9 November 2015

மனைவிக்கு தெரியக்கூடாது என்பதால்தானே :)

அப்பனுக்கு தெரியாதா மகனைப் பற்றி :)                 

                   ''உங்க பையன் முத்துக்குளிக்கப் போறானாமே ?''

                  ''ஆமா ,அவன் கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சே !''


  முட்டையை குஞ்சு பொறிக்கும்  இன்குபெட்டர்  வேற !
               ''பிராய்லர் பண்ணை நடத்தினவர் கிட்டே,என் குழந்தை எடை குறைவாய் பிறந்ததால் இன்குபெட்டரில் இருக்குன்னு , சொன்னது தப்பா போச்சு !''              
                         ''ஏன் ?''             
               '''என்கிட்டேயும் இன்குபெட்டர்  ஒண்ணு  சும்மாதான் இருக்கு ,வேணும்னா வாங்கிக்கங்கன்னு  சொல்றாரே !''

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

             '' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
            
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
             ''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே ! 

            ''ஹலோ ,யாரு தினேஷா ?''
           ''இல்லேப்பா , நான்  தினேஷ் அம்மா ,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !''
           ''சாரி ,ராங் நம்பர் !''       
                                                                                
 1. மனைவிக்கு தெரியக்கூடாது  என்பதால்தானே ....?

             "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
                 "எதை ?"
                "பேங்க் பாலன்ஸ்சைதான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

  ? யை ! ஆக்குவதுதான் வாழ்க்கை!

  முடியுமா என்பதே  தவறு ..
  'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல்  உதிர்வதில்லை!

26 comments:

 1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ,நண்பரே !

   Delete
 2. குளியல் ஜோக் ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. ஏன் முத்துக்குளியல் பிடிக்கலையா :)

   Delete
 3. '' பஸ்களில் டிரைவர்கள் எதுக்குப்பா?''

  ஜோக்காளி போக்குவரத்துத் துறையில் அனுபவஸ்தர். அவர் அனுபவத்தில் கிடைத்த இந்த ஆராய்ச்சி முடிவை கவர்மெண்டு ஏத்துக்கிட்டு டிரைவர் இல்லாமல் பஸ் ஓட்டினால் காசு மிச்சமாகி டிப்பார்ட்மெண்டு லாபத்தில் ஓடும்.

  ReplyDelete
  Replies
  1. கூகுள் தானியங்கி காரின் புரோட்டோடைப் மாடலை ,கீழ்க்கண்ட இணைப்பில் சென்று பாருங்கள் ,எதிர்காலத்தில், நம்ம ஊருக்கும் தானியங்கி பஸ் வரத்தான் போகிறது :)
   Read more at: http://tamil.drivespark.com/four-wheelers/2014/google-self-driving-car-prototype-revealed-006547.html#slide19523

   Delete
 4. ‘முத்து நீங்க சொன்னதக் கேட்டிட்டு குளிக்கப் போறானாம்... ஏதாவது குளம்குட்டையைப் பாத்து...நீச்சல் வேற தெரியாதாம்...! போங்க...’
  ‘எனக்கு மட்டும் நீச்சல் தெரியுமாக்கும்... முடிஞ்சா கரையேறட்டும்... இல்லைன்னா நரகாசுரன் அவுட்டாயிட்டான்னு ‘தீபாவளியக் கொண்டாடுவோம்...!’


  அதானே... பாத்தேன்...நா கூட ‘இங்கு பெட்டரா’ இருக்கு...போய் மூஞ்சியில அடிச்சு பேய் மாதரி ஆக்குகன்னு சொல்லலைல்ல...!


  விசில் அடிச்சான் குஞ்சா நீ...! ஒனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது,,, இதெல்லாம் ஊதித் தள்ளனும்டா...!


  தினேஷ்... தீபாவளிக்கு... வருஷத்தில ஒரு நாள் கூட குளிக்கக்கூடாத...?


  பேலன்ஸ் தெரிஞ்சா ஏ.டி.எம். ஸ்லிப்பாயிடும்... நம்மகிட்ட இருந்து மனைவிக்கிட்ட...!


  ‘முடி’ சூடா மன்னனுக்கு இது பொருந்தாதோ...?

  த.ம.3.

  ReplyDelete
  Replies
  1. நீந்தும் நேரம் வந்தால் நீச்சல் தானே வராதா :)

   பிறந்த சிசுவுக்கு இன்னும் என்னென்ன தேவைப் படுமோ :)

   கண்டக்டர் நல்லாவே ஊதித் தள்ளுறாரே :)
   தண்ணியில் அவனுக்குக் கண்டமாம் :)
   பழம்நழுவி பாலில் விழுந்தால் சரிதானே :)
   அவரை விதிவிலக்காய் வச்சுக்கலாம் :)

   Delete
 5. தினேஷ் அம்மா சிரிக்க வைத்தார்.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு காரணம் அவன் பையன்தான் :)

   Delete
 6. ரசித்தேன் ஜி...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  இரசித்தேன்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 8. கலக்கல் ஜோக்ஸ்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 9. 01. ஆறுமாசமா... குளிக்கவில்லையா ? ஒருவேளை சிக்கனவாதியோ ?
  02. தொழில் புத்தி
  03. எல்லாம் விஞ்ஞான வளர்ச்சிதான்
  04. அம்மாவிடமே ராங்நம்பரா ?
  05. நிறையபேரு இப்படித்தான் ஜி
  06. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. உடம்புலே இருக்கிற அழுக்கு காணமல் போயிடும்னு நினைக்கிறான் போலிருக்கு :)
   அதான் இந்த பெட்டர் ஐடியா சொல்கிறார் :)
   ஆளில்லா குட்டி விமானம் பொருட்களை டோர் டெலிவரி செய்யப் போகிறார்களாமே :)
   குளிக்க மாட்டான்னு நண்பன் மேல் அவ்வளவு நம்பிக்கை :)
   கணவன் என்ற ஆணாதிக்க மனப்பான்மை இதுதானோ :)
   முடிந்ததை சொன்னேன் ஜி :)

   Delete
 10. முடிவில் சொன்ன அந்த 'முடி' பற்றிய தத்துவம் நச்.

  ReplyDelete
  Replies
  1. முடிவில் வந்தாலும் அது 'தலை'மைத் தத்துவமாச்சே :)

   Delete
 11. எல்லாமே அருமை பகவானே !

  அதிலும் பஸ் செம தூள் தொடர வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. டாடி எனக்கு ஒரு டவுட்டு என்று கேட்கும் பையன் ,நல்லா வருவான் :)

   வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 12. அனைத்தும் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ? !...இரண்டும் பிடித்ததா உங்களுக்கு :)

   Delete
 13. அடப்பாவி..ஆறு மாசமா...குளிக்காம எப்படி இருக்கான்....????

  ReplyDelete
  Replies
  1. முழுகாம இருக்கலாம் ,குளிக்காமல் எப்படி இருக்க முடியும்னு தெரியலை:)

   Delete