14 December 2015

கணவனின் புத்தி மனைவிக்கு தெரியும் தானே :)

புலிக்கு வைத்திருந்தால் மகிழ்ச்சி :)                       
                ''உயிரினப் பூங்கா முன்னாலே எதிர்க் கட்சி தலைவர் ஏன் கண்டனப் போராட்டம் நடத்துறார் ?''
                         ''அங்கே புதுசாப்  பிறந்த காட்டு எருமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பெயரை முதல்வர் சூட்டிட்டாராமே !''எந்தக் காரியத்தையும் முழுமையா செய்யணும் !                     

                                   ''விலங்கு தோல் ஆடைகளை  தடை செய்யணும்னு ,விலங்குகளுக்கு ஆதரவாய் ஒரு நடிகை ,அரை நிர்வாண போஸ் கொடுத்தாராமே  ,அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே ?''
                       ''விலங்குகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தா  நல்லதுன்னு நினைக்கிறேன் !''
மனைவி காதில் எதிரொலியா ,கணவனின் முணுமுணுப்பும் ?

                ''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
            ''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''


நான் அந்த நடிகரை சொல்லலைங்க :)
                                            ''அடுத்து  ரீலீசாகப் போற படம் வெற்றி அடையணும்னு ஹீரோ மொட்டைப் போட்டுகிட்டாறாமே?''
                             ''அவருக்கு இருக்கிற வசதிக்கு ,அவராவே  மொட்டைப் போட்டுகிட்டார்னு சொல்றதைதான், என்னாலே நம்ப முடியலே !''
 1. கணவனின் புத்தி மனைவிக்கு தெரியும் :)
 2.            ''என் கிளாஸ்  டீச்சரை  பார்த்துவிட்டு வந்ததில் இருந்து ,அப்பா ,என்னை அடித்து கொண்டே 
  இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
 3.           ''நீ மிஸ்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு 

  ஏமாந்து விட்டார் போல் இருக்கு !''
 4.                                                            

28 comments:

 1. வணக்கம் ஜி !]

  பாம்புக் காதும்
  முழு ஆதரவும்
  சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்
  தொடர வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்
  தம 1

  ReplyDelete
  Replies
  1. பாம்புக் காதுக்கு உங்கள் முழு ஆதரவைத் தந்ததற்கு நன்றி :)

   Delete
 2. எதற்கெடுத்தாலும் போராட்டம்தானா...? எதுக்குமே எடுத்துக்காட்டு நீங்கதான்னு சந்தோஷப் படுவீங்களா...!

  நடிகை அரை நிர்வாண போஸ் எல்லாம் கொடுக்கப் படாது...!

  பாம்புக்கு காது இல்ல... ! சும்மா கேக்கிறமாதரி தலையாட்டுமுன்னு சொன்னதச் சொல்ல என்ன பயம்?

  பின்னால் வர்ரத முன் கூட்டியே தெரிஞ்ச ஞானின்னு சொல்லுங்க...!

  மிஸஸ்ன்னாலும் எனக்கு அவுங்க மிஸ்தானேம்மா...!

  த.ம.2  ReplyDelete
  Replies
  1. அடுத்து கழுதைப் புலிக்கும் வைப்பார்கள் ,சந்தோசப் பட முடியுமா :)

   ஆதரவு என்றால் அரைகுறை கூடாதுதானே :)

   அந்த பயம் இருக்க வேண்டாமா :)

   அட்வான்ஸ் மொட்டையா :)

   உங்கப்பனுக்கு இதை புரிய வைடா,மகனே :)

   Delete
 3. எல்லாவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்போதான் நானும் உங்களின் ,உருளைக் கிழங்கு கறியை சாப்பிட்டு வந்தேன் செம டேஸ்ட்:)

   Delete
 4. Replies
  1. இப்படி,முதல்வர் ஜூ காட்டுவது சரியா :)

   Delete
 5. பாம்புக் காது.... :)))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லாத அந்த காதை எனக்கும் பார்க்கத்தான் ஆசை :)

   Delete
 6. Replies
  1. எருமைக்கு பெயர் வைத்ததைதானே :)

   Delete
 7. Replies
  1. அந்த காட்டு எருமையுமா :)

   Delete
 8. பாம்புக் காதை ரசித்தேன்....சகோதரா---
  வேதாவின் வலை.

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கைப் பட்டாச்சு,ரசித்துதானே ஆகணும்:)

   Delete
 9. 01. இருந்தாலும் இவ்வளவு ஆகாது
  02. புரிஞ்சிடுத்து...
  03. மாட்டிக்கிட்டாரோ...
  04. சலூனுக்கு போயிருக்கலாம்
  05. புரிதல் தவறுதான்,

  ReplyDelete
  Replies
  1. இதிலுமா அரசியல் பண்ணுவது :)

   வேண்டாம்னா சொல்லப் போறீங்க :)

   நுணலும் தன் வாயால் பாம்பிடம் மாட்டிக் கிட்டதோ :)

   அதுக்கும் காசிருக்காது இப்போதே தெரிந்து விட்டதோ :)

   அப்படின்னா ,நினைப்பில் தவறில்லையா :)

   Delete
 10. மிஸ்ஸை மிஸ்டேக்கன்னு நிணைத்ததால் வந்த விளைவோ......!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த மட்டுக்காவது பெண்கள் மீது மரியாதை வைத்திருக்கிறாரே:)

   Delete
 11. வணக்கம்
  ஜி

  அனைத்தும் சிறப்பு.. வாழ்த்துக்கள் த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. படங்களும் சிறப்புதானே :)

   Delete
 12. // ''நீ மிஸ்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு
  ஏமாந்து விட்டார் போல் இருக்கு !'' //


  மிஸ் அண்டர்ஸ்டாண்ட்
  பண்ணிக்கிட்டாரு போல???

  .

  ReplyDelete
  Replies
  1. இவர் தப்பாய் புரிஞ்சுகிட்டு பையனை அடிப்பது எப்படி சரியாகும் :)

   Delete
 13. பாம்புக்குக் காது இல்லையே
  அப்படியிருக்க
  பாம்புக் காது எப்படியிருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. செருப்புக்கும் பல் இல்லே ,கடிக்கலியா :)

   Delete
 14. எருமையைக் கேவலப்படுத்திவிட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்..

  என்னாது பாம்புக்குக் காதா? அஹஹஹ்

  ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. அந்த எருமையே இவர்களை குத்திக் கொல்லட்டும்:)

   ஒரு காதும் இருக்காதா :)

   Delete