31 August 2015

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா :)

 பார்வை ஒன்றே போதுமே :)   

               ''ஒரே பார்வையில் பார்த்து ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''

                           ''நல்ல வேளை ,அவர் ஆண்களுக்கு மட்டுமே தைக்கிற டெய்லரானதால்  தப்பித்தார் !''பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?

            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு ரொம்ப எச்சரிக்கையா அவர் இருக்காரா ?''
            ''ஆமா ,டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு  தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ''


ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?

        ''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
       ''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
       ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''


ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா?

கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது!


  1. டீ.வி..இல்லாத வீடா சாத்தியமே இல்லை.......தரகர் ஏமாத்தப் போறார்.


  1. அதிலும் ,தொடர் பார்க்காத வீடா ?

30 August 2015

இவர் மனைவி வணங்கப்பட வேண்டியவர் :)


கனவிலே இவர் வரணும்னு சொல்லாமல் போனாரே :)

              ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
                

                    ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
            

                           ''ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''
மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... :)


            ''ஆறு கண்மாய்களில்  தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
          ''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''


கறி  ஃசாப்டா  இருக்கும் காரணம் :)
     ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
               ''My crow soft பிரியாணி கடைதான் !''

இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !


ஜெ.பாண்டியன்Sat Aug 30, 02:49:00 a.m.
இப்படி கேட்பவரின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் ! ---- அசத்தல்
ReplyDelete

Replies


 1. அகராதியோட வாழ்பவர் வணங்கப் பட வேண்டியவர்தானே ?


29 August 2015

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு:)

----------------------------------------------------------

 தோசை விலை நாற்பது ,வெங்காய தோசை விலை .......:)                       

                       ''உ ங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''

                     ''உங்களை யார் வெங்காய தோசை விலையை பார்க்கச் சொன்னது ?''


சதையைக் காட்ட காரணம் கதையில்லே ,காசுதானே :)

              ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''ரெண்டு மடங்கு  சம்பளம் வாங்கிக்காம  சொல்லியிருந்தால் இதை நம்பலாம் !''

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)
             ''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
             ''ஆமா ...ஒரு இ மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

28 August 2015

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் :)

தோழியின் அருமையான யோசனை :)         
               '' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
           ''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
            ''எட்டாவது அடியைக் கொடுக்கும் போதே என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!'' கோர்ட்டுக்கு போனாலும் அவர் வாதம் செல்லாது :)    
                '' கிழிஞ்சிருக்கிற  என் சட்டை ,பனியனைப்  பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !             
               ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
            ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிஷன் போதுங்கிறாரே!''
திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !
துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள் சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !


 1. தலைக்கு மேல வேