11 December 2015

புருஷனுக்கு நெக்லஸ் வாங்கி வந்த மனைவி :)

இப்படியும் விளம்பரம் வருமோ :)

                       ''என்னங்க ,கொடுமையா இருக்கே !கண்மாய் நடுவிலே அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டியிருக்கீங்களே ?''
                   ''அதுக்குத்தான் ,தரைத் தளத்திலே போட் பார்க்கிங்  வசதியை பண்ணியிருக்கிறோமே !''
கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல:)

                     '' என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தாஅவ கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''

                   ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான்! ''புருஷனுக்கு வேண்டியதை வாங்கி வந்த மனைவி :)
             ''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் 
வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
           '' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''

 1. கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???

                                ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும்கொசு குறையலையே ,ஏன்?''
                         ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் என்று  பதிந்தால் எப்படி காட்டுறது :)

அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !
18 comments:

 1. 1. செம ஸ்மார்ட் போங்க!

  2. ஸ்ட்ராங்கான துணை(எழுத்து)

  3. :)))))

  4. அடப்பாவமே... மக்களை அந்த மாதிரி ஒரு நிலையில் வைத்திருப்பது அரசின் குற்றம்.

  5. கஷ்டம்தான்!

  ReplyDelete
  Replies
  1. பீச்சில் இருந்து இரண்டே கிலோ மீட்டரில் என்றுகூட சொல்லக்கூடும் :)

   இப்போ புலம்பி என்ன செய்ய :)

   இதுவாவது கிடைச்சதே :)

   இலவச மீன் கொடுக்கும் திட்டத்தை செயல் படுத்தினால் நல்லது :)

   வாழ்நாள் கஷ்டம் :)

   Delete
 2. வேளச்சேரி பேரமாத்தியாச்சு... வெள்ளச்சேரி...! வெள்ளச்சேரி அனைத்தும் போட் விடுவோம்...! போட் கிளப் உடனே ஆரம்பிச்சு, அதைத் திறக்க பெரிய அரசியல் தலைவரைக் கூப்பிடுவோம் ...!

  இப்ப ஒன்னும் குடிமுழுகிப் போயிடல... அவள் ஓடிப்போன பக்கம் போயி... மாஞ்சா கயிறு பட்டம் விட்டு அறுத்து விடவேண்டியதுதானே...!

  உங்க மனைவிய நெனச்சு நெக்குருகி போயிட்டேன்...! எங்கே அந்த நெக்லஸ காட்டுங்க... சூப்பரா பாலிஸ் போட்டு பளிச்சின்னு இருக்கிறமாதரி தாரேன்... தொழில் ரொம்ப சூப்பர இருக்கும்... வடநாட்டுல இருந்து இதுக்காகவே வாரேன்னா பாத்துக்கங்க...!

  நீங்க தப்பு பண்ணீட்டீங்க... அந்த இடத்தில நடிகை மீனாவை விட்டு இருக்கணும்...!

  மச்சக் கன்னி நல்ல அதிஷ்டசாலின்னு சொல்லுங்க...! ‘பாஞ்சாலி... அங்க என்ன மச்சமா...? வச்சுக்கோ...!’
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. பொருத்தமான பெயர்தான் ,விழா தேதியைச் சொல்லுங்க :)

   காத்து அவ பக்கம் வீசுதே ,பட்டத்தை எப்படி எதிர்திசையில் பறக்க விடுவது :)

   இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க :)

   மீனயவே காணோம் மீனாவை விட்டால் ....:)

   பாவம் ,பாஞ்சாலி புருசங்கதான் :)

   Delete
 3. Replies
  1. முக்கியமா அங்க அடையாளத்தை ,அப்படித்தானே ஜி :)

   Delete
 4. 01. சந்தர்ப்பமான நகைச்சுவைதான்
  02. ஒரு துணையெழுத்தால் வாழ்க்கையே போச்சே..
  03. அதாவது கிடைத்ததே..
  04. உண்மைதானே...
  05. கஷ்டம்தான்

  ReplyDelete
  Replies
  1. இப்படி நடக்கும்னு யாராவது நினைத்து பார்த்திருப்போமா :)
   போவதற்கு ஒரு கால் இவரும் காரணமா இருப்பாரோ :)
   அதானே இதுவும் கிடைக்கலைன்னா என்ன செய்ய முடியும் :)
   நழுவுற தண்ணியில் நழுவுற மீஎனை பிடிக்கிறவங்களாச்சே :)
   அப்பன்காரன் இப்படி செஞ்சுட்டானே :)

   Delete
 5. வணக்கம்
  ஜி
  அனைத்தும் அற்புதம் இரசித்தேன் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்களின் 'பிரிந்த தண்டவாளத்தை 'இப்போதான் பார்த்து ரசித்தேன் :)

   Delete
 6. நல்ல மனைவிக்கு அர்த்தம் இதுதானுங்க.....

  ReplyDelete
  Replies
  1. வாங்கி வந்தது கர்சீப் என்றாலும் கம்முன்னு கிடப்பதுதான் நல்ல கணவனுக்கு அடையாளம் :)

   Delete
 7. "வெனிஸ் நகரத்தைக் கொண்டுவந்து வேளச்சேரியில வைக்கிறோம்!"

  "அப்படின்னா வேளச்சேரியை?"

  "வேளச்சேரியைக் கொண்டுபோயி வெனிஸ் நகரம் இருந்த இடத்துல வைக்கிறோம்!!!"

  "அப்புறம் எந்த ஊருங்க்ணா?"

  ReplyDelete
  Replies
  1. இது வெனிச்சேரி ,அது வேலிஸ் ஆகிடும்னு நினைக்கிறேன் :)

   Delete
 8. ஹஹஹஹ் போட் பார்க்கிங்க்...ம்ம்ம் சென்னையின் நீர்நிலைகளை ஒழுங்காகப் பேணியிருந்தால் அப்படி ஒரு அழகான சென்னை கூட உருவாகியிருக்கலாம்...வெனிஸ் போன்று!!!

  ம மா வானது...ஹஹஹ்

  ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. இனி வரும் காலத்தில் அப்படியாகவும் வாய்ப்புண்டு :)

   அதான் தப்பிச்சு ஓடிப போனது :)

   Delete
 9. எதுக்கு ஜி இப்படி பண்றீங்க ஆமா நெக்லஸ் வாங்கியது உண்மையா ????????/

  ReplyDelete
  Replies
  1. அம்மா நெக்லஸ் வாங்கியது உண்மை :)

   Delete