3 December 2015

அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்கவே கூடாது :)

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் ?

             ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
                 ''சுயமரியாதை இல்லாம உங்களால் இருக்கும் நாள் வரைக்கும் !''

மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே !

            '' இமய மலையில் 26000 அடிக்கு மேல் மனைவியை கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
             ''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா ,கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''
  1. அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்கவே கூடாது !
  2. அந்தரங்கம் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ...
    ஆனால் ,கேரள பல் டாக்டர் ஒருவருக்கு இதில் உடன் பாடில்லைப் போலிருக்கிறது ...
    ஜெயகிருஷ்ணன் என பெயர்கொண்ட அவர் இப்போது 'ஜெயில் 'கிருஷ்ணன் எனப் பெயர் எடுப்பார் போலிருக்கிறது  ...
    வலி எடுத்த பல்லைப் பிடுங்க வேண்டியவர் ...
    பல் பிடுங்கிய பாம்பாய் அடங்கிய காரணம் அறிந்தால் ...
    நீங்களும் பாம்பாய் மாறி  அவரை     கொத்திவிடுவீர்கள் ...
    கடந்த செப்டம்பர் மாதம்தான்  அவருக்கு திருமணம் நடந்துள்ளது ...
    தான் பெற்ற இன்பம் தன் இல்லாளும் பெற வேண்டுமென்று தண்ணி அடிக்கவும் ,ஆபாசப் படம் பார்க்கவும் வற்புறுத்தியுள்ளார் ...
    நற்குடியில் பிறந்த அந்த நங்கையோ மறுத்துள்ளார் ...
    மனைவியைக் கொடுமை பண்ண துவங்கிவிட்டார் ...
    இதில் உச்சகட்டக் கொடுமையாக நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டாராம் ...
    மாமனார் வீட்டுடன் தொடர்பு கொண்டு சொன்னாராம் ...
    'எனக்கு பத்து லட்ச ரூபாய் தேவைப் படுகிறது ,தராவிட்டால் உங்கள் மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறைக் காட்சிகளை 'யூ ட்யுப் 'பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ...
    காவல் துறையில் புகார் தரப் பட்டு தற்போது கைது செய்யப் பட்டுள்ளார் ...
    படிச்ச டாக்டரே இப்படி 'யூ ட்யுப் 'பை  துப்பாக்கி போல் பாவித்து பிளாக் மெயில் செய்கிறார் ...
    சோசியல் நெட் தளங்கள் இன்னும் வேறு எதற்கெல்லாம்  உதவப் போகிறதோ ?


    1. மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!
    2.             ''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றீயே ஏன்?''

                    ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேட்கிறாளே ! ''             
                                                                                                            
    3.  மரம் சாயலாம்...மனம் ...?
    4. மனதைக் கொத்தும்  துயரங்களால் மனிதன்  சாய்ந்து விடலாமா ...
    5. மரம் கொத்தும் பறவையா மரத்தை சாய்த்து விடும் ? 

24 comments:

  1. ஏண்டா... டே...! நீ எல்லாம் எப்படிடா தலைவரானாய்...?


    என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும் வாஸ்தவம்தான்... கேட்க நீ இருந்தாத்தானே...!


    பல் டாக்டர் பால்ய விவகார டாக்டராயிட்டாரே...!


    இப்படி புரை ஏறிய சமூகத்த நினச்சுதான் அப்பவே வள்ளுவர் சொல்லிட்டாரே...! ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்’.

    த.ம.1


    ‘சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது...?’

