3 November 2015

நடிகையை கட்டிக்கப் போறவரின் எதிர்ப்பார்ப்பு :)

                     ''கல்யாணத்துக்கு பிறகு , நடிப்பது என்பது கணவரின் கையில்தான் இருக்குன்னு  உங்களைக் கட்டிக்கப் போற நடிகை சொல்லியிருக்காங்க ,நீங்க என்ன சொல்றீங்க !''

                  ''நடிச்சா கிடைக்கும் வருமானம்  யார் கையிலே இருக்கும் என்பதை பொறுத்தது ,அது !''
                 
              

வரப்பு தகாறுக்கு வயலை விற்றது போல :)

               ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
                  ''அதையேன்  கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுகிட்டே இருக்கார் !''அழகு நிலையம் செய்த 'அழகு 'காரியம் !

               ''ஏண்டி ,அந்த பியூட்டி பார்லர் விளம்பரத்திலே ' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
                            
              ''மாயமாப் போச்சு ,அந்த பியூட்டி பார்லர் !''


ஆயிரம் டன் தங்கம் ,ஞாபகம் வருதா ?

இந்தியா இன்ஸ்டன்ட் வல்லரசு ஆகும் கனா 
தகர்ந்துவிட்டது ...
சாமியார் சோபன் சர்க்காரின் அருள்வாக்கை நம்பி ...
ஆயிரம் டன் தங்கத்திற்கு ஆசைப்பட்டு ...
அவர் சொன்ன இடத்தில் பன்னிரண்டு நாட்கள் தோண்டிப் பார்த்தும் ...
 ஒரு கிராம் தங்கம் கூடக் கிடைக்கவில்லை ...
ஒரு சாமியார் கண்ட கனவை நம்பி ...
இவ்வளவு செலவு செய்வதாவென்று சகல தரப்பும் கண்டனம் தெரிவித்தபோது ...
இல்லை இல்லை ,தொல்பொருள் ஆய்வுத்துறை ஏதோ ஒரு உலோகம் அங்கே  அடியில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளதாக ...
மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியது ...
அந்த உலோகமாவது சிக்கியதாவென்றால்அதுவும் இல்லை !
தோண்டும் பணி நடந்து கொண்டிருந்த போது சும்மா இருந்த அந்த சாமியார் இப்போது ...
என் முன்னிலையில் தோண்டினால் மட்டுமே தங்கம் கிடைக்குமென்று மீண்டும் அருள்வாக்கு
கூறியுள்ளார் ...
மேலும் அகழ்வுப் பணி நடப்பதை டீவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார் ...
இந்த 'சர்க்காரின் 'புருடாவுக்கு மத்திய சர்க்கார் முடிவு கட்ட வேண்டுமென்றால் ...
ஆயிரம் டன் தங்கம் கிடைத்துவிட்டால் 
சாமியாரை நாட்டின் முதல் குடிமகன் ஆக்கிவிடுவது ...
கிடைக்காவிட்டால் தோண்டப்படும் குழியையே 
சாமியாரின் ஜீவசமாதி ஆக்கிவிடுவது !
இதற்கு சாமியார் கட்டுப்படுவாரானால் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்து விடலாம் !
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////
          தங்கப்புதையல் ...முந்தையப் பதிவு>>>
பசி வந்தா இப்பிடியுமா ?
                          ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?

                      ''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''

28 comments:

 1. Replies
  1. பசி வந்தா ,அட்சதை அரிசியும் வயிறுக்குள் போகும்தானே :)

   Delete
 2. நடிகை ‘கை’யிலதான் பணம் இருக்கும்...! அவுங்க அளவுக்கு நடிக்கச் தெரிஞ்சா அது ஒங்க கையில...! முடியுமா என்ன?


  ‘ஒத்திக்க ஒத்திக்கவா மனசுல’


  கரும்புள்ளி மறைஞ்சு முகமே கருப்பா மாறிடுச்சு...மாயா... தூங்கிட்டு இருந்த மிருகத்தை எழுப்பி விட்டிட்டியே...!


  ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறார்... ஞானத் தங்கமே! இவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே! ’


  இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... ரேஷன் அரிசியைக் கொடுங்கன்னு... நா சொல்றத யாரு கேக்குறா...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. அதெப்படி முடியும் :)

   அதுக்கும் ஒத்திகையா பார்க்க முடியும் :)

   மிருகம் தூங்கிட்டு இருந்தது யார் மனசிலே :)

   இருக்கும் இடத்தையே இழுத்து பூட்டும் நிலைமை :)

   பசி வந்த பிறகு ரேசன் அரிசியாவது ஒண்ணாவது:)


   Delete
 3. Replies
  1. முகூர்த்த நேரம் ரொம்ப தாமதமா ,அட்சதை அரிசி இந்த பாடு படுதே:)

   Delete
 4. *நல்லா நடிக்கட்டும் நா தெலையட்டும் :)
  *நீதிபதி வேலையே ஒத்திவக்கிறதுதானே :)
  *அழகு ஆபத்துங்குறது இதானா? :)
  *அடப்பாவிகளா எ 100கி கூ கிடைக்காதா? :)
  *ப வ ப ப போகுமே? :)

  ReplyDelete
  Replies
  1. நடிக்கிற மனைவியை யாருக்குத்தான் பிடிக்கும் :)
   அது யாரால் முடியும் :)
   அழகும் ஆபத்தும் கூடப் பொறந்தவையா:)
   நீங்களுமா கனா காண்றீங்க:)
   பத்தும் போகுமோ இல்லையோ,உங்களுக்கு எழுத்தும் பறந்து போகுதே :)

   Delete
 5. அட்சதை....ஹஹஹ

  ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. அட்சதை அரிசி வயிற்றுக்குள் ஒண்ணும் செய்யாதுதானே:)

   Delete
 6. நடிப்பதில் கிடைக்கும் பணம் நடிப்பவருக்குத்தானே அவர் விருப்பப்பட்டு ஏதாவது போட்டால் லாபம் என்றிருக்க வேண்டியதுதான் ஒத்தியில் ஒரு வார்த்தச் சிலம்பம் எங்கே பணம் கட்டச் சொன்னார்கள்?ஏறத்தாழ மறந்து போன செய்தியை அகழ்வாய்கிறீர்கள் தங்கம் கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று தெரியாத .........

  ReplyDelete
  Replies
  1. அங்கேதானே வில்லங்கம் ஆரம்பிக்குது :)
   சிலம்பத்தை ஒரே சுற்றுதான் சுழற்றி இருக்கேன் :)
   டிரைனிங் தரப் படும் என்று பணம் கட்டச் சொல்கிறார்களே :)
   வரலாறே மறக்க முடியலையே :)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  வரப்பு தகாறுக்கு . அழகு நிலையம் போன்ற வற்றில் சொல்லிய நகைச்சுவை நன்று... ஜி... மற்வைகளை இரசித்தேன் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்னு இதுக்குத்தானா :)

   Delete
 8. அருமையான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லுங்க ,அட்சதை அரிசியை சாப்பிடலாமா :)

   Delete

 9. ரசித்தேன் பகவானே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. சலிப்பு ஒண்ணும் தட்டலையே :)

   Delete
 10. 01. நம்ம சகலைக்கு நல்ல நோக்கம் உண்டு ஜி
  02. இது தெரிஞ்ச விசயம்தானே...
  03. ஏதோ ஒண்ணு மறைஞ்சுச்சுல்ல....
  04. ஜீவசமாதி ஆவது உறுதி
  05. அவ்வளவு பசியா... அடப்பாவமே...

  ReplyDelete
  Replies
  1. சகலைன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு :)
   பிறகேன் நீதிமன்றத்தை நம்பணும்:)
   மறைய வேண்டியது மறையலையே :)
   சாமியார் தப்பிச்சிட்டாரே:)
   சுவையாய் இருந்து இருக்குமோ :)

   Delete
 11. '//'அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''//
  பாவம்,ரொம்பப்பசி!ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. ஆசீர்வாதம் வெறும் வாயால் செய்தால் போதும்னு நினைச்சிட்டார் :)

   Delete

 12. ஆயிரம் டன் தங்கம் ,தாங்கள் சொன்ன பிறகுதான் ...தங்கம் வராம..ஞாபகம் மட்டும் வருது நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. ஐயோ ஐயோ ,ஒண்ணா ரெண்டா ஆயிரம் டன் போச்சே :)

   Delete
 13. எல்லாவற்றையும் ரசித்தேன். சாமியாருக்கு ஜீவசமாதியா? நடக்குமா?

  ReplyDelete
  Replies
  1. நம்மை வேண்டுமானால் அனுப்புவார் :)

   Delete
 14. Replies
  1. சீரக சம்பாவா இருக்குமோ :)

   Delete