31 December 2015

பியூட்டி பார்லரில் இப்படி செய்யலாமா :)

                       ''உன்  மருமகள் நடத்துற பியூட்டி பார்லர்  கடைக்குப் போய் எதுக்கு சண்டை போட்டே ?''

                        ''என்னைப் பார் யோகம் வரும்னு என் போட்டோ கீழே எழுதி போட்டிருக்காளே!''

நல்ல பொருத்தம் தான் :)

            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''

            ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா 

நடக்கிறாங்களே !''

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா:)

              ''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  

அடிமை ஆயிட்டாராமே ?''

            '' சிறைக்'கஞ்சா ' சிங்கம்கிற  பட்டம் 

இப்பத்தான் அவருக்கு ரொம்பப் 

பொருத்தமாயிருக்கு !'
பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் :)


கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் 

பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...

நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் 

இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை 

நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...

கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் 

தெரியவில்லை ...

மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று 

விட்டார்கள் போலிருக்கிறது ...

மீன்கள் காணாமல் போய்விட்டன ...

கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி 

பெருகிவிட்டன ...

ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் 

மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை 

உருவாக்கி இருக்கிறார்கள் ...

அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் 

...

அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் 

கொசுக்களுடன் இணையுமாம்...

ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை 

அடைந்ததும் ...

பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...

ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை 

விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் 

போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் 

போல ...

இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு 

என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில 

ஆராச்சியாளர்கள் ...

கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு 

எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று 

தெரியவில்லை ...

நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே 

செல்கிறது !

நின்று கொல்லும் சிலந்தி :)
படையெடுத்து எங்கும் செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
நூலாம் படை !

30 December 2015

மனைவிக்கு வரக்கூடாத சந்தேகம் :)

 இது ஜோக்கில்லே ,உண்மை :)            
                   ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லவே கூடாது ,சரியா ?''

                ''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூட சொல்லக் கூடாதா ,டாக்டர் ?''


மனைவிக்கு வரக் கூடாத சந்தேகம் :)           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் :)
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

 1. இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''

            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்கைக்கும்  வித்தியாசம் ,,?

திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

29 December 2015

நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிகிறதா :)

   அதுக்கு இதுவே தேவலே !          
               '' கிழிஞ்சு இருக்கிற  சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி  காட்ட முடியும் ?'' ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?
            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''

 1. கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

                ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  ,டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
 2.         '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது,அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


 • கொள்ளையர்களுக்குபொருத்தமானப் பட்டம்:)


 •          ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''

              ''ஏன் ?''

             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''
 • நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிகிறதா :)  உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
  தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
  நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
  நாளே உண்மையான சுதந்திர நாள் ! 

  28 December 2015

  இனி ' கிளி 'னிக் வர்ற கூட்டத்துக்கு பஞ்சமில்லே :)

                                      '' அந்த டாக்டர்  'கிளி 'னிக்னு  போர்டுலே  எழுதியிருக்காரே ,ஏன் ?''
                                       '' கிளி மாதிரி  அழகா இருக்கிற  நர்சுங்க நாலு பேர் ,புதுசா வேலைக்கு சேர்ந்து  இருக்காங்களாமே  !''   இப்படியும் சில பெண்கள் :)


               ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டு ,இப்ப நீயே ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

          ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''   முற்றும் துறந்த நிலை சாத்தியமா :)

                   ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ?''
                  '' அவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது என் கடமைன்னு  சொன்னாராமே  !''

  1. டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் :)

                   ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
              ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
  2. கோளாறு எங்கேன்னு கண்டுபிடிங்க :)

   ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
   ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

   1. கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)
   2. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
    1. மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ...
     1. ஊருக்கு  ஒருத்தி !

  26 December 2015

  net problem

  jokkaalikku vantha sotanai..
  net kidaikkavillai.

  25 December 2015

  மனைவியிடம் மறைக்க நினைத்தவருக்கு...:)

  கொழுப்பு ஜாஸ்தி ,குடும்பத்தில் எல்லோருக்கும்  :)                      

               ''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''

                      ''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை விட்டுடுங்க என்று டாக்டர் சொல்லி விட்டாரே !''

              தொழில் செய்வதிலும் தலைக்கீழ் தானா :)        
             ''உங்கப்பா  ஐம்பது வருடம் முன்னாலே செய்த வியாபாரத்தை ,நீ இப்போ தலைக்கீழா செய்றீயா ,அப்படின்னா  ?''
             ''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''


   மனைவியிடம்  மறைக்க நினைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா :)

                          ''உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
                     '' ATM ல் பணம் எடுத்தவர் பணத்தை  குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு ,பாலன்ஸ்  சிலிப்பைக் கொண்டு வந்திருக்கிறாரே,டாக்டர்  !''


   1. நாட்டுப் பற்றிலே இது ஒருவகை :)

                         ''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் 
   2.  குடிக்கிறேன்னு சொல்றீயே ,ஏன்?''
   3.                          ''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் 
   4. போச்சுன்னா....அரசாங்கம்  பணத்துக்கு எங்கே போகும் ?''

   5. இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை :)

    திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
    வரதட்சனைத் தண்ணீரால் 
    வாடாத அபூர்வப் பயிர் !

  24 December 2015

  கணவன் ,மனைவிகளும் கற்பூர வாசனை அறியாதவர்களா:)

  அழையா விருந்தாளின்னா அவமதிப்புதானா :)

               ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
                 ''வெறும் கையோட வந்து ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''  டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் :)
           '' டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
                       ''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''

  1. சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா :)

   உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
   தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...
   டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
   மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும்  பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
   அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
   நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
   அந்த  பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
   ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
   சோனியா காந்தி பெயரில் பிறப்புச்  சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
   அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
   அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
   நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருக்கும் தகவல் இது !
  2. வங்கி கணக்குமா கரெண்ட் கட் :)


                    ''அவர் கொடுத்த செக் எல்லாம் பணம் இல்லாமே திரும்ப வருதே ,ஏன்?''
                ''அவரோட  கரண்ட் அக்கௌன்ட் ,கரண்ட் கட்  அக்கௌன்ட் ஆகி இருக்கும் !''

   1. கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா?
    கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
    கணவனோ,மனைவியோ 
    'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !  23 December 2015

  நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)

  தரகர் சொன்னதும்  ,சொல்லாததும் :)

                 ''இந்த வீட்டடி மனையை வாங்கும் போதே ,பத்து அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொன்னதை நம்பியது  ,தப்பா போச்சா,ஏன் ?''
                 '' வீட்டிலேயும் பத்தடி தண்ணீர் வரும்னு சொல்லாமல் விட்டுட்டாரே!''
      
    காலையில் வடித்த சாதம்,மதியமும் அதே சூட்டில் ?              
               
               ''அதெப்படி ,உன் சாப்பாடு மட்டும் சூடாவே இருக்கு ?''
               ''ஹாட் பாஸ்க்சை , இன்னொரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வருகிறேனே! ''


  மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா :)

               ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
               ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''

   நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)
                   ''அந்த நடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டான்ஸ் டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரே ,என்னது ?'
   ''டான்சில் தான் வீக் ,ஃடான்சிலுமா வீக்னு கேட்கிறார் ''

  பொன் நகைகளின் இருப்பிடம் !
  கோடீஸ்வரர்களின் நகைகளும் 
  நடுத்தர வர்க்கத்தின்  நகைகளும் 
  வங்கிகளில்தான் அடைக்கலம் ...
  ஒன்று  ஃசேப்டி லாக்கரில் ,
  இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!