8 December 2015

பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ :)

 பயபிள்ளே ,பழமொழியைக் கூட சொல்ல விடாம பண்ணிட்டானே :)       

           ''ஒரு பேச்சுக்கு தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு சொல்ல முடியலியா ,ஏன் ?''
           ''ஒன்பதாம் வகுப்பிலே மூணு வருசமா  உட்கார்ந்து  இருக்கிற உங்க  பையனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''


ஆபீசில் 'நீளும் 'கை ,வீட்டில் :)

                   ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
                   

             ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''
 1. நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)

               ''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
              ''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''


 2. பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ :)

  Multi Level Marketing எம்பதை சுருக்கமாக M L M என்பார்கள் ...
  அந்த M L M யை கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்தால் ...
  மலம் என்று வரும் ...உண்மையும் அதுதான் ...
  M L M பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்று ...
  முன்பு ட்வீட்டரில் நான் ட்வீட்டியதை உண்மையென நிரூபித்துள்ளனர் ...
  அண்மையில் கோவை போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கும் வக்கீல் தம்பதியினர் ...
  அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தால் ...
  இருவரும் வக்கீலுக்குப் படித்தவர்கள்தானா என சந்தேகம் எழுகிறது ...
  ஓடிசாவில் தொடங்கிய MLM நிறுவனத்திற்கு அந்த பெண்மணிதான் ...
  தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தி வந்தாராம் ...
  வேண்டிய மட்டுக்கும் மக்களின் பணம் வந்தவுடன் கம்பி நீட்டிய வழக்கில் இருந்து தப்பிக்க ...
  தன்னை நம்பி வழக்கை ஒப்படைத்த பெண்ணைக் கொன்று ...
  அந்தச் சடலத்தை வைத்து தன் மனைவி இறந்து விட்டதாக ஆள் மாறாட்டம் செய்து ...
  ஒடிசா பண மோசடி வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்றி இருக்கிறார் அவரது கணவர் ...
  இறந்த மனைவி இறந்ததாகவே இருந்தாலும் பரவாயில்லை ...
  இன்னொருவர் சொத்தை அபகரிக்க இறந்தவரை  உயிர்ப்பித்து இருக்கிறார் ...
  இது மட்டுமல்ல ,இன்னொரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும் ,மாயமான பெண் வழக்கிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் வக்கீல் தம்பதியர் ...
  இவர்களின் புகழ்லண்டனில் இருந்து வெளியாகும்  'தி ஏசியன் ஏஜ் 'பத்திரிக்கை மூலம் உலகெங்கும் பரவி விட்டது !
  வக்கீலிடம் உண்மையை மறைக்ககூடாது என்பார்கள் ...
  இந்த வக்கீல் தம்பதியினர் உண்மையை மறைத்து சமூகத்தில் பெரிய மனிதர்களாய் வலம் வந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தால் ...
  யாரைத்தான் நம்புவது என்றே புரியவில்லை !
  1. ரீசார்ஜ் ஆகுமா காதல் :)

   மூன்றாண்டு காதல் முறிந்தது 
   மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
   அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால்!

22 comments:

 1. படிக்கிறவன பாஸ் பண்ண வைக்கலாம்... படிக்கிறமாதரி நடிக்கிறவன பாஸ் பண்ண வைக்க முடியாதில்... ‘இந்தக் கட்டடத்தை இடித்துப் போடுங்கள்... மூனே நாளில் எழுப்பிக் காட்டுறேன்’னு சொன்னாராமே... அவரிடம் விடுங்க...!

  கை நீட்டுற வேலையை வீட்டுல நான் தான் செய்வேன்... எந்த வேலைக்கும் வீட்டில... கையூட்டுதான்!

  எதையுமே நாங்க குறைச்சுத்தான் சொல்லுவோம்...! கூடச் சொல்லவே மாட்டோம்... நீங்க கவலைப் படாதீங்க...!

