6 November 2015

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா :)

காலங்கார்த்தாலே  குரங்கைத்  தேடி அலைய முடியுமா :)   

              ''என்ன இது அதிசயம்.....விடிந்தும் விடியாததுமா 

பாலும் பழமும் கொடுக்கிறே ?''
             (இதற்கு ,மனைவி சொன்னது பாதி ,மீதி,தலைப்பைப்
படித்த உங்களுக்கு புரிந்து இருக்குமே :)
                      ''டிவியில் ,இன்று என் ராசிக்கு பாலும் பழமும்
கொடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க ,அதான் !''

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா ?

            ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  

கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''

               ''தோசைக் கல்லுலே தோசைத் தானே 

வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு 

கேட்கிறாளே!''


கணவனை வேலை வாங்கும் மனைவி ?

               ''இப்போ பேட்டிங் பண்றது யாருன்னு நம்ம  

பையன் கேட்டதுக்கு  'கலுவிதரனா'ன்னு 

சொன்னேன்...நீ ஏன்,மீனைக் கொண்டுவந்து என் 

முன்னாடி வைக்கிறே  ?'' 

                ''கழுவிதரணுமான்னு நீங்க கேட்ட மாதிரி 

என் காதிலே விழுந்ததுங்க !''

மழலை அறிந்த முதல் ஒலி !

யார் தேற்றியும் அழுகையை நிறுத்தாத மழலை ...

தாயின் தோளில் சாய்ந்ததும் கப்சிப் ஆனது ...

வழக்கமாய் கேட்கும் லப்டப் ஒலி  கேட்டு !

குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

               ''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே 

தள்ளுறாங்களே ,குருகிட்டே என்ன கேட்டார்?''
         
        ''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு 

சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!

டெங்கு ...அந்த பயம் இருக்கட்டும் !

எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும் 

மூடிக் கிடப்பது ,,திருடனுக்கு பயந்து அல்ல ,

கொசுவுக்கு பயந்துதான் !

12 comments:

 1. என் ராசிக்கு இன்னக்கி... இதக் கொடுத்தா நல்லதுன்னு டி.வி.யில சொன்னாங்கன்னு பாலும் பழலும் ஏந்தி வந்த என்ன... இப்படி ‘குரங்கு கையில கிடைச்ச பூ மாலையா ஆக்கிட்டிங்கலே...!’


  அதானே... ஆம்லேட் போடுறதுக்குதான் அவுங்க வயிறு இருக்கில்ல...!


  என்னப்பா... . கள்ளு விக்கிரானா...? எங்கேப்பா... எங்கே...!


  ‘லேப்டாப்‘ வாங்கித் தாரேன்னு சொன்னதுனால அழுகைய நிப்பாட்டுச்சாம்...!


  வினா வழுவா கேட்கப்படாதில்ல... ‘இந்திரன் கெடுத்தது அந்தப் பொண்ணுதானேன்னு?’ கேட்டிருந்தானே அவருக்கு பெருமை...!


  நீ எல்லாம் கொசு மாதரி... ஊதித் தள்ளிடுவேன்னு சொல்லறதுக்குள்ள... வூட்டான்டே உள்ளே பூந்திடுச்சே...‘கொல்லாம விட மாட்டேன்னு சொல்லாம சொல்லுதே...!’

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. பூ மாலை ஒன்று இன்று புயலானதே :)

   அது சினிமாவில் சாத்தியமாகும்,நிஜத்தில் :)

   ஏன் பிடித்து உள்ளே தள்ளலாம்னு எண்ணமா:)(ரெண்டு அர்த்தம் வருதா )

   பசித்த பிள்ளை பால் குடிக்காது ,லேப்டாப் பார்க்கும் :)

   இது புரட்சிகரமா இருக்கே :)

   அழையா விருந்தாளிக்கும் அன்பு செய்ய நாமென்ன வள்ளலாரா :)
   Delete
 2. 01. ஹாஹாஹா குரங்குக்குகா.... பழம்
  02. சமையலைக் கரைச்சுக் குடிச்சவளோ...
  03. ஹாஹாஹா ஸூப்பர் காது
  04. உண்மைதான் ஜி
  05. அவசியமில்லாத கேள்விதான்
  06. கொசுத்திருடன்

  ReplyDelete
  Replies
  1. ராசி பலன் சொன்னவர் ஆஞ்சநேய பக்தராய் இருப்பாரோ :)
   ஆம்லேட்டே போடத் தெரியாதவ ,ஆம்படையானை எப்படி சமாளிப்பாலோ :)
   கணவன் நழுவுற தண்ணியில் நழுவுற மீன் ,அவரை வேலை வாங்க முடியுமா :)
   பிஞ்சுக் குழந்தைக்கு தெரிந்த ஒலி அது மட்டும்தானே :)
   குருவே மாட்டிக்கிட்டு முழிக்கிறார் ,அவரிடமா இந்த கேள்வி :)
   இந்த கொசுத் திருடனுக்கு காசு பணம் தேவையில்லை :)

   Delete
 3. Replies
  1. என்னாச்சு ஜோக்காளி தளத்துக்கு ?கலக்கல் கருத்துரைகளை காணாமே....ஓபன் ஆவதில் எதுவும் சிக்கலா :)

   Delete
 4. Replies
  1. பால் பழம்,மீன் ,ஆம்லேட் திகட்டலையா:)

   Delete
 5. அதானே! ஆம்லேட் கல்னு ஒண்ணும் இல்லையே!
  அருமை

  ReplyDelete
  Replies
  1. 'ஆம்' அது 'லேட்'டாதான் அந்த இளம் மனைவிக்கு புரியும் போலிருக்கு :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. குரங்கைத் தேடி அலைய முடியாதுதானே :)

   Delete