7 November 2015

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை :)

இதுக்கு மிஸ்டு காலே தேவலே :)
                    ''பரவாயில்லையே ,எப்பவும் மிஸ்டு கால் கொடுப்பவர் ,இப்போ  பேச விரும்புறாரே  ,பேசுறதுக்கு நீங்க ஏன் தயங்கிறீங்க ?''
             ''கடன் கேட்க மட்டும்தான் பேச விரும்புவார் ,அதான் !'' 

 பிள்ளைக்குத் தெரிஞ்சது அப்பனுக்கு தெரியலையே !           
            ''என் செல்லக்கண்ணு ,உன்கூட விளையாட தங்கச்சி வேணுமா ,தம்பி வேணுமா ?''
           ''அடப் போங்கப்பா ,அம்மா வயிற்றில் வளர்றதைக் கூட பார்க்கக் கூடாதுன்னு சட்டம்  இருக்கே ,உங்களால் எப்படி நான் வேணுங்கிறதை  தர முடியும் ?!''

ஒரே  கிட்னியால்  இப்படியும்  நன்மை  இருக்கு !

             ''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான்  

என்னைக் காப்பாற்றி இருக்கா ?''
             
           ''ஒரு கிட்னி தான் உங்களுக்கு  இருக்குன்னு முன் கூட்டியே 

சொன்னதால் ,டாக்டர்  பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் 

பண்ணிட்டாரே !''

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை !

எல்லா ஊர்களிலும் விளைநிலங்களை கூறு போட்டு மனைகளாக்கி  விற்கிறார்கள் ...
ஆனால் ,கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மதுரையில் கொத்தனார் ஒருவர்....
மனைவியையே விற்று இருக்கிறார் ...
பெண் பாவம் பொல்லாததாச்சே ...அந்த பாவத்திற்கு அவரே பலியாகி விட்டார் ...
அவருடன் சேர்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்ற புண்ணியவதிக்கு...
 எதிர் வீட்டு கொள்ளைக்காரனுடன் தொடர்பாம் ...
தாலிக் கட்டியவன் நான் இருக்க ,உங்கள் இருவருக்குள் என்ன ஜோலி என்று ...
நீதியை நிலைநாட்ட நவீன பாண்டிய நெடுஞ்செழியனாய்  பொங்கி எழுந்துள்ளார் கொத்தனார் ...
எல்லார் வீட்டையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரன் ...
தன் மனதை கொள்ளை அடித்தவளுக்காக பேரம் பேசியுள்ளான் ...
ஒண்ண்ரை லட்சம்  விலை நிர்ணயம் செய்யப்பட்டு மனைவி கை மாறி விட்டாள்  ...
பின் தொடர்ச்சி அனுபவ பாத்தியதை ஏதுமில்லை என்று அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டார்களா என்று தெரியவில்லை ...
ஒண்ணரை லட்சம் ஒண்ணரை ஆண்டுகளுக்குள் காலியாகிவிட்டது போலிருக்கு ...
மனைவியை மீண்டும் சொந்தம் கொண்டாட கொத்தனார் வந்த செய்தி ...
வெளியூரில் இருந்த கொள்ளையனுக்குப் போக ...
அடியாட்களின் புண்ணியத்தால் கழுத்தறுபட்டு மேலோகம் சென்று விட்டார் கொத்தனார் ...
கொள்ளையனை மாமியார் வீட்டில் அடைக்க வலை வீசி தேடுகிறார்கள் போலீஸார் ...
மாமியார் வீட்டை மாற்றிக் கொண்ட ஒரே தப்புக்கு...
குழந்தைகளுடன் தெருவில் நிற்கிறாள் தாய் !
தப்பா அர்த்தம் எடுக்காதீங்க!
''முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!''

''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை?''

''அட நீ வேற!கடல்லே முத்து எடுப்பதை பார்க்கணும்னு 

சொல்ல வந்தேன் !

