30 April 2015

கஞ்சப்பிசினாறிக்கு ஏற்ற மனைவி:)

 ஓட வைத்தவரை ,தொப்பை  ஓட வைக்குதே :)                

           ''அதோ ,அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அவரைக் கண்டாலே  ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''

                  ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''


கஞ்சப்பிசினாறிக்கு  ஏற்ற மனைவி:)

              ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
        ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும்    பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
ஹா..ஹா...

100கிராம் பேஸ்ட்டில் எக்ஸ்பைரி டேட் இரண்டு வருசம்னு போட்டிருக்கு..அந்த பேஸ்ட்டை ரெண்டு வருஷம் பயன் படுத்தணும்னா ...டெய்லி மூடியை திறந்து வைத்து மூடலாம் !
இப்பத்தான் புரியுது. செல பேர் நாள் பூரா நியூஸ்பேபர கைலவச்சிக்கிட்டே ஒக்கந்துருப்பாங்க.

கொஞ்ச நாளா மதவாதி மோதிக்கு வக்காலத்து வாங்கியே நேரம் போய்ருச்சு. அதுதான் இந்தப் பக்கம் வரமுடியல

Bagawanjee KA30 April 2014 at 18:39
ஆமா ,அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் படிக்கணும்னு தானே தேதி போட்டிருக்கு !

ஓ..அந்த மோடி மஸ்தான் வேலையை வேற செய்றீங்களா ?


பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

           ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு

மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''


              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம்

மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !


மழை அளவு குறைவு தரும் பாடம் ?
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

29 April 2015

மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும் :)

  எப்படியாவது தலைவராகணும் ::)          

             ''நாலடி உயரம்  இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது போலிருக்கு ,அதனாலே ... !''

                   ''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?''
                   '''கட்டை 'பஞ்சாயத்து தலைவர் ஆகப் போறேன் !''

மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும் !

              ''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
            ''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியல ....நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''
இட்லி மாவிலே  உருட்டுக்  'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ !
           ''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் 

திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''


             ''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

நல்லவர்கள் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால்  ......?
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...

கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !

         அம்பாளடியாள் வலைத்தளம்29 April 2014 at 02:06
அட அந்த சர்வருக்கு திமிர் மட்டும் இல்ல கூடவே கொஞ்சம் மூளையும் இருக்கு என்று நிரூபித்து விடார் சகோதரா :))
ஆமாம் ..அவருக்கு இருக்கிற மூளைக்கு ,பொங்கல்லே கல் இல்லையென்றாலும் கல்லைப் போட்டுக் கொண்டு வருவார் முந்திரி பருப்புக்குப் பதிலாய் !
அந்தக் கட மொதலாளி இன்னும் வெவரம். கல்லுக்குள் ஈரம் (படம்) பாத்ருப்பீங்க. நம்ம கடேலதான் ஈரத்துக்குள் கல் பாக்றீங்கன்னாரம்.
அவர் அப்படித்தான் சொல்வார் ,ஏன்னா ...எல்லோரும் கல்லுலே இட்லி மாவை ஆட்டுவாங்க ,இவர் மாவுலே கல்லைப் போட்டு ஆட்டுவறாச்சே !28 April 2015

பொண்ணு பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)

                  ''என்னங்க ,நம்ம பொண்ணைப் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் கூட்டிட்டு வரச் சொல்றீங்களே ,ஏன் ?''

                                '' டிவி சீரியல்களைப் பார்க்காததால் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''

வா x யை மூடி பேசவும் முடியும் என்றால் .....!

          ''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு 

சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் 

சொல்றீங்க ?''

         ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''


கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

         ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத 

ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''


       ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது

சிரிக்கட்டுமேன்னுதான் !''

குறள் வழி நடக்கும் நாய் !

சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...

நாய் வாலறுந்த பின்னாலும் 

வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் 

சுற்றி சுற்றி வருகிறதே !அம்பாளடியாள் வலைத்தளம்28 April 2014 at 03:10
உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))
 1. இங்கே என் கதையே தலைக்கீழ் ...நான் எழுத்தையே கட்டிக்கிட்டு அழுறேன்னு,என்னை கட்டிக்கிட்ட வூட்டம்மா அழுவுறாக!
 2. அம்பாளடியாள் வலைத்தளம்28 April 2014 at 12:03
  :)))
 3. இதுக்கும் சிரிப்புத்தானா ?
  நன்றி
  Delete
 4. Mythily kasthuri rengan30 April 2014 at 19:20
  நான் கேட்கனும்னு நினைத்தேன் . அவங்க கேட்டுடாங்க:))
 5. உங்க சார்பா நான் அவங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன் !

