20 November 2015

ஏகப்(பட்ட)பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் :)

  திருடர்கள் ஜாக்கிரதை  என்பதை இப்படியும் சொல்லலாமோ :)             

         ''அந்த நகைக் கடையில் இது வரை திருடு போனதே இல்லையாமே ,எப்படி ?''

          ''கடவுள் உங்களைப்  பார்க்கிறாரோ இல்லையோ ,உங்களை நாங்கள் சி சி டி வி  மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?

                ''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் 

சொல்லி கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே 

,விதவைக்கு  எதிர்ப்பதமாக ஒற்றை  ஆண்பாற் 

சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 

'என்று பேசிவிட்டு அமர்ந்து இருக்கும் எதிர் அணி

தலைவியைப்   பார்த்து கேட்கிறேன் ...பத்தினி 

என்பதற்கும் தான் எதிர்ப்பதமாக எந்த ஒற்றை 

சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள் 

 வருத்தப்படுகிறோமா?''

தந்தைக்கு மரியாதை !

உயிரோடு 

இருந்தவரை 

'ஏசி 'ய பிள்ளைகள் ...
இறந்தவரை வைத்தார்கள் 
AC பெட்டியில் !
நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி மட்டுமல்ல ,முடிவும்கூட ......

கேட்காத காதும் கேட்கும்!


27 comments:

 1. தந்தைக்கு மரியாதை அருமை ஜி.
  கதை சூப்பர்...
  எல்லாமே கலக்கல் ரகம்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பதிவிலும் தந்தையின் மரியாதை தெரிகிறதே ,பார்த்தீர்களா :)

   Delete
 2. 1. சிசி டிவி இருக்குமிடங்களிலும் திருட்டுகள் சர்வ சாதாரணமாக நடக்கிறதே!

  2. அது சரி!

  3. இதுவும் சரி! ஒன்றரை அல்லது இரண்டு கடைசி நாட்கள் மட்டும்தானே!

  4,. ஓ.... இதுதான் காரணமா!

  ReplyDelete
  Replies
  1. கள்ளன் பெருசா ,காப்பான் பெருசான்னு சொல்வது சரிதானே :)

   விதவன் என்று வேண்டுமானால் இனி சொல்லலாமா :)

   அதற்கு மேலும் வைத்திருக்க அவர்கள் என்ன ஈனா ,வானாக்களா :)

   இதுவும் சரிதானே :)

   Delete
 3. ‘சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும்...’என்ற திருடர்கள் இன்றைக்கு நகையைத் திருடிக் கொண்டு சி சி டி வியையும் எடுத்துச் சென்று விட்டார்களாம்...!


  இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவுப்படுத்திச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... ‘கற்பு’ என்பது ஆண்களுக்கு இல்லை...!


  தந்தை இருந்த பொழுது ஏசி நொந்து வெந்து போக வைத்தவர்கள் இறந்த பிறகு ஏ.சி. போட்டு வெந்த புண்ணை குளிர வைக்கிறார்களோ?


  முள்ளை முள்ளால் எடுத்து... முல்லைப் பூ போல உள்ளத்தை மணக்க வைத்து... இனி காது கேட்காது என்று சொல்ல முடியாத அதிர்ச்சி வைத்தியம்...!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தடயத்தை விட்டு செல்லக்கூடாது என்ற முன் எச்சரிக்கையோ :)

   பொதுவில் வைப்போம் என்று சொன்னவன் ஏமாளியா :)

   நல்லாத்தான் குளிர வைக்கிறாங்க :)

   குரங்கு மார்க் வைத்தியம் சரிதானே :)

   Delete
 4. Replies
  1. ஏக பத்தினி விரதனை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 5. Replies
  1. முள்ளை முள்ளால் எடுத்ததுதானே:)

   Delete
 6. 01. கேமரா திரு போயிடாமல்...
  02. இனியெனினும் விதவன் என்று சொல்லுவோம் ஜி
  03. வேதனையான உண்மை வரிகள்
  04. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அது அவங்க கவலை :)
   நாம சொல்ல ஆரம்பிக்கிறோம் ,விதவன் :)
   உண்மை வலிக்கத்தான் செய்கிறது :)
   இனி ,முள் உறுத்தல் இருக்காது தானே :)

   Delete
 7. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. விதவனுக்கு என்ன குறை ,சொல்லலாம்தானே :)

   Delete
 8. மனைவியை இழந்தவனுக்கு “தபுதாரன்“ எனத் தமிழில் பெயர் இருந்தாலும் பத்தினி..??

  ஹ ஹ ஹா

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னது தபுதாரனா?சிபு சோரன் என்பதை வேண்டுமானால் கேள்வி பட்டிருக்கிறோம் :)

   Delete
 9. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி,மெயில் அனுப்பி விட்டேன் ஜி :)

   ஏற்கனவே செய்து விட்டார்கள் ,நான் ரொம்ப லேட் :)

   Delete
 10. சிசிடிவி காமேரா இப்போதெல்லாம் ஜுஜுபி போலத் தெரிகின்றது ஜி..

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. சோகம் என்னவென்றால் .பல இடங்களில் வேலை செய்ய வில்லை :)

   Delete
 11. காதுக்கதை (உண்மைச் அம்பவம்) அருமை!

  ReplyDelete
  Replies
  1. ரியல் இல்லை,இதுவும் ரீல்தான் :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  இரசித்தேன்.... வாழ்த்துக்கள்...த.ம 10
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சிக்கியதை ரசித்தேன் :)

   Delete
 13. ஆ... உங்களுக்கு மட்டும் ஓட்டு வந்துவிட்டது... பரம ரகசியமோ....???ஃ.

  ReplyDelete
  Replies
  1. விழுகிறது ,ஆனால் மிகவும் தாமதமாக :)

   Delete
 14. ரசித்தேன்....

  காது கேட்டது.... நல்ல கதை. மூன்று பதிவுகளையும் தொடர்ந்து படித்தேன். முடித்தேன்!

  ReplyDelete