29 December 2015

நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிகிறதா :)

   அதுக்கு இதுவே தேவலே !          
               '' கிழிஞ்சு இருக்கிற  சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி  காட்ட முடியும் ?'' ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?
            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''

 1. கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

                ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  ,டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
 2.         '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது,அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


 • கொள்ளையர்களுக்குபொருத்தமானப் பட்டம்:)


 •          ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''

              ''ஏன் ?''

             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''
 • நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிகிறதா :)  உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
  தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
  நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
  நாளே உண்மையான சுதந்திர நாள் ! 

  16 comments:

  1. Replies
   1. நானும் உங்க பதிவை ரசிக்க காத்திருக்கிறேன் ,இரண்டு வாரமா பதிவையே காணாமே ,சீக்கிரம் போடுங்க ஜி :)

    Delete
  2. Replies
   1. சாவி இல்லாமல் திறப்பதையும் தானே :)

    Delete
  3. அனைத்தும் அருமை ஜி

   ReplyDelete
  4. 01. ஊமைகளின் வசனம்
   02. உண்மைதான்
   03. இவரும் டாக்டராயிடலாம் நினைக்கிறாரோ..
   04. திறமைசாலிகள்தான்
   05. அருமை ஜி

   ReplyDelete
   Replies
   1. வாய் இருந்தும் ஊமைகள் :)
    வந்தாலும் தப்பில்லைதானே :)
    எல்லோருமே அனுபவத்தில் பாதி டாக்டர்கள்தானே:)
    கொலை மாமணி அவார்ட் கொடுக்கலாமா :)
    என்று வருமோ அந்த நாள் :)

    Delete
  5. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாம்பா நினைவுக்கு வருது. ரயில் ப்லாட்ஃபார்ம் ஏற்கனவே படித்தது,இவருக்கும் ஸ்கான் படிக்கத்தெரியுமோ என்னவோ, ஆம் நம் தளங்களையும் திறக்கும் சைபர் எக்ஸ்பெர்ட்கள். ஒரு பெண் எதற்காகத் தனியே இரவில் செல்ல வேண்டும் ஒரு வேளைத் தொழில் நிமித்தமா

   ReplyDelete
   Replies
   1. தாம்பத்தியத்தில் தாக்கித்தானே ஆகணும் :)
    ஊருக்கு அடிக்கடி போகணும்னா இங்கே வர வேண்டியிருக்கே :)
    மூத்தவனுக்கு ஸ்கேன் எடுக்கும் போதே தெரிந்து கொண்டார்களே :)
    இவர்களிடம் ஜாக்கிரதையாய் இருக்கணும் :)
    எதற்காக சென்றாலும் ,ஆபத்தில்லே என்பது தானே உண்மை சுதந்திரம் :)

    Delete
  6. நெட் சரியாகி விட்டதா?

   அல்லது மாத்து வாங்கிக் கிழிஞ்ச பனியனை உடனே மாத்தி இருப்பார்!

   அது சரி!

   ஆனா, பெண்ணா என்று இவர் பார்த்தா கண்டு பிடிச்சுடுவாராமா? போட்டோவா தெரியும்!

   ReplyDelete
   Replies
   1. கூகுள் ஆண்டவர் இரண்டு நாளில் அருள் பாலித்து விட்டார் :)

    டஜன் கணக்கில் அவர் பனியன் வாங்கும் போதே எனக்கும் இந்த சந்தேகம் வந்தது :)

    இந்த பிளாட்பார்மில் வர எதுக்கு வெட்கப்படணும்:)

    அனுபவசாலி ,கண்டு பிடித்து விடும் சாமர்த்தியம் அவருக்கு இருக்கே :)

    Delete
  7. ஊமைக்கு அடி‘மை’ ஆண்...!

   பிளாட்... பார்ம் ஆயிடுச்சோ என்னமோ...?

   ‘சட்டம் என் கையில்...’ டாக்டர் சொல்லலாம்...!

   டாக்டர் மாதரி திருட முடியாதில்ல...!

   நடு இரவில் சாலையில் இளம்பெண் தனியாக நடக்க போக வேண்டாம்... பஸ்ஸில் போக முடிகிறாதா...?

   த.ம.5

   ReplyDelete
   Replies
   1. இவர்தான் ஊமைத் துரையோ:)

    அது கன்..பார்ம் ஆயிடிச்சே :)

    பைசாவுக்கு வளைந்து விடுதே சட்டம் :)

    வயிற்றில் கை வைத்தால் ரெண்டு கிட்னியும் இருக்கான்னு பார்த்துக்கணுமோ:)

    அதானே ,ஏன்யா இப்படி கொடுமை பண்றீங்க :)


    Delete
   2. ஊமை அடிய வாங்கிக்கிட்டு ஊமையா இருக்க பழகிக்கணும்

    Delete
   3. தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி பெற அருமையான ஐடியா :)

    Delete