15 December 2015

பையனோட காதலுக்கு பச்சைக் கொடி:)

                 ''என்னங்க ,நம்ம பையன்கிட்டே ,நான் பார்க்கிறப் பொண்ணைத்தான் நீ கட்டிக்கணும்னு  சொன்னீங்களா ,இல்லையா ?''

                     ''சொன்னேன் ,உங்கப்பா பார்த்த பொண்ணைக் கட்டிக்கிட்டு நீங்க படுற பாடு போதாதா அப்பான்னு கேட்கிறானே !''
பட உதவி... 'தினகரன்.காம்'முக்கு  நன்றி !
இதுக்கு எப்படி மனசு வரும் ?             
                  ''டார்லிங் ,நம்ம காதல் விஷயம் ,எங்க அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க ?''
                  '' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு அவர் சொல்றாரே !''

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
                  ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
                ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''


 1. மருமகள் கோபத்திற்கு பயப்படும் டாக்டர் :)

              ''மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு டாக்டர் ஏன் சொல்றார் ?''
 2.              '' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''

 • 'வாய் உள்ள நடிகை '...

  1. வாய்ப்பில்லா நடிகையின் 
   வாய் 'மை '  மாறா  பேட்டி ....
   'கேரக்டர்  பிடித்தால்தான் நடிப்பேன் !'

  22 comments:

  1. 01. அனுபவத்தை பார்த்தவன்
   02. மாமாதான்
   03. வார்த்தை குத்தலாக இருக்கே...
   04. நிறைய அனுபவம்
   05. புள்ளை பொழைச்சுக்கிரும் ஜி

   ReplyDelete
   Replies
   1. தானே தேடிக்கிட்டால் இந்த நிலை வராதுங்கிறது அவன் நினைப்பு :)

    காதலி தயவு வேணும்னு மாமாவைக் குளிப்பாட்டுவதா :)

    குத்துக் கல் குத்தினால் அல்லவா வலி தெரியும் :)

    வாய் மையே ஜெயிக்கும்னா சொல்றீங்க :)

    டாக்டர் ஈ சி யூ வில் படுக்காமல் தப்பித்தார் :)    Delete
  2. ஹஹ்ஹ அனைத்தும் ரசித்தோம் ஜி!

   ReplyDelete
   Replies
   1. குத்துக் கல்லின் கேள்வியையும் தானே :)

    Delete
  3. தன் செல்லுக்கும் ரீ சார்ஜ் செய்யக் கேட்கும் அப்பா நல்ல பிசினஸ்மேன்!

   :)))))

   ReplyDelete
   Replies
   1. இதுக்கும் சேர்த்து வரதட்சணை சேர்த்துக் கேட்காமல் போனால் சரிதான் :)

    Delete
  4. அப்பத்தானே அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்திருக்கன்னு சொல்லுவாங்க...! அம்மா... நீ அன்னக்கி அம்மி மிதிச்சது நா பாடுபடுறதுக்குத்தானோ...?

   நீங்க மட்டும்தான் ரீசார்ஜ் செய்யச் சொல்றீங்க... வேற யாருமே இப்படி கேக்கிறது இல்ல... பணமா வாங்கிக்கிறாங்க... வர வர காதல் கசக்குது டார்லிங்...!

   உன்னைய அதேமாதரி சிலையா வடிக்கணுமுன்னு பார்க்கிறேன்... தப்பாவே நெனச்சுக்காதே...!

   ஆப்ரேசன் சக்சஸ முதன்முதலா பேசண்டோட கொண்டாடணுமுன்னு நெனக்கிறாரு...!

   கேரக்டரையே யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே...! வாய் ‘மை’ யோட காத்துக்கிட்டு இருக்கேன்... ஒரு சப்பாணி கூட வரமாட்டேங்கிறாங்களே...!

   த.ம.2

   ReplyDelete
   Replies
   1. மிதிச்சதுக்கு கை மேல் பலன் கிடைத்து விட்டதே :)

    பய பிள்ளே ,எத்தனை பேருக்கு பணம் கொடுக்கிறான் :)

    சிலைதான் குத்துக்கல் ஆகி விட்டதே ,எப்படி மறுபடி சிலையாகும் :)

    மருமகள் முறைக்கிறாளே :)

    வாய் மை உலரட்டும்னு காத்திருப்பாங்களோ :)

    Delete
  5. Replies
   1. சிலையையும் தானே :)

    Delete
  6. குத்துக் கல், அருமை.
   த ம 5

   ReplyDelete
   Replies
   1. உங்க ரசனைக்கும் ஒரு எல்லையே இல்லையா :)

    Delete
  7. உண்மையை சொல்லுங்கள், உங்கள் மகன் உங்களிடம் சொன்னதை தானே, நீங்கள் இங்கே பதிவாக எழுதியிருக்கிறீர்கள்.

   ReplyDelete
   Replies
   1. வாராது வந்த மாமணிபோல் நீண்ட நாளுக்குப் பிறகு வந்து வம்பிலே மாட்டி விடுறீங்களே,நியாயமா சொக்கன் ஜி :)

    Delete
  8. விவரமான புள்ள. ரிசார்ஜ் செய்து பச்சைக் கொடி காட்டச் சொல்ல வேண்டியதுதான் அதானேசிலையை ரசிக்கலாம் குத்துக் கல்லையா ஆப்பரேஷன் வெற்றி பற்றி மருமஅல் ரசிக்க மாட்டாள் எனத் தெரிந்த அனுபவ டாக்டர்

   ReplyDelete
   Replies
   1. இந்தகால பசங்களுக்கு சொல்லவா வேணும் :)
    இப்படி சொல்லிட்டு அவர் குத்து பட்டது உங்களுக்கு தெரியாதே :)
    முடிவு மாறினால் யாருக்குத்தான் பிடிக்கும் :)

    Delete
  9. //' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு அவர் சொல்றாரே !''//

   இன்னமும் அம்மாக்காரங்க்களுக்குத் தெரியாதுபோல???

   ?

   ReplyDelete
   Replies
   1. நீங்க சொல்றதைப் பார்த்தா ,மாப்பிள்ளை 'பசுவும் கன்றுமா' பிடிக்க அலையுற மாதிரி தெரியுதே :)

    Delete
  10. Replies
   1. அழகான சிலையைத் தானே :)

    Delete
  11. வணக்கம்
   ஜி

   இவை எல்லாம் ஆண் அடிமை.... பார்த்தால் புரியும் அல்லவா.
   ரீசார்ஜ் பண்ணுங்கன்னு அவர் சொல்றாரே ...அற்புதம் ஜி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. உண்மைதான் ரூபன் ஜி ,சமைப்பது ,பெண் செய்ய வேண்டிய ஒன்று என நினைப்பது :)
    நல்லவேளை, என் கிட்டே பேசிகிட்டேயும் இருக்கணும்னு சொல்லாமல் விட்டாரே :)

    Delete