  வக்கீல் புகழ் லண்டன் வரை போயிடுச்சா... காந்தி இருந்தா தன் தொழிலையே விட்டிருப்பாரு...!

  ரீசார்ஜ் செய்ய சார்ஜ் இல்ல... கரண்டும் இல்ல... கரன்சியும் எடுக்க முடியல...காதல் வெள்ளத்தில மூழ்கிடுடச்சு...!

  த.ம.1


  ReplyDelete
  Replies
  1. விட்டு விடலாம் ,அந்த மேதாவியின் விலாசத்தைக் கொடுங்க :)

   நல்ல பழக்கம் அங்கே வாங்கல் ,இங்கே கொடுக்கல் ,அப்படியே தொடரட்டும் :)

   காசை மட்டும் கணக்கில்லாமல் வாங்குவோம் ,அப்படித்தானே :)

   இன்டர்நேசனல் பிராடோ :)

   மனசிருந்தா மார்க்கமுண்டு :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  அட்டகாசம்... இரசித்தேன் த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க நாட்டிலும் mlm வியாதி இருக்கும்னு நினைக்கிறேன் :)

   Delete
 3. Replies
  1. சேதாரத்தை தானே :)

   Delete
 4. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
  சில வேண்டுதல்கள்...

  இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
  மணிதம் இன்னும் மரிக்கவில்லை
  என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
  நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
  நிறையவே நாம் ஜாக்கிரதையாக
  செயல்பட வேண்டிய தருணம் இது...

  அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
  வேண்டுதல்கள்..

  1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

  2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

  3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

  4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

  உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

  நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

  உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வேண்டுதல்கள் உரியவர்களிடம் போய் சேர்ந்தால் மகிழ்ச்சியே :)

   Delete
 5. Replies
  1. வக்கீல் தம்பதிகள் செய்தது கொடுமையா இருக்கே :)

   Delete
 6. ஒன்பதாம் வகுப்பில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் என்றால் தூங்குகிறான் என்று அர்த்தமா. கேரளத்தில் விஷு அன்று கை நீட்டுவார்கள் சிறியோர் பெரியோரிடம் நீண்ட நேரம் இருந்து நகை வாங்கத் தோதாக இருக்கும் எம் எல் எம் முக்கும் வக்கீல் வேலைக்கும் என்ன சம்பந்தம்

  ReplyDelete
  Replies
  1. விழித்துக் கொண்டிருந்தால் பாசாகி இருப்பானே :)
   கை நீட்டம் சகஜம் தானா :)
   கிரிமினலாய் ஆனதுதான் சம்பந்தம் :)

   Delete
 7. 01. நியாயம்தான்
  02. நல்லவேளை சொல்லோடு நிறுத்தினாளே..
  03. அனுபவசாலி
  04. உண்மையை மக்கள்தான் மறைக்க கூடாது
  05. செல்லில் சொல்லும் காதல் இப்படித்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அவருக்கு புரிய மாட்டேங்குதே :)
   அப்புறமா ,நடந்தது நமக்கு தெரியாதே :)
   இந்த விஷயத்திலுமா :)
   வக்கீல் மறைக்கலாமோ :)
   முகம் காணாமலே போய்விடுமோ :)

   Delete
 8. உண்மை ஒருநாள் வெளிவரும் என்பது உண்மைதானே..........

  ReplyDelete
  Replies
  1. அதில் யாருக்கும் சந்தேகமில்லை :)

   Delete
 9. வக்-கீழ்'தரமாகவல்லவா இருக்கிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலோர் அப்படித்தானே இருக்கிறார்கள் :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தேன். நேற்று முதல்தான் மறுபடி ப்ளாக் பக்கம் வருகிறேன். :))))

  ReplyDelete
  Replies
  1. அதானே ,பேரிடரில் மாட்டிகிட்டீங்களா :)

   Delete
 11. ரசித்தேன்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. தாரம்தான் ,சேதாரத்தைப் பற்றி கவலைப் படுவதில்லையே :)

   Delete