்கு பதிலா கள்ளை ஊற்றினால் பொங்கள் ஆகலாம் :)
   நோட்டு ஒண்ணுதான் ,இருக்கும் இடத்தை பொறுத்து பச்சோந்தி ஆகிவிடுகிறது :)
   இல்லை ,என் பதிவை படித்து சிரிச்சிட்டு போங்க :)

   Delete
 6. வெள்ளையை கறுப்பாக்கிறவர்! ஹாஹாஹா! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அவர் செய்வதில் சட்ட மீறல் ஏதும் இல்லையே :)

   Delete
 7. Replies
  1. அவர் வெள்ளையை பிளாக் பண்றார் ,நீங்க சொன்னதை பிளாக் பண்ணீட்டிங்களே :)

   Delete
 8. கல் இல்லாத பொங்கல் பொங்தானே
  ஹா ஹா ஹா
  (முதல்ல பொங்கள் னு அடிச்சுட்டேன்! என்வே நீக்கி விட்டேன்!)

  ReplyDelete
  Replies
  1. #என்வே நீக்கி விட்டேன்!)#
   இதையும் நீக்காமல் போனால் சரிதான் :)

   Delete
 9. 01. இதுக்கு அலாவுதீனிடமே ஐடியா கேட்கலாம்.
  02. வடை கேட்டால் ’’டை’’யும் வருமோ...
  03. புகார் கொடுத்தவன் தெளிவாக கொடுக்கவில்லையோ....
  04. இந்த தத்துவம் எலிக்குத்தான் சொன்னார்களா ?

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு மண்டையைத் தேய்த்துக் கொண்டாலும் ஐடியா எதுவும் அலாவுதீனுக்கு வராதே:)
   ஆனால் ,டாஸ்மாக் பாரில், சாம்'பார்' வடை கிடைக்க வாய்ப்பில்லை :)
   மொட்டைப் பெட்டிசன்தானே,அப்படித்தான் இருக்கும் :)
   புலியை அடித்தால் அதுக்கும் பொருந்தும் :)

   Delete
 10. 1) ஹா....ஹா... ஹா...

  2) அப்படியெல்லாம் கல்லை கட் செய்ய முடியாதுங்க...

  3) ஹா.... ஹா... ஹா...

  4) அடப்பாவமே...

  ReplyDelete
  Replies
  1. 2.மார்பிள் கல்லைக்கூட அல்வாவை போல் வெட்டுகிற காலம் இது ,இதுவா முடியாது :)

   Delete
 11. Replies
  1. சலூன் கடை குப்பையில் கிண்டினால் மயிறுதானே கிடைக்கும் :)

   Delete
 12. 4-ம் நச்!
  4-ம் நச்!
  4-ம் நச்!
  4-ம் நச்!

  ReplyDelete
  Replies
  1. நச்சரிப்பு இல்லே ,நச் 'சிரிப்பு 'அப்படித்தானே :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  அனைத்து சிறப்பு .... இரசித்தேன் த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இன்றைய ஸ்பெசல் 'பொங்'கலை ருசித்தீர்களா :)

   Delete
 14. Replies
  1. எது அருமை ,குத்து விளக்கா ,அலாவுதீன் விளக்கா:)

   Delete
 15. Replies
  1. நீங்க ஒருதரம் சொன்னா ,ரெண்டு தரம் சொன்ன மாதிரி போலிருக்கே :)

   Delete
 16. பொங்! :)

  அனைத்தையும் ரசித்தேன்.... கல்லில்லாத பொங்கலையும்!

  ReplyDelete
  Replies
  1. பொங்கி வந்துச்சா சிரிப்பு :)

   Delete
 17. பொங்கல் எல்லாம் எங்களுக்குக் கல்லோடு சாப்பிட்டுப் பழக்கம் ஜி! ஹஹஹ் அதன் சுவை தனிதான்...

  அலாவுதீன் ஹஹ்ஹஹஹ உண்மைதானோ..

  ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு கல்லையும் செரிக்கும் வயது போலிருக்கே :)

   இதிலே சந்தேகம் வரலாமோ :)

   Delete