  1. சைதை அஜீஸ்28 April 2014 at 06:14
   இப்போது வரும் படங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுதான் பார்க்கமுடியும்! 

    1. அதனாலதான் ஜனங்களும் காசை செலவழிக்காமல் பார்க்க நினைக்கிறார்கள் !
    2. விமல் ராஜ்28 April 2014 at 09:12
    3. ஹா..ஹா...ஜீ ...பேசாம நீங்க எழுதின ஜோக்கை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்... அதுவே ரெண்டு மூணு பாகங்கள் போகும் !!! வாழ்த்துக்கள்...
     1. ஜோக்குக்கு வந்த ரசனையான கமேண்டுக்களையும் சேர்த்து தொகுத்தால் நல்லாத்தான் இருக்கும் ...ஆனால் என்ன. வராத மொய் கணக்கிலே நான் ஒரு பத்தாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும் ,தேவையா ?டிபிஆர்.ஜோசப்28 April 2014 at 10:14
     2. கல்யாணத்துக்குப் பிறகுதான் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போலருக்கு! பிறருக்காகத்தான்னாலும் அதற்கும் ஒரு பெருந்தன்மை வேணுமே :))
     3. Bagawanjee KA28 April 2014 at 22:31
     4. மனைவியானவள் நகையை மட்டுமே ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள் ,கணவனானவன் மனைவியிடம் புன்னகையை மட்டுமே எதிர்ப்பார்ப்பதால் ,நகைச்சுவை உணர்வு அதிகமாகத்தானே செய்யும் ?
27 April 2015

எது நிம்மதி காதலா ,கல்யாணமா :)

மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ ?

         ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு இருக்கீங்களே ,ஏன் ?''        

''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?''

இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?

           ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் 
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறோம் !''
            ''அய்யய்யோ ,அப்புறம் ?''
          
 ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''

வாலாட்ட யோசிக்கும் நாய்கள் ?
          ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட 

மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''


         ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே 

அரண்டு போயிருக்காங்களே !''

எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?

காதலே நிம்மதி என்று ...

திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

திண்டுக்கல் தனபாலன்27 April 2014 at 08:07
தாமதமாக புரிந்து பயனில்லை... ஹிஹி..
அதுக்காக காலம் பூரா காதலித்துக் கொண்டே இருக்க முடியுமா ?
  விமலன்27 April 2014 at 11:47
காதலும் நிம்மதிதான்/
கல்யாணமும் நிம்மதிதான்னு நேரடியா சொல்ல முடியலையா ,விமலன் ஜி ?

26 April 2015

தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !

---------------------------------------------------------

டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

                ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு  சாப்பிடுறதேயில்லே , ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
        ''கல்யாணம் ஆனதில் இருந்தே  நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''


எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா ?

       '' இன்சுலின் சிரிஞ்ச் பேனாவை  பையிலே  வச்சுருப்பீங்களே,

இப்ப காணலையே ,ஏன் ?''

      ''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் 
கேட்கிறாங்களே !''
ஹா..ஹா..
 1. போறப் போக்கைப் பார்த்தால் எல்லோர் பையிலும் இன்சுலின் பேனா வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போலிருக்கு !
 2. அதுவும் யூஸ் அன் த்ரோ வாகிவிடும் விரைவில்... நல்ல நகைச்சுவை. 
 3. பலரும் பலரையும் யூஸ் அன் த்ரோ ஆகத்தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,மனிதனுக்கே இந்த நிலை என்றால் ,மருந்துக்கு ..?
 4. ஸ்கூல் பையன்26 April 2014 at 20:31
  நீங்கள் சொல்வது சரியே, இப்போதெல்லாம் முப்பது வயதுக்குள்ளாகவே பெரும்பாலானோர் இன்சுலின் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.... ஜோக் சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விடுகிறது...
  1. Bagawanjee KA26 April 2014 at 20:39
   நாட்டிலே ,தாராள மயக் கொள்கையால் எது நடந்ததோ இல்லையோ ,ஏராளமாய் சர்க்கரை குறையுடையோர் பெருகி விட்டார்கள் ,மருந்துக்கு தாராளமாய் செலவு செய்யவேண்டிய சூழ்நிலையும் உருவாகி விட்டது !பன்னாட்டு மருந்து கம்பெனிகள் காட்டில் மழைதான் !
தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !
             ''பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''


          ''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் '

புண்ணியத்தால்  கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த 

சக்தி வந்திடும் !''


சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?
சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 

தப்பைச் செய்தவர்களும் 


'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 

என்பதில்  என்ன நியாயம் ?

25 April 2015

சம்பாதிக்க முடியாதவன் புருசனா:)

==========================================
முட்டாள்களை   வேலை வாங்க முடியுமா :)
                  ''என்னை ஏன் வேலையிலிருந்து  நீக்குறீங்க ,முதலாளி ?''
                  '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !''


