28 November 2015

இவர் வாய்ஜாலம் மனைவியிடம் பலிக்குமா :)

                    ''பிரபலமான tv தொகுப்பாளருக்கு ,யாருமே பொண்ணு தர மாட்டேங்கிறார்களாமே,ஏன்  !''
                    ''பெண்டாட்டியிடமும்   கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவார்ங்கிற பயம்தான் !''

சொல்றதுக்கு  நல்லாவா இருக்கும் ? 

                ''பத்து வீடு பார்த்ததில் நடுத்  தெருவிலே இருக்கிற வீடு நல்லாயிருக்கே ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''

             ''நடுத்  தெருவிலே இருக்கேன்னு சொன்னா எல்லோரும்  சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''
வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி :)

               ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
               ''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...
1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 

அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !இதுவும் பழிக்கு பழியா ?
          ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 


 திருமண அகழி !

மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனையே male !

19 comments:

 1. இந்தியா - ஜிம்மி...
  திருமண அகழி....
  நடுத்தெரு...
  டிவி தொகுப்பாளர்...
  என எல்லாம் ரசித்தேன் ஜி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசனைக்கு நன்றி !

   Delete
 2. வணக்கம்
  ஜி
  இப்படி போகுதா சம்பவம்... இரசித்தேன் ஜி. த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட ஆள் வீட்டிலே வாய் மூடி மௌனியாய் இருப்பாரா :)

   Delete
 3. Replies
  1. திருமண அகழியைதானே :)

   Delete
 4. நல்ல அப்பா... நல்ல பையன்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்க நூறாண்டு :)

   Delete
 5. கேள்வி கேட்டுட்டு பதில் சொல்ல விடாம இருந்தா எப்படி? அதான் இனிமே நீங்க கூப்பிட்டா வரமாட்டேன்னும் பொண்ணும் தர மாட்டேங்கிறார்களாம்... சொல்லிக்கிட்டாங்க...!


  நடுத் தெருவிலே நிக்க வச்சாத்தானே... உட்காரத்தானே போறீங்க...!


  வெங்காய வெடியை என்னிட்ட கொடுத்து... நானும் பேண்ட் பின் பாக்கட்டுல போட்டு பஸ்ஸில உட்கார்ரப்ப... வெடிச்சு... கல்லு பின்னால உள்ள போயிட்டுச்சுடா...! காயமே இது பொய்யில்லடா...!


  நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்...!


  இந்திய நாய் நன்றியுள்ளதுன்னு ஜிம்மிக்கு தெரியுமுல்ல... அதுனால வாலாட்டட்டுமுன்னு புஷ் நெனச்சு இருப்பாரு...! புஷ்////வானமா போயிடக்கூடாதில்ல...!


  பூனை முடிஞ்சா கரை ஏறட்டுமுன்னு சொல்ல முடியல..அரசர் காலத்துக்குப் பிறகு அகழிய யாரும் தூர்வாராம தூர்ந்து போச்சு...!

  த.ம.4
  ReplyDelete
  Replies
  1. பதில் சொல்ல விடாமல் வேறு தடுக்கிறாரா "_

   உட்கார்ந்தாலும் அசிங்கம்தானே :)

   கல்லு தூள் தூள் ஆகலையா :)

   நன்றியிருந்தா பரவாயில்லை ,அடிமையிருக்கே :)

   மீளவே முடியாத அகழியா இது :)

   Delete
 6. 01. இதுகூட பிரட்சினையா ? அட ஆஞ்சநேயா....
  02. முன்னெச்சரிக்கைதான்
  03. அப்பனுக்கும் வேட்டா
  04. வாழ்க மணமக்கள் தொடர்ந்து...
  05. பழிக்குப்பழி
  06. இதுவும் சரிதானோ...

  ReplyDelete
  Replies
  1. ஆஞ்சநேயன் மாதிரியே இவரும் இருக்க வேண்டி வருமோ :)
   இதிலுமா :)
   வேட்டு எல்லோருக்கும் பொதுதானே :)
   நூறாண்டு :)
   நல்லதுதானா :)
   இன்னுமா ஐயம் :)

   Delete
 7. கேள்வி கேட்டாலும் பராவாயில்லை..கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலேன்னு... ..வேறு எதாவது கொடுத்தால் ........

  ReplyDelete
  Replies
  1. அதுக்குதான் ,எதுக்கு வம்புன்னு நினைக்கிறாகளோ :)

   Delete
 8. 'மேல்' என்று முடியும் அந்த
  கீழ் உள்ள தத்துவம்...
  அருமை!

  ReplyDelete
 9. ஜோக்கான தத் துவம தானே ?

  ReplyDelete
 10. ரசித்து, சிரித்தேன்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. male ,என்றும் மேல்தானே :)

   Delete
 11. நகைச்சுவை மட்டுமல்ல. பல்சுவையும் வரும் என நிறுவும் எழுத்துகள்.
  தொடர்கிறேன் பகவானே!

  நன்றி.

  ReplyDelete