5 December 2015

பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

நல்லார் ஒருவர் உளரேல் ........(:              
            ''என்னடா சொல்றே ,நல்லவங்க நிறைய பேர் சென்னையில் இருக்கிறதா தெரியுதா ?''
               ''ஆமா ,மழை அங்கே சக்கைப் போடு போடுதே !''


லூசுலே  விற்கக் கூடாதுன்னு  சொன்னவன் லூசா ?                        

                                  ''புகையிலை பயன்பாட்டைக் குறைக்க ,அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு  தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
                  ''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி  ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''                                                
                                                 

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?
                                  ''உங்கம்மா இன்னைக்கி வாங்கின   முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து ஏன் வடிக்கட்டி பார்த்துகிட்டு இருக்காங்க ?''
              ''தங்கத்தை தூளாக்கி  ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா ,பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ..ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''

 1. பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

  கல்யாணமான  சில நாட்களிலேயே ...
  இளம் மனைவியை இங்கே விட்டு விட்டு பொருளாதார நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனக் கஷ்டத்தை வெறும் வார்த்தையில் வடித்து விட முடியாது ...
  அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் ...
  அப்படிப்பட்ட நிலையில் மலேசியாவில் வேலைப் பார்க்கும் பையனுக்கு வீட்டிலிருந்து ...
  உடனே கிளம்பி வரவும் என்று தகவல் வந்துள்ளது ...
  கல்யாணமாகி முன்றே மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் பதறி அடித்துக் கொண்டு வந்து...
  காவல் நிலையத்தில் இளம் மனைவியின் மீது புகார் கொடுத்துள்ளார் ...
  ஒரு சின்ன பிளாஷ்பேக் ...
  அந்தப் பெண்ணிற்கு வாந்தி ,மயக்கம் வந்ததென்று மருத்துவமனைக்கு சென்று காட்டியுள்ளார்கள் ...
  செக் அப் செய்து டாக்டர் சொன்ன தகவலால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ...
  அந்த புதுப்பொண்ணு (?) ஒன்பது மாதக் கர்ப்பமாம் !
  திருமணமாகி பல வருடங்கள் ஆனபின்பும் பிள்ளைப் பெற முடிய வில்லையே என்று பல தம்பதிகள் வருந்திக் கொண்டிருக்கும் ...
  நம் தங்கத்  தமிழ் நாட்டில்தான் ...
  கல்யாணமான மூன்று மாதத்திலேயே பிள்ளைப் பிறக்கும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !
  தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமை நடந்துள்ளது !

  1. இப்படியும் சினிமா வரலாம் !
  2.   ''நான் எடுக்கிற படத்தின்  பேர்  'பர்கர் 'எப்படி இருக்கு?''
  3.  ''ஹை பட்ஜெட் படம்னா ok ,லோ பட்ஜெட் படம்னா...பீடா,பீடி தான் பொருத்தமா இருக்கும் !


காணாமல் போன ரெண்டு !
மெத்தை  வாங்கினேன் 
தூக்கத்தை வாங்கலே ..
இன்வெர்ட்டர் வாங்கினேன் ..அதுக்கே 
கரண்ட்டை  காணலே !

18 comments:

 1. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை’. என்று யாரைச் சொல்கிறீர்கள்...? நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா...!


  கேன்சரை சில்லரையா வாங்காம மொத்தமா வாங்கிக்கங்க... லூசாப்பா நீ...!


  ஹார்லிச் பாலாப் போச்சா...? எல்லாம் பாழ்...!


  பசுவும் கன்றுமாகப் பிடித்து வந்து... விட்டு விட்டு மலேசியா அவன் பறந்து போனானே...! எங்கிருந்தாலும் வாழ்க...1


  லோ பட்ஜெட்டா... இல்ல லோக்கல் பட்ஜெட்டா...?


  இன்வெர்ட்டர இன்வென்டேட் செய்தவர் கரண்ட்ட கண்டுபிடிச்சு கொடுத்தா பரவாயில்லை...!

  த.ம.1  ReplyDelete
  Replies
  1. சென்னையில் உள்ள நல்லவங்க ,உடனே வெளியேறவும் என்று அறிக்கை வெளியிட்டால் சரியாய் போகுமா :)

   சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோர் மீதுதான் எவ்வளவு கரிசனம் ?ரெண்டே சிகரெட்டாம் ,அதுவும் ஒரு பாக்கெட்டாம் :)

   ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டு தினசரி குடிப்பாங்களோ :)

   கன்று உள்ளே இருக்குன்னு, இங்கே இருக்கும் போதே தெரிந்து இருந்தால் கொன்று போட்டிருப்பானே :)

   அப்படியும் சொல்லலாமே :)

   இன்வேர்டருக்கு கரண்டைக் கொடுக்க ஒரு ஜெனரேட்டர் வாங்கணும் போலிருக்கே :)
   Delete
 2. Replies
  1. ஹார்லிக்ஸ் சுவையை மறக்க முடியாதுதானே :)

   Delete
 3. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசிப்பது தெரிகிறது ,உங்கள் தளத்திலும் என் பதிவுகளை மீள் பதிவு செய்வதன் மூலம் !அதற்கு என் மனங்கனிந்த நன்றி :)

   Delete
 4. 01. ஆமா அரசியல்வாதிகள் பூராம் அங்குதானே...
  02. வாழ்க்க்க்கு அவசியமானதே...
  03. நல்ல மெய்ஞானம்
  04. இனி வரும் காலங்களில் இது சகஜமாகி விடும் ஜி
  05. அடடே..
  06. ஆஹா...

  ReplyDelete
  Replies
  1. அவங்க அவங்க தொகுதிப் பக்கம் போனால் நல்லது :)

   சோறு தண்ணியில்லாமல் இருப்பார்கள் ,இது இல்லாமல் இருப்பார்களா :)

   அதான் இப்படி அலைய வைக்குதோ :)

   இதுவுமாஆஆஆ:)

   கவர்னர் பீடி என்று கூட தலைப்பு வைப்பார்கள் :)

   கரென்ட்டைக் காணோம் ,ஆஹாவா :)

   Delete
 5. Replies
  1. பர்கரை ருசீத்தீர்களா :)

   Delete
 6. பொண்ணு பாரக்கப் போயிகையிலே....இனி இதையெ்ல்லாம் விசாரித்துதான் ஆகனும் போலிருக்கே.............

  ReplyDelete
  Replies
  1. பொண்ணு முழுகாம இருக்கான்னு கேட்டா ,நல்லாவா இருக்கும் :)

   Delete
 7. இந்த பெருமழையையும் சிரிப்பாக்கி விட்டீர்களே ஜி!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நல்லார் ஒருவர் உளரேல் என்று எடுத்துக் கொடுத்து சிரிக்க வைத்தது ஔவைப் பாட்டிதான் :)

   Delete
 8. Replies
  1. ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை ரசிக்க முடியுமா :)

   Delete
 9. தங்கத்தை தூளாக்கி ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா ,பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ..ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''
  - தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே
  இப்படி எல்லாம்
  சிரித்தேன் சகோதரா....
  நன்றி
  .https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. நலமா ,உங்கள் தளத்தில் உங்களைப் பார்த்தே நாளாச்சே :)

   Delete