சம்பாதிக்க முடியாதவன் புருசனான்னு மனைவி கேட்கிற மாதிரி ....!
            ''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு   பணம் கிடைக்கலே போலிருக்கா ,ஏன் ?''
         ''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன்  எல்லாம் தேர்தல்லே 
ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !''

நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?

              ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
                   ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''

விண் மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

1. என்ன ஒரு ஆவேசம்!

2. நல்லவேளை நாணயங்களாக மாற்றி வாடகை தராமல் விட்டாரே!

3. சிரி கவிதை விழிப்புணர்வுக் கவிதையாக உள்ளது.
1.என்னைக்கும் கொடுக்கிற மூதேவி இன்னைக்கு ஏன் கொடுக்கலைன்னு அவர் கேட்கத்தானே செய்வார் ?
2.காயினா கொண்டு போனா தன தலையிலேயே கனகாபிஷேகம் நடந்து விடுமோன்னு பயந்து விட்டார் !
3.இது தரகு முதலாளிகளின் காலம் ,விழிப்புணர்ச்சி ,ஊஹீம் ..வருமான்னு தெரியலே !
       கோவை ஆவி25 April 2014 at 08:00
NSK typeல இருக்கே.. பேஷ்..
இருக்காதா ,அவரோட நிஜ காதல் லீலைகளை ரசிக்க முடியவில்லை என்றாலும் ,காமெடியை ரசிக்காதவர்கள் யார் இருக்கக்கூடும் ?
         துரை செல்வராஜூ25 April 2014 at 08:35
1. பரமசிவத்துக்கு இன்னும் பொழுது விடியலையா!..

2. எதுக்கும் ஒரு தடவை ரெண்டு காலும் இருக்கான்னு .. பாத்துட சொல்லுங்க!..

3. ஊரான் வீட்டு தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா..
அதை காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்!..
அப்படின்னு ரொம்ப ரொம்ப பழைய பாட்டு!..
முட்டையிடாத - டூப்ளிகேட் கோழிக்கு - மீன் பரவாயில்ல..

பாவம்.. வலை போட்டு இழுக்கறப்ப - மீனுக்கும் வலிக்கும் தானே.. சிவ.. சிவ...
 1. 1.பத்து full வாங்கிற அளவுக்கு காசு தேறும்னு நினைச்சு ஏமாந்தவருக்கு எப்படி விடியும் ?
  2.அந்த வீட்டு டோர் நம்பர் 13 தான் ,உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?
  3.சரியாய் சொன்னீங்க ,செயற்கை கோழி விலை மலிவாய் இருப்பது உண்மைதான் ,பிராய்லர் மீனும் மலிவாய்க் கிடைத்தால் பரவாயில்லை !
  மீனுக்கும் வலிக்கும்தான் ,அதுக்குத்தான் சொல்றாங்களே ...மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு !
 2. துரை செல்வராஜூ25 April 2014 at 10:11
  பிராய்லர்.. மீனா!?... சரியாப் போச்சு போங்க!..
  இனிமே.. அதுக்கான வேலையில எறங்கிடுவானுங்களே!?...
  எல்லாமே - இந்த மாதிரி வந்ததுன்னா... மனுசனும் அதே மாதிரி ஆயிடுவான்!..
  இப்பவே அந்த நிலைக்குப் போய்ட்டதா பீதிய கிளப்புறாங்க!..
  புரிஞ்சுதா.. இல்லையா!.. உங்களுக்குப் புரியாததா!..
 3. குளோனிங் ஏற்கனவே கண்டு பிடிச்சாச்சே !கண்ணுலே படுகிறவங்க எல்லாரும் ஐஸ்வர்யா ராய் மாதிரியே இருந்தாலும் போரடிச்சுருமேன்னுதான் நிறுத்தி வச்சுருக்காங்க போலிருக்கு !
 4. துரை செல்வராஜூ25 April 2014 at 10:33
  குளோனிங்.. சரி..
  ஆனா - நான் சொன்னது வேற..
  முக்கியமான மேட்டருக்கே வரவில்லை.. நீங்க!.
 5. சிவ சிவ ,கூட்டத்திலே கட்டுசோறு அவுக்காதேன்னு சொல்லி இருக்காங்களே ,அதான் அந்த மேட்டரை நாலு தாய்க்குலம் விரும்பி வர்ற இந்த இடத்திலே எப்படின்னுதான் யோசனையா இருக்கு !
  இந்த மாதிரி விஷயத்துக்கு'ஆன்மீக உலா 'நம்பள்கி தான் லாயக்கு !
 6. துரை செல்வராஜூ25 April 2014 at 11:18
  வாழ்க.. வளமுடன்!..