25 November 2015

அனுஷ்கா ...அன்று கொடுத்ததும் ,இன்று கொடுப்பதும் :)

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் ?

              ' 'கல்யாண ஆல்பத்தில் உள்ள எல்லா 


போட்டோக்களிலும்   சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது 


மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் 


முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''

                   

                        ''அதில் ,கூட நிற்கிறவங்க நடிகையோட 


டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !'' 

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

      ''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
      
          ''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''
     

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...
இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கே உரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?


அனுஷ்கா தான் கொடுப்பதும் ,கெடுப்பதும் !

                ''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வரும்னு  சொல்றாங்களே ,உண்மையா?''


            ''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க !ஆனா இப்போ நடிகை ஆகி ரசிகர்கள்   தூக்கத்தை  கெடுக்கிறாங்களே!''
                                 

                                                
                                                                                            


                                               

 ரோஜாக்கள் ஜாக்கிரதை !

ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம் !

28 comments:

 1. தெரிந்தும் ஏன் கல்யாணம் செய்யவேண்டும்?!!!!

  நல்ல மருமகள்!!! அவளும் மாமியார் ஆவாள் ஒருநாள்!

  இப்படி எல்லாம் சட்டமா!

  அனுஷ்கா! கொஞ்சம் பெரிய படமாகக் கிடைக்கவில்லையா!!!

  குத்துவதற்குத்தானே முள்!

  ReplyDelete
  Replies
  1. தலைஎழுத்து என்பார்களே ,நம்பததான் வேண்டியிருக்கு :)

   அப்போ பார்த்துக்கலாம் :)

   நானும் நம்பவில்லை ,ஆனால் இருக்கே :)

   பெருசாக்குவது நம்ம கையிலேதான் இருக்கே :)

   அதானே ,குத்தலைன்னா அதென்ன முள் :)

   Delete
 2. இவரோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ணுன வக்கீல் வர்றதுக்கு முன்னாலே இந்த நடிகையோட வக்கில் வந்துட்டாரே...!


  மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ பார்த்து வளராம போயிட்டாளே...!


  வளாகத்திற்குள் வருகிறவர்கள் நன்றாக இழுத்து மூடிக்கிட்டு வருகிறார்களா என்று பார்க்க படம் பிடித்ததால் இல்லையே...!


  நல்ல டீச்சர் கிடைக்கிற யோகத்தப் பொறுத்தது...! நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி...யம்மா...!


  ரோஜாவை முத்தமிடாதே ....! அவரின் கணவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்...! சூரியக் கணவனின் பார்வையில் பனித்துளியே பொசுங்கி விடுவாய்...! ரோஜாவை முத்தமிடாதே ....!

  த.ம.1
  ReplyDelete
  Replies
  1. வக்கீல்கள் சந்திப்பு மிக அருமை :)

   கார்க் பாலை வீச சொல்லும் போதே அது தெரியுதே :)

   இப்படியும் ஒரு ஆராயச்சியா :)

   வர வர டீசசர்கள் தொல்லை தாங்க முடியலே :)

   பனித துளியை பொசுக்க சூரியப் பார்வை போதுமா :)

   Delete
 3. அனுஷ்கா ரசிகரே... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நான் குஸ்கா ரசிகனும் கூட :)

   Delete
 4. ஹஹஹ்ஹ

  ரொம்பவே நல்ல மருமகள்....வாழ்க...

  அனுஷ்கா என்ன அழகு! இன்னும் கொஞ்சம் படம்போட்டுருக்கலாமோ...

  ReplyDelete
  Replies
  1. மாமியார் ஆகாமலே இந்த மருமகள் காலமெல்லாம் வாழ்க :)

   அழகுக்கு சாட்சியாய் ஒரு படமே போதும் :)

   Delete
 5. 01. சகுனிகளா ?
  02. எல்லாம் பாசம்தான்
  03. வெளியே சொன்னால் ? வெட்கக்கேடு
  04. யாரு ? தூக்கத்தை ஜி
  05. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நவீன சகுனிகள் :)
   அதென்ன ,மாமியார் மீது மட்டும் :)
   சொல்லாட்டி :)
   என்னை மாதிரி 'யூத'கள் தூக்கததைதான் :)
   கன்னத்து ரோமம்கூட சிலநேரம் முள்ளாகி விடுகிறதே :)

   Delete
 6. அடடா...

  தாடிக்கு வந்த சோதனை?!!!

  ReplyDelete
  Replies
  1. அதுவும் தேடி வந்த சோதனை :)

   Delete
 7. அதானே ரப்பர் பால் சரியில்லை;கார்க் பால்தான் சிறந்தது!என்ன அன்பு!
  அருமை அனைத்துமே

  ReplyDelete
  Replies
  1. அன்பு ஸ்பின் பால்லாய் சுழன்று அடிக்குதே :)

   Delete
 8. அருமை அய்யா... வார்த்தைகள் ரொம்ப நெருக்கமாக உள்ளது...படிக்கும்போது ஏற்ப்பட்ட சிரமம்

  ReplyDelete
  Replies
  1. இந்த வயதில் வரக்கூடாதே :)

   Delete
 9. ஜோக்குகள் ரசித்தேன்.
  நீதி மன்ற தகவல் புதிது.
  வீடு கடை வாடகைக்கு விடுவதில் இதுபோல் சிரமங்கள் உள்ளன. காலி பண்ண வைப்பது மிகக் கஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு நல்லவர்கள் என்றாலும் கடையை காலி பண்ணச் சொன்னவுடன் ,வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று கோர்ட்டுக்கு செலவது கொடுமை :)

   Delete
 10. ரோஜா முள்ளைவிட.... தாடி முள்ளு அவ்வளவு கூர்மையானவையா....!!!!

  ReplyDelete
  Replies
  1. தாடி முள்ளு ரோஜாவை குத்தப் போகிறதா :)

   Delete
 11. வணக்கம்
  ஜி
  வக்கில் எல்லோரும் இப்படித்தானோ இருப்பார்கள்...ஹி...ஹி...ஹி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அவங்களும் பிழைக்கணும் இல்லையா :)

   Delete
 12. அப்போநடிகைக்கு டிவோர்ஸ் ஆகும் முன்பேதிருமணமா.?இன்னொரு மருமகள்...! ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கையெழ்த்திட்டால் போதுமா.அனுஷ்காஆஆஆஆஆ.! நீளமான தாடி குத்தாது.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ,அப்படியொரு சட்டச் சிக்கல் இருக்கோ :)
   இன்னொரு மருமகள் ,இரும்பு குண்டு வாங்கிக்க சொல்லலாம் :)
   வேலிக்கு ஓணான் சாட்சி :)
   ஆஹ்ஹா அழகுதானே :)
   மடங்கிடுமா :)

   Delete
 13. http://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy

  ReplyDelete
  Replies
  1. பதிவை இணைத்து விட்டேன் ,ஆனால் வரவில்லையே :)

   Delete
 14. ரசித்தேன் ஜி...
  அனுஷ்கா தூக்கத்தைக் கெடுக்கிற நிறைய போட்டோ இருக்கே...
  இதில் என்ன கஞ்சத்தனம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே தூக்கம் கேட்டது போதாதா ,என் பங்குக்கு நான் வேறு கெடுக்கணுமா :)

   Delete