31 January 2015

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

                         ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                        ''எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
          ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''
Thulasidharan V Thillaiakathu31 January 2014 at 14:19
இதுலயும் ஒரு சிக்கல் இருக்குதே ஜி! கவனமாமாகச் செல்லவும் அப்படினு போட்டுருக்கு அதான் கவனமா வரோம் அப்படினு இன்னும் லேட்டாக்குவாங்களே!

Bagawanjee KA31 January 2014 at 23:14 
கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததான்னு வாத்தியார் கேட்பாரே  !

Thulasidharan V Thillaiakathu1 February 2014 at 11:34
அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!

Bagawanjee KA1 February 2014 at 12:22
சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !
 1. இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா ?

              ''அவர் வயலின்லே அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
             ''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

 2. வணக்கம்ஜீ.....
  நல்ல வித்துவான்... சில நேரங்கள் இப்படியும் வருவது வழக்கம்....

 3. கான மழை அவர் பொழிந்தால் 'காலடி' மழை அவர்மேல் பொழியும் ,அப்படித்தானே ?
 4. உண்மை ஜோதிடம் ஜனகனமன நேரமும் சொல்லும் !

           ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
                ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 

 5. கேள்விக் குறியாகும் மரியாதை !  புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 
  இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
  வெளிச்சத்திற்கு வரும்போது ...
  மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !
 1.        
30 January 2015

நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

  -------------------------------------------------------------------------   
மாமூல் தந்த தைரியமோ :)
            ''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''  
            ''ஏன்  ?''
              ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''
 நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?           
                    ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

அவங்க வாசல்ல இந்த போர்டு வைக்கலாமெ :

தப்பு செஞ்சா கைமேல பலன் கிடைக்கும்

உள்ள ஜுவெல்ஸ் கொடுத்தா கைமேல பணம் கிடைக்கும்

கோபாலன்
ReplyDelete

Replies


 1. வங்கி ஆலோசனைக் குழுவுக்கு உங்கள் ஆலோசனையை சமர்ப்பிக்கிறேன்!ஆவன செய்வார்களாக !
 2. தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா ?

             ''காக்கா கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி 
 3. இருக்கா எப்படி ?''
 4.         ''தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , 
 5. வேற எப்படி வந்திருக்கும் ?''


 6. திண்டுக்கல் தனபாலன்30 January 2014 at 11:44
  ஓஹோ... அப்படித்தானோ...?
  ReplyDelete  Replies


  1. தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?


   1.   
   ஸ்கூல் பையன்30 January 2014 at 20:04
   //தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?//

   மூளைக்கு வந்தது முடியோட போச்சுன்னு சொல்லலாம்....
   ReplyDelete

   Replies


   1. முடி இழந்த மன்னர்கள் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள் !
   2. கவலைகள் ஓய்வதே இல்லை !

    மாசக் கடைசியில் ...
    நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
    காசும் குறைகிறது,
    நெட் ஸ்பீடும்  குறைகிறதே!  


29 January 2015

தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா :)

  சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
        ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !
               ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா 
வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''

வணக்கம்
தலைவா.....

புத்திமான் பலவான்............ஜீ.....த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDelete

Replies


 1. புத்திமான் பகவான்ஜி ன்னு எனக்கு தெரிந்தது ..ஹீ ஹீ !
 2. மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா?

            ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
 3.          ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''


 4. 'பாம்பு பாம்பு' என்று ஓடும்போது சாதம், சாம்பார், ரசத்தையெல்லாம் கொட்டி விட்டு ஓடாதிருந்தனரே.... :)))
  ReplyDelete  Replies


  1. முதல் பந்தி முடியும் வரை பாம்பு வரவே இல்லை ,வந்திருந்தா நீங்க சொல்ற மாதிரிதான் ஆகி இருக்கும் !

 5. தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா ...!

           ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
             ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டு பாரேன் !''

 6. மோதிரம் யாருக்கு என்று சொல்லச் சொல்லுங்கள் ஜி! உண்டியல்ல போட்டா ஆஞ்சனேயருக்குப் போகாதே! ஆமாம்! பாவம் ஆஞ்சனேயர் ராமனுக்குத் தூது போனார்!!! இப்பவுமா? பிரம்மச்சாரி எத்தனை பேருக்குனுதான் போவார்!!! காலம் காலமாக.....ஆளை வுடுங்கப்பானு சொல்லாமல் இருந்தால் சரி

  த.ம.
  ReplyDelete  Replies


  1. மனைவி திரும்ப வந்தா கேட்கிற முதல் கேள்வி ,எங்கே மோதிரம் என்பதாகத்தான் இருக்கும் ! காணிக்கையா போட்டாச்சு என்றால் ...மனைவி மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடும்!வேற வழியில்லை ,இப்போதைக்கு கவரிங்கில் ரெடி பண்ணி போட்டு விட வேண்டியதுதான் !
  2.  கற்பு எனப்படுவது இதுதானோ ?

   அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
   அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !


28 January 2015

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

-----------------------------------------------------------------------------------------------
மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் !
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா ?
        ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு 
எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''
மார்க்கண்டேயர்கள்!
ReplyDelete


 1. ஆமாம் ,மார்க்கண்டேயனாய் இருக்கும் போதே 'மர் கயா'ஆகிவிடுகிறார்கள் !
 2. காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?

              ''தினமும் நாய் துணையோடு வாக்கிங் வர்ற பொண்ணைக்  
 3. காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
 4.                  ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
ஏதோ ஒரு சம்பந்தம் இவர்களுக்குள் இருக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று
ஆண்டவன் நினைத்து இருக்கிறார். marriages are made in Heavens இல்லையா ?

அது இருக்கட்டும்.நான் 1970 லே பார்த்த ஒரு நிகழ்வு.

பெண் பார்க்க கூட அழைத்துக்கொண்டு போன நண்பருக்கும்
அது போல பெண்ணுக்குத் துணையாக இருக்க வந்த தோழிக்கும்
காதல் கசிந்து , இவர்கள் திருமணம் நிச்சயம் ஆகுமுன்னமே அந்த திருமணம்
முடிந்து விட்டது.
சுப்பு தாத்தா.
ReplyDelete

Replies


 1. கல்யாணம் நிச்சயம் ஆகிறது மட்டும்தான் சொர்க்கத்தில் போலிருக்கு !
 2. அந்த திருமணம் மறக்க முடியாத மலரும் நினைவுகள் இல்லையா ,சுப்பு தாத்தா ?
 3. அவன் கழுத்தில் சங்கிலியைக் கட்டிக் கொண்டு
  நாயை அழைத்துப் போய்
  முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாமா ?
  ReplyDelete

  Replies


  1. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ...ட்ரை பண்ணிப் பார்க்கலாம் !

  Jeevalingam Kasirajalingam30 January 2014 at 12:21
  காதலுக்குத் தூது செல்வோருக்கு வருவது போல
  நாய்களுக்கும் காதலா?
  ReplyDelete


  Replies


  1. ஆமாம் ,இவர்கள் இருவரும்தான் நாய்கள் 
  2. காதலுக்கு தூது போலிருக்கிறது !