30 December 2015

மனைவிக்கு வரக்கூடாத சந்தேகம் :)

 இது ஜோக்கில்லே ,உண்மை :)            
                   ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லவே கூடாது ,சரியா ?''

                ''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூட சொல்லக் கூடாதா ,டாக்டர் ?''


மனைவிக்கு வரக் கூடாத சந்தேகம் :)           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் :)
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

 1. இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''

            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்கைக்கும்  வித்தியாசம் ,,?

திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

16 comments:

 1. அதிர்ச்சி வைத்தியங்கிறது இதுதான்... மொதல்ல புரிஞ்சிக்கங்க...!

  பிளாட்டை பற்றித்தான் கேட்டார்... சின்ன வீட்டைக் கட்டிட்டு அழுவுறதுதான் அவனுக்குத் தெரியுமே...!

  வீட்லயே யானையோடதான் இன்னும் சாகம உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு சொல்லாரு டாக்டர்...!

  வலது கை ஆட்டக்காரர்ன்னு சொல்லுங்கோ...!

  இரண்டு பேரிடமும் மாட்டிக்கொண்டு திண்டாடுபவன் பாமரன் ...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் செய்தால் வைத்தியம் ,நாம் செய்தால் பைத்தியம் ஆகிவிடுமே :)

   வச்சுகிட்டா அழத்தானே வேணும் :

   டாக்டருமா :)

   அதானே ,இருக்கத்தானே செய்கிறார்கள் :)

   வாழ வைப்பவன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் :)

   Delete
 2. ஊசி/மருந்தின் விலை, மத யானை...இடதுகை வலது கை....ஹ்ஹாஹ்ஹ்ஹஹ

  இறுதித் திட்டம் செம....

  ReplyDelete
  Replies
  1. அந்த ஊசி மருந்தின் விலையை கேட்டதும் ,எனக்கே ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது :)

   Delete
 3. பிளாட் தானே பகவானே,
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் உங்களுக்குமா :)

   Delete
 4. அதைச் சொல்லி அவரிடம் 50000 ரூபாய் கேட்கக் கூடாது என்பதுதான் செய்தி கட்டாமல் இருப்பதுபற்றி கட்டினவளின் சந்தேகம் தீர்ந்ததா.அப்பன் சாப்பிடும் போது செத்தான் என்று மகன் சாப்பிடாமலேயே செத்தானாம் இடது கையால் கொடுக்கவே மாட்டாரோஆகவே இருவருமே திட்டமிடுபவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆனால் கேட்காமல் விடுவாரா :)
   தீரக்கூடியதா இந்த சந்தேகம் :)
   ஏன் செத்தான் ,கமிஷனைப் போட்டு விசாரிக்கச் சொல்லலாமா :)
   எடுப்பாராய் இருக்கும் :)
   நம் கழுத்தை அறுக்க :)

   Delete
 5. 01. சொல்லலாம் உடனே பாடியை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டியது வரும்
  02. நான்கூட வேற மா3 நினைச்சேன் ஜி
  03. காலவிணைதான்
  04. நல்ல கொள்கைதான்
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. அதுக்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்யாமல் போனால் சரிதான் :)
   எப்படி ,அவர் ஒரு 4ஜரி கேஸ் என்றா :)
   மாட்டேன் என்பதற்கு இப்படியும் ஒரு காரணமா :)
   கொடுக்கிறாரே ,நல்ல மனிதர்தான் :)
   இரண்டு பேரில் யார் தேவலைன்னு சொல்லுங்க :)

   Delete
 6. எதைக் கட்டாமன்னு தெரிய வேண்டாமா?நியாயமான சந்தேகமே!

  ReplyDelete
  Replies
  1. எச்சரிக்கையா இருக்கிறது தப்பா :)

   Delete
 7. Replies
  1. உங்களுக்குப் பிடித்ததா ,அவரோட கொள்கைப் பிடிப்பு :)

   Delete
 8. பதிவை ரசித்தேன்.
  2016 இனிதாக மலர்க!
  (வேதாவின் வலை)

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ரசனைக்கும், வாழ்த்துக்கும் நன்றி :)

   Delete