30 November 2015

மனைவிக்கே தெரியாமல்....?

சாம்பிள் டீ கொடுத்தது இதற்குதானா :)

              ''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
              ''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்னு சொல்றாளே !''


 முட்டையை கோழிக் குஞ்சாய்  பொறித்த  இன்குபெட்டர்  வேற !             
              ''என் குழந்தை எடை குறைவாய் பிறந்ததால், இன்குபெட்டரில் இருக்குன்னு ,பிராய்லர் பண்ணை நடத்தினவர் கிட்டே சொன்னது தப்பா போச்சு !''
               ''ஏன் ?''
              ''இன்குபெட்டர்  ஒண்ணு என்கிட்டே சும்மாதான் இருக்கு ,வேணும்னா வாங்கிக்கங்கன்னு  சொல்றாரே !''

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

             '' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
          
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''

             ''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது 

தரம் ஊதினா போகுதே !''
 1. உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !
         ''ஹலோ ,யாரு தினேஷா ?''

        ''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 

         ''சாரி ,ராங் நம்பர் !''

மனைவிக்கு தெரியாமல்....?

           "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல்
 வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
              
            "எதை ?"
              "பேங்க் பாலன்ஸ்சைதான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

? யை ! ஆக்குவதுதான் வாழ்க்கை!

         முடியுமா என்பதே  தவறு ..


'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல்  உதிர்வதில்லை!

20 comments:

 1. ‘‘குழம்பில... உப்பு சரியா இருக்கான்னு நக்கிப் பாக்கிறதில்ல... அதுமாதரிதான்... இதுக்குப் போயி என்ன வேலையவிட்டு நிப்பாட்டலாமா?’’
  “என்னடீ சொன்னாய்... நக்கிப் பாத்தியா...டீ...!”


  கோழிக் குஞ்சு மிதிச்சு இன்குபெட்டர் சாகவா போவுது...குழந்தைக்கு வாங்கிக் குடுங்க... விளையாடிட்டுப் போவுது...!


  டிரைவர் இருந்தாத்தான் எங்காவது இடிச்சு நிப்பாட்டுவாரு...!


  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... ‘தாயைப்போல் பிள்ளை’ன்னு சொல்றது ராங்காப் போயிடுச்சேம்மா...!


  மனைவிமார்கிட்ட ஸ்லிப் ஆயிடக்கூடாதுன்னுதான்...!


  “முடிவாச் சொல்றேன் நீங்க அவள வச்சிருக்கீங்களா...?”
  “ நீதானே சொன்னே...முடியுமா என்பதே தவறுன்னு ... இது சோதனை ஓட்டம்தான்...!”

  த.ம.1
  ReplyDelete
  Replies
  1. எஜமானி அம்மா போட்டு தருகிற டீ ,சரியில்லை என்று இப்படி சொன்னால் கோபம் வரத் தானே செய்யும் :)

   இதை பார்த்து எல்லா குழந்தைகளும் இதையே கேட்டுறப் போவுது :)

   அதுக்குத் தானா டிரைவர் :)

   உனக்கு யாருப்பா சொன்னது நான் குளிப்பேன் என்று :)

   மனைவியிடம் ஆனால்தான் என்ன :)

   சோதனை ஓட்டமே ,அதிருதே :)

   Delete
 2. ரசித்தேன். சிரித்தேன்.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தித்திக்கும் தேன்தானா :)

   Delete
 3. Replies
  1. சொன்னது நான் தானா ,கிள்ளி பார்த்துக்கிறேன் :)

   Delete
 4. மனைவிக்கு தெரியாமல்......கொங்ச நிமிடமாவது சுதிந்திரமாக இருக்கட்டுமே நண்பரே......

  ReplyDelete
  Replies
  1. எங்கே அந்த ac ரூமிலேயா :)

   Delete
 5. Replies
  1. அருமை எது ,சாம்பிள் டீதானே :)

   Delete
 6. தினேஷ்னா கொஞ்சம் தள்ளித்தான் நிக்கணுமோ?! ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. பயப் படாதீங்க ,இந்த தினேஷ் தான் குளிக்கிறானே :)

   Delete
 7. 01. இது அவள் வழி
  02. யோசனை மஞ்சிவாடு
  03. அதானே... தேவையில்லை
  04. அம்மாவுக்கே ராங் நம்பரா ?
  05. உண்மைதான்
  06. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. வேலைக்கே வேட்டு வச்சிருச்சே :)
   மஞ்சி வாடுதான் ,இங்கு பெட்டர் கோழிக் குஞ்சுக்கு தானே :)
   ஊருக்கு போய் சேர்ந்த மாதிரிதான் :)
   சின்னப் பய பிள்ளைங்க :)
   இதை மட்டும் மறைத்தால் பரவாயில்லை :)
   இதை மறக்க முடியுமா :)

   Delete
 8. டீயிலும் ஏற்ற தாழ்வா?எடை குறைந்த பிள்ளைக்கு கோழி பொரிக்கும் இங்குபேட்டரா.விசிலை மூன்றுதரம் ஊதினா....ஓ குளிக்காதகேஸ்போல...மனைவிக்குத் தெரியாமல் பேங்க் பாலன்ஸ் மட்டும்தானா ? தத்துவம் ?

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் போலிருக்கு :)
   அது பெட்டர் இல்லையா :)
   ஏலம் விடுவதாய் ஆகிவிடும் :)
   பெய்த பெருமழையில் குளித்து இருப்பானோ :)
   அதானே :)
   அப்படியும் சொல்லலாம் :)

   Delete
 9. //'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல் உதிர்வதில்லை!//

  'முடி'வில்லாமல் தொடரட்டும் தங்கள்
  சிரிப்(புப்)பணி!

  ReplyDelete
  Replies
  1. நான் தொடர்கிறேன் ,நீங்கள் தலை முடியை பிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரிதான் :)

   Delete
 10. ஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. வேட்டு வைப்பதில் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கிறானா :)

   Delete