21 December 2015

பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :)

 அதெல்லாம் மனுஷனுக்கு மட்டும்தானே :)              

            ''அவர் போலி வெட்னரி டாக்டர்ன்னு  எப்படி தெரிஞ்சுது ?''

              ''இங்கு மாட்டுக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படும்னு  எழுதி போட்டு இருந்தாராம் !''

FM ரேடியோவை மனைவியும் கேட்டதால் வந்த வினை !
                  
            '' உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,என்னடா சொல்றே  ?''
                 
            ''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''
                                        


பொண்ணு மாப்பிள்ளை மட்டும் பொருத்தமில்லை ...:)

                   ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
                  ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''


இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி :)
          ''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் 

வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கா, ஏன் ?''           
            
         ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை  

இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே  

போட்டுக்கிட்டு இருக்காரே!''

பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி :)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காகவே சொல்லப் பட்டதா ?

20 comments:

 1. வணக்கம்
  ஜி
  இந்தியாவில் போலி டாக்டர் அதிகம் ... அதனால் இப்படியான செயல் நடக்கலாம்...
  FM கேட்ட போது.. சின்னதாக கட்டிய வீடு(கருத்து பலவிதம்)... இதுவாகத்தான் இருக்கும் ஜி.து.ம1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் டாக்டர்கள் இல்லையென்றால் போலிகள் உருவாகத்தானே செய்வார்கள் :)
   ஆர்வக்கோளாறு, சிக்கல்லே மாட்டிக்கிட்டாரே :)

   Delete
 2. மாட்டுக்கு அதெல்லாம் எடுக்கக் கூடாதா பாஸ்?

  "உண்மையைச் சொல்லிடறேன்.... நீந்தாண்டி சின்ன வீடு... நான் நிம்மதி தேடி வர்ற தெய்வம் நீதான்" என்று சமாளிக்க முடியாத பாஸ்?

  மாமூலான ஜோக்!

  இதுக்கு சமீபத்தில் இப்போதானே பாஸ் கமெண்ட் போட்டேன்?

  ஆம்!

  ReplyDelete
  Replies
  1. மாட்டுக்கு அதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றுதான் நினைத்து இருந்தேன் ,கீதா மேடம் ,நாலு கால் உள்ள அனைத்துக்கும் உண்டுன்னு சொல்லி இருப்பதால் ,பதிவிலும் மாரம் செய்துட்டேன் :)

   முதல்லேயே சொல்லி இருந்தால் தப்பித்து இருக்கலாம் ,இப்போ ,கை மீறி போயிடுச்சு :)

   மாமூல் வாங்குவதாலா :)

   வெல்டிங் வைத்ததுபோல் ஸ்ட்ராங்கா ,அந்த கமெண்ட் இருக்கும் போலிருக்கே :)

   திராவிட மாயை மறையவே மறையாதோ:)

   Delete
 3. Replies
  1. லட்ச ரூபாய் மாமூலையும் தானே :)

   Delete
 4. ‘கோ மாதா... எங்கள் குலமாதா’ங்கிறதுனால... ‘ஆ...’ மாட்டை மனுசனப் போல பாக்கணுமுன்னு நினைச்சுட்டாரோ... என்னமோ..?

  இதுக்குத்தான் மதியோட பேசனுங்கிறது... இப்ப நிம்மதி போச்சா...?

  பையனோட அப்பா மாசமானா...? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?

  அப்ப இரும்பான இதயத்தையும் இணைச்சுடுவாருன்னு சொல்லுங்கோ...!

  ‘ஆரிய மாயை...’ திராவிடநல் தி(தெ)ரு நாடும்... தலைவர்கள்...!

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. காவிக் கட்சியை சேர்ந்தவராய் இருப்பாரோ :)

   நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்ஸா:)

   சீய் ,நீங்க ரொம்ப மோசம் :)

   கரும்பான இதயமா மாத்திடுவார்:)

   கோலிவுட் நடிகைகள் விஷயத்தில் முழுவதும் ஆரிய மாயைதான் :)

   Delete
 5. பெரிய புளியங் கொம்பத்தான் பிடுச்சிருக்காரு இன்ஸ்பெக்ட்டரு

  ReplyDelete
  Replies
  1. அவர் வசதிக்கு அதுதானே கிடைக்கும் :)

   Delete
 6. அனைத்தையும் ரசித்தோம் ஜி....

  கீதா: //மாட்டுக்கு பிளட் டெஸ்ட்,எக்ஸ் ரே,ஸ்கேன் பண்ணிட்டு வாங்கன்னு எழுதிக் கொடுத்து விட்டாராம் !''// ஜி மாட்டிற்கும் எடுப்பதுண்டு ஜி. நாலுகால்கள் எல்லாவற்றிற்கும் உண்டு ஜி. மனிதர்களைப் போலத்தான்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விளக்கம் சரிதான் என்று தெரிந்ததால் ,மாட்டுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து விட்டேன் :)

   Delete
 7. 01. இந்த ஆளு எந்த ஊரு ஜி
  02. உளறுவாயன்
  03. நல்ல சம்பந்திகள்
  04. கணைக்டிங் பீப்புள்
  05. இருக்கலாமோ..

  ReplyDelete
  Replies
  1. மாடு திங்கிற உங்க ஊரை ..இல்லை இல்லை ...நாட்டைச் சேர்ந்தவர் தான் :)
   உணமையைச் சொன்னா உளறுவாயனா:)
   இவர்களும் பொருத்தமே :)
   நவீன காலத்தில் வாழ்பவராச்சே:)
   உங்க சந்தேகம் தீரவே தீராதே :)

   Delete
 8. அட்டகாசமான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அவர் fm ரேடியோவை எப்பவும் இனி கேட்க முடியாதே :)

   Delete
 9. //சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் //

  இதென்ன பெரிய குழப்பமா?
  சின்ன பொய் சொல்லி சமாளிங்க சார்!

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவோ சொல்லியாச்சு ,இதுவா பிரமாதம் :)

   Delete
 10. நீங்க இது நாள் வரைக்கும் மனசுல பூட்டி வச்சிருந்த உண்மை எல்லாம் இப்பத்தான் வெளிவருது.
  இன்னும் என்ன என்ன உண்மை எல்லாம் வெளி வரப்போகுதோ?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சொக்கன் ஜி ,வலது மூலையில் த.ம இரண்டுன்னு இருப்பதை ஒன்று என்று ஆக்குவதே ,நான் மனதில் பூட்டி வைத்திருக்கும் உண்மை :)

   Delete