28 December 2015

இனி ' கிளி 'னிக் வர்ற கூட்டத்துக்கு பஞ்சமில்லே :)

                                    '' அந்த டாக்டர்  'கிளி 'னிக்னு  போர்டுலே  எழுதியிருக்காரே ,ஏன் ?''
                                     '' கிளி மாதிரி  அழகா இருக்கிற  நர்சுங்க நாலு பேர் ,புதுசா வேலைக்கு சேர்ந்து  இருக்காங்களாமே  !'' இப்படியும் சில பெண்கள் :)


             ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டு ,இப்ப நீயே ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

        ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !'' முற்றும் துறந்த நிலை சாத்தியமா :)

                 ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ?''
                '' அவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது என் கடமைன்னு  சொன்னாராமே  !''

 1. டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் :)

                  ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
             ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
 2. கோளாறு எங்கேன்னு கண்டுபிடிங்க :)

  ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
  ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

  1. கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)
  2. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
   1. மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ...
    1. ஊருக்கு  ஒருத்தி !

22 comments:

 1. ஒரு நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் ரசனையுடன் பதிவு ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. டிசம்பர் 26 சுனாமி நினைவு தினம் ,இந்த வருடம் என் தளத்தை சுனாமி தாக்கி விட்டது :)

   Delete
 2. 01. இந்த ‘’கிளி’’யோட அட்ரஸ் சொல்லி இருக்கலாம் ஜி
  02. பழக்கதோஷம்தான்
  03. இரண்டும் ஓரினம்தானே.. இதில் தவறில்லையே... ஜி
  04. உளறிட்டானா
  05. குழப்பமாகீதே...
  06. கடமை தவறாதவர் இவர்தான்

  ReplyDelete
  Replies
  1. நீங்க இருக்கிற நாட்டுக்கே,இங்கேயிருக்கிற கிளிகள் பறந்து போகுதே :)
   மாறவே மாறாதா :)
   ஆண்னென்ன பெண்என்ன எல்லாம் ஓரினம்தானா :)
   சான்ஸ் கிடைக்கும் போது குத்திட்டான் :)
   செடி காற்றில் இருக்கிற ஈரத்தையும் உறிஞ்சு வெளியே தள்ளுதா :)
   காலமெல்லாம் பேசும் ,இந்த கடமை வீரரை :)

   Delete
 3. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ அந்த கிளியோபாட்ரா...?

  ‘டம் அண்டு டம்மர்’ ஸ்கூல்ல படிச்சாப் புரியும் ...!

  உண்மையில் இவர்தான் முற்றும் துறந்த முனிவர்...!

  பாவம் காய்... எட்டிக்காய்...கட்டிக்காய்...!

  தண்ணீ குடிக்கிற ரோஜாவா பாத்து வைக்கணுமுல்ல...!

  ‘ஒருவனுக்கு ஒருத்தி ஒரு ஊருக்கு’ அதில்ல நமது பண்பாடு...!

  த.ம.3


  ReplyDelete
  Replies
  1. இப்பவே இப்படிப் பாடுறீங்களே,பார்த்தால் ...:)

   இனி மேலா படிக்க முடியும் :)

   முற்றும் போடாமல் தொடரும் முனிவர் ,அப்படித்தானே :)

   தாலி கட்டியதில் இருந்தே எப்படி கசக்கத் தொடங்குமோ,தெரியவில்லை:)

   அதுக்கு என்ன பேரோ :)

   பெண் பாட்டை நினைத்தால் அழுகைதான் வருகிறது :)

   Delete
 4. Replies
  1. வழக்கம் போல நகைச்சுவையை ரசித்தேன் நண்பரே! ஜோக்குகளுக்கு இடையில் நீங்கள் வைக்கும் அந்த குறுஞ்செய்திகள் என்ன ஆயிற்று?

   Delete
  2. அதுவும் இனிவரும் நண்பரே :)

   Delete
 5. //டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் :)//

  உண்மை கசக்கும்!

  ReplyDelete
  Replies
  1. கசப்பு கேட்பவருக்கா ,பேசுபவருக்கா :)

   Delete
 6. கிளி முதல் ஊருக்கு ஒருத்தி வரை அனைத்துமே அருமையான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பதற்கு அருமைதானே பஞ்சவர்ணக்கிளிகள் :)

   Delete
 7. நர்ஸ் ஜோக்கும், வேலைக்காரி ஜோக்கும் அருமை.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,இவர்களை நம்பியே இருப்பதும் எனக்கு போரடிக்கிறது :)

   Delete
 8. கிளி"நிக், கசப்பு, முற்றும் துறந்த அஹஹஹஹ ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. மூன்றும் மூன்று விதமா :)

   Delete
 9. வணக்கம்
  ஜி

  1வது. 2வது நகைச்சுவையை படித்து படித்து சிரித்தேன் ஜி.. அற்புதமாக இருக்கிறது..வாழ்த்துக்கள்... த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்களின் தர வரிசைக்கு நன்றி ,ரூபன் ஜி :)

   Delete
 10. கிளி நெக்னு போட்டிருக்கலாமோ!

  மனித சுபாவம்.

  ஓ மை காட்!

  கசப்பே கசந்து விட்டதோ!

  ரோஜாவால் ப்ரச்னை அதிகமா இருக்கே!

  தெருவுக்கு ஒருத்தி என்று முன்னேறும் வரை போராடுவார் அவர்!
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அதையும் டாக்டரே முடிவு பண்ணட்டுமே :)

   சொறிந்து கொள்வதைப் போலவா :)

   இதுவும் தெய்வத்தின் பெயரால்தானா :)

   எண்ண எண்ண இனித்ததெல்லாம் ஒரு காலமோ :)

   முள்ளால்தானே எப்பவும் வரும் :)

   தெருவினில் போராடலாம் ,தெருவுக்கு ஒருத்திக்காகவா :)

   Delete