தலைஇல்லா முண்டம் ,இதுதானா?     '' உங்க மாப்பிள்ளையை இந்த தலை  தீபாவளிக்கு 

ஏன் அழைக்கலே ?

     ''என் பொண்ணை கொடுமை பண்ற அந்த 

'முண்டத்திற்கு 'தலை தீபாவளி ஒரு கேடா ?

31 comments:

 1. ‘கொடுத்த கடன கேட்டக் கூடாதுங்கிறீங்களா... பாவம் பேசுங்க...‘
  ‘நீங்க வேற கடன் கேட்கப் பேச முயற்சிக்கிறார்...எவ்வளவு நேரம் போன் அடிச்சாலும்... நா போன எடுப்பேனா?
  ‘நேராவே அவரு...வந்திக்கிட்டு இருக்காரு பாருங்க... போன எடுக்காததுனால’

  தங்கச்சி ரெண்டு... தம்பி ரெண்டு... அப்பத்தான் விளையாட ஜாலியா இருக்கும்... அப்பத்தான் என்ன நீங்க தீராத விளையாட்டுப் பிள்ளைன்னு சொல்வீங்க...!

  ‘நர்ஸ் உண்மையச் சொல்லுங்க... இன்னொரு கிட்னி எங்கே...?’
  ‘இன்னொன்னுதான் இந்த கிட்னி...!’

  தெருவில் நிற்கிறாள் மாதவி மணிமேலையுடன்னு சொல்லுங்க...! கொத்தனார் கோவலன் வெட்டுப்பட்டு கொலையுண்டான்னு சொல்லுங்க...!

  முத்துக்குளிக்க வாரீகளா? மூர்ச்சை அடக்க வாரீகளா...? முத்தம் கொடுப்போமா...? வாம்மா...!

  பொண்ணுக் கொடுத்த தண்டத்துக்காவது மாப்பிள்ளய கூப்பிட்டு... ஒரு அணுகுண்ட வச்சு வெடிச்சிட வேண்டியதுதானே...!

  த.ம.1
  ReplyDelete
  Replies
  1. கடன் அன்பை முறிக்கும்னு சொன்னவங்க முட்டாள்களா :)

   சிங்கார மன்மதன்தான் சந்தேகமில்லை :)

   எவனோ ஒருத்தன் முந்திக்கிட்டு ஆட்டையே போட்டுட்டான் :)

   தவிக்க வைத்த மாதவியும் தவிக்கும்படியா ஆயிடுச்சா :)

   மூச்சை அடக்க என்னால் முடியாதே :)

   முண்டம் ஆக்கிறதுன்னு தீர்மானமே பண்ணீட்டிங்களா :)


   Delete
 2. அதுக்காவது செலவு செய்யத் தயாரா இருக்காரே!

  அட, குழந்தைகள் விவரம்தான்!

  வாய்மையே அல்லது ஒரு கிட்னியே வெல்லும்!

  என்னவொரு ஜனங்கள்.. ச்சே..

  அதானே பார்த்தேன்... நானும் யாரந்த முத்துன்னு பார்த்தேன்! சுடர்மணி பனியன், ஜட்டி ஜோக் மாதிரி!

  கொடுமையான ஜோக்கா இருக்கே..  ReplyDelete
  Replies
  1. செய்ய வேண்டிய செலவை செய்துவிடுவார்,நாணயமான மனுஷன் :)

   நமக்கே சொல்லிக் கொடுக்குங்க :)

   ஓரு கிட்னியை விற்று சாப்பிட்டவராச்சே :)

   எல்லாம் 'தண்ணி ' செய்ற வேலைதான் :)

   பாபுஸ் பேஸ்ட்டையும் சேர்த்துக்குங்க :)

   இவ்வளவு சிறப்பா எல்லாருக்கும் தலை தீபாவளி அமையாதே :)

   Delete
 3. Replies
  1. மிஸ்டேக் கால் நண்பரையும் தானே:)

   Delete
 4. 'என் செல்லக்கண்ணு ,உன்கூட விளையாட தங்கச்சி வேணுமா ,தம்பி வேணுமா ?''
  - "உனக்கு வேற வேலையே இல்லியா நைனா?"

