29 November 2015

டைவர்ஸ்... அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?


சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் ?
                ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பமுடியலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
                ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''
டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?
         ''அதிர்சசியான  செய்தியைச் சொன்னால் விக்கல்  நின்னு விடும்னு மனைவியிடம் ,உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
          
              ''விக்கல் நின்றதா ?''
           ''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           

தணிக்கையா ? தனியா  கையிலேயா ?
              "வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
                        "தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு  பண்றாங்களோ என்னவோ ?"

             அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் !

மாறும் உலகில் மாறாதிருப்பது .......
கரப்பான் பூச்சியும் ,
அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் கூச்சமும் !


28 comments:

 1. காலையில் சிரிப்புடன் தொடங்கினேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. இன்றைய ஞாயிறு ,எப்படி கழிந்தது என்று நாளை வந்து சொல்லுங்கள் :)

   Delete
 2. பாயாசம்ன்னாலே... இப்பல்லாம் ரொம்ப ஆயாசமாத்தான் இருக்கு...!


  விக்கல் நின்னாலும்...நக்கலா எப்ப டைவர்ஸ்ன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா... அதிர்ச்சி வைத்தியம் கொLத்தது ரொம்பவே அதிர்ச்சியா... சிக்கலாத்தான் இருக்கு...!


  பாவம்... பொழச்சுட்டு போகட்டும்ன்னு... ஆ.... பாசத்தில... ஆபாசத்த கண்டும்... காணமா இல்ல... காணட்டும்ன்னு கனிவா விட்டிடுறாங்க...!


  உலகமே அழிஞ்சாலும் கரப்பான் பூச்சிய அழிக்க முடியாதில்ல...அது ரொம்பத்தான் ரப்பான பூச்சி...! நிரந்தரம்... நிரந்தரம்... நீதான் நிரந்தரம்...!
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. நோய்களின் முதல்வன் படுத்தும் பாடு இது :)

   சிக்கல் எப்படி அவிழுமோ :)

   கனிவு காரணமல்ல .காசு பார்க்கும் ஆசைதான் காரணம் :)

   அதான், கரப்பான் மீசையை தூக்கிட்டு திரியுதே :)

   Delete
  2. பதிவு மட்டுமல்ல பகவான்ஜியின் பின்னூட்ட அசத்தலுக்கும் கேட்கவா வேண்டும்?!!!

   ஹ ஹ ஹா


   தொடர்கிறேன்.

   Delete
  3. அசத்துவது உங்களின் கருத்தும்தான் :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன். அதிலும் பக்கத்து இலைக்கு பாயாசம் அருமை.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. கரப்பானின் தனித்தன்மையை நீங்களும் எழுதி இருந்தீர்களே ,அதுவும் அருமை :)

   Delete
 4. Replies
  1. சென்சார் செய்வது சரியா ஜி :)

   Delete
 5. பாயாசம் என்றால் பால்பாயாசம்தான். நீங்கள் பழுப்புக் கலர் பருப்பு பாயாசம் படம் போட்டு விட்டீர்களே? டைவர்ஸ் ஜோக்கை நன்றாகவே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பழுப்பாய் இருந்தாலும் பருப்பே போட்டிருந்தாலும் பாயாசம் பாயாசம்தான் :)

   Delete
 6. அது என்ன பாயசம் பாஸ்!! பிரவுன் கலர்ல இருக்கு!!!
  பார்த்தாலே உடம்பு கூசுது தான்:)

  ReplyDelete
  Replies
  1. முந்திரி கரைஞ்சி கலந்து இருக்குமோ :)
   ஆனால் ,அது என்றும் மார்க்கண்டையன்:)

   Delete
 7. நல்லவேளை பாயசம் செய்வதையே நிறுத்திவிடவில்லை. சொன்னவருக்கே அதிர்ச்சி வைத்தியம் அதற்காகவே படம் பார்க்க வருபவர் ஏமாறக்கூடாது அல்லவா. கரப்பான் பூச்சி மாறவில்லை சரி அதையே வறுத்து உண்பவர்களுக்குக் கூசுமா.?

  ReplyDelete
  Replies
  1. பாயாசத்தை நிறுத்தி விட்டவர்கள் மெஜாரிட்டி ஆகிவிட்டார்களே :)
   இப்படி செம் சைடு கொள் அடிக்கலாமா :)
   ரொம்ப தாராளம் தான் :)
   அவ்வ்வ்வவ் ,வறுத்து வேறு சாப்பிடுறாங்களா :)

   Delete
 8. Replies
  1. பாயாசம் ஓஹோதானே :)

   Delete
 9. விக்கல் மருத்துவம் நன்று

  ReplyDelete
  Replies
  1. வில்லங்க மருத்துவம் என்று சொல்லுங்க அய்யா :)

   Delete
 10. 01. நல்ல கண்டுபிடிப்பு ஜி
  02. இவனுக்கு விக்கல் வந்துருக்குமே..
  03. இதுதான் உண்மை ஜி
  04. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் சர்க்கரை விலை குறையவில்லையே :)
   வந்தது நிக்க மாட்டேங்குதே :)
   உண்மை வெல்லட்டும் :)
   கூச்சமுமா ,சூப்பர் :)

   Delete
 11. எப்போ திண்ணை காலியாகும் என்று ஒரு ஆளு..டைவர்ஸ் அதிர்ச்சியில்லாம காத்திருப்பாரே.........

  ReplyDelete
  Replies
  1. தெரிந்தும் ஏன் அவர் கிணற்றில் விழப் போகிறார் :)

   Delete
 12. டைவர்ஸ் விஷயத்தில் எதிர்பாராத திருப்பம்!

  கரப்பான் - கூச்சமா, அருவெறுப்பா!

  ReplyDelete
  Replies
  1. தேவியுடன் தேவையா இது :)

   இரண்டும்தானே :)

   Delete
 13. ஹும் இப்படிப் பாயாசம் படம் எல்லாம் போட்டு வெறுப்பேத்தக் கூடாது ஜி ஹஹஹஹ்ஹ் பின்ன நாங்கள் இருவருமே ரொம்ப ஸ்வீட்டுங்கோ...அதைப்பார்த்து...ம்ம்ம்ம்

  கரப்பான் பூச்சி, கொசு எல்லாம் ஃப்ரை பண்ணிச் சாப்பிடுகின்றார்களே ஜி....

  ReplyDelete
  Replies
  1. வெறுப்பா ,அதை பார்த்துதான் நாம் ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறேன் :)

   நாம் சாப்பிடாத எதுவும் நமக்கு ...கருமம் ,கருமம்தான் :)

   Delete