    ReplyDelete
    Replies
    1. சுய மரியாதை பார்க்காமல்தாண்டா :)

      இதுக்குதான இவ்வளவு உயரத்துக்கு கூட்டி வந்தது :)

      பாலிய லீலைகளை தான் பார்க்க மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா :)

      அடடா ,அப்பவே புரை ஏறியிருக்கா :)

      வேண்டாம் ,வலையிலே நாமே சிறை புகுவோம்:)

      Delete
  2. Replies
    1. மரம் கொத்திப் பறவையைதானே :)

      Delete
  3. Replies
    1. மரங்கொத்திப் பறவையின் தேவை ,புழு பூச்சிகள் தானே :)

      Delete
  4. இப்படியான தலைவரும்..தொண்டரும்...இருப்பதால்தான் மூனு கால் பாய்ச்சலில் முன்னேறுது நண்பரே.........

    ReplyDelete
    Replies
    1. அப்ப்டின்னா ,மெஜாரிட்டி தொண்டர்கள் 'படித்த மேதைகள் 'தான் ,அப்படித்தானே :)

      Delete
  5. அனைத்தும் அருமை,

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஜெய கிருஷ்ணன் செய்ததுதான் கொடுமை :)

      Delete
  6. இது ஏறத்தாழ எல்லாகட்சிகளுக்கும் பொருந்தும் போல் இருக்கிறதேமலைத்தவளையாய் ஆகிவிட்டாரோ வக்கிர புத்தி படிச்சவன் படிக்காதவன் என்று பேதம் பார்க்குமா.?புரை ஏறும்போது தலையைத்தட்டிக் கேட்காமல் இருந்தாளே தத்துவம் தத்துவம்

    ReplyDelete
    Replies
    1. பொதுவான கொள்கை தான் :)
      இப்படி மனைவியை சொல்லக்கூடாதுதானே :)
      அப்புறம் படிச்சவன் என்பதற்கு என்ன தகுதி :)
      ஓங்கித் தட்டினால் ஒன்றை டன் இறங்கியிருக்கும் :)
      மனதைக் கொத்தும் தத்துவம் :)

      Delete
  7. முதல் ஜோக் அருமை!
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. ஜோக் என்றாலும் உண்மைதானே :)

      Delete
  8. வணன்னம்
    ஜி
    ஒவ்வொரு தகவலும் சிறப்பு... இரசித்தேன் ஜி த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சிறப்புதான் என்பதை உறுதி செய்கிறது ,வருகை புரிந்தோரின் தாராள எண்ணிக்கை :)

      Delete
  9. கவிதைக்கும் ஒரு தளம் தொடங்கலாமே பகவானே!

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடங்கலாம் ,இன்னும் ஒரு நாலு மணி நேரம் கூடுதலாய் கிடைத்தால் :)

      Delete
  10. ஜோக்ஸ், கவிதை, துணுக்கு
    எல்லாமே நச்சுனு இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உங்க 'நச்சு'க்கு நன்றி :)

      Delete
  11. ஹலோ பகவான் ஜி ங்களா ????????

    அந்தப் பலான டாக்டர் விலாசம் தர முடியுமா ???
    எதுக்குன்னு கேட்காதீங்க இழுத்து வச்சு வெட்டத்தான் !

    நல்ல வேளை நமக்குப் புரையேறும் போது யாரும் பக்கத்தில் இருப்பதில்லை !

    அத்தனையும் ரசித்தேன் ஜி அருமை அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எதை வெட்டப் போறீங்கன்னு சொன்னால் ,விலாசம் தருகிறேன் :)

      எதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க :)

      Delete
  12. கிணற்றுத் தவளை...ஹஹஹ நல்ல பதில்...

    ஜெயகிருஷ்ணன்...ஜெயில் கிருஷ்ணன்...ஹஹஹ் வார்த்தை விளையாட்டு...அவரும் ..

    புரைக்கேறும் போது...அடப்பாவமே..இப்படியுமா...இன்னும் புரைக்கேறும்...

    ReplyDelete
    Replies
    1. எவரெஸ்ட் தவளைன்னு வென சொல்லலாமா :)

      கிருஷ்ணரும் ஜெயிலில் பிறந்தவர்தானே :)

      சந்தேகம் வந்தால் இப்படித்தான் :)

      Delete