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி,பிள்ளைக்கும் புரிஞ்சுடுச்சா :)

   Delete
 5. வணக்கம்
  ஜிமிஸ்டுcall ஆபத்து ஜி...
  தம்பி வேண்டுமா.தங்கச்சி வேண்டுமா? அன்புச் சகோதரங்கள் ஜி..

  மற்றவைகளை இரசித்தேன். த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் என்று 'மிஸ்'டு காலில் பாடினால்தான் ஆபத்து :)

   Delete
 6. *ஹி ஹி :)
  *அட போப்பா :)
  *தப்பிச்சான் சிவனாண்டி :)
  *மனுசனா அவன் த்தூ :)
  *இருக்கும் இருக்கும் :)
  *மு .த .:)

  ReplyDelete
  Replies
  1. தேவைக்கு பேசித்தானே ஆகணும்:)
   உன்னால் முடியும்னா நீ விரும்பியதை முதல்லேயே பெத்துகிட்டு இருக்கலாமே :)
   சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாரா :)
   அவனாலே 'முடியலே 'முடிந்ததை செய்து இருக்கார் :)
   இருந்தால் தப்பில்லையே :)
   தலை இல்லேன்னா முண்டம்தானே :)

   Delete
 7. Replies
  1. பய பிள்ளே அப்பனைப் பார்த்து சொன்னதை ரசீத்தீர்களா :)

   Delete
 8. நடப்பு விலையை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதால் , கொத்தனார் குமுறி விட்டாரோ.

  ReplyDelete
  Replies
  1. குமுறியதால்,அதன் பலனை அனுபவித்து விட்டாரே :)

   Delete
 9. இப்போதுள்ள குழதைகள் விளைந்தே பிறக்கின்றன... எல்லாம் புரோகிராம் செய்யப்பட்டவை...

  ReplyDelete
  Replies
  1. கருவிலேயே திருவுடையார் என்பார்கள் ,அது இப்போது மிகவும் பொருந்துமோ :)

   Delete
 10. ஹாஹாஹா! அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் செய்ததை ரசீத்தீர்களா :)

   Delete
 11. 01. மிஸ்டு கால் இல்லாவிட்டாலும் இப்படியா ?
  02. இந்தக்காலத்து புள்ளைங்க இப்படித்தான் ஜி
  03. உண்மை உயிரைக் காக்கும்
  04. ச்சே என்ன வாழ்க்கை
  05. நான்கூட என் மாப்ளே முத்துவை சொல்றீங்களோனு நினைச்சேன்
  06. அந்த மா3 மாப்பிள்ளையாக்கும்...... க்கும்

  ReplyDelete
  Replies
  1. சோதனை மேல் சோதனைதான் :)
   மன்மதக் கலையில் மன்னர்களாய் வருவார்களோ :)
   ஒரு கிட்னியும் உயிரைக் காக்கும் :)
   உங்களுக்கே கசந்து போச்சா :)
   எதுக்கும் குளிக்கும் போது மாப்பிள்ளையை கவனமா இருக்கச் சொல்லுங்க :)
   3 மாப்பிள்ளை இல்லை ஒரே மாப்பிள்ளை :)

   Delete
 12. Replies
  1. இருக்கிற ஒரே ஒரு கிட்னியையா :)

   Delete
 13. மிஸ்ட் கால் மிஸ்டேக் கால் ஹஹஹ் ரசித்தோம் ஜி...எல்லாமே

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுமே தொந்தரவு தானே :)

   Delete
 14. ரசித்தேன் ஜி!
  த ம 12

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டு காலே தேவலைதானே :)

   Delete
 15. அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நாமென்ன பகிர்ந்து கொள்கிறோம் ,நம்மாளு கிட்னியை பகிர்ந்து கொடுத்து இருக்காரே :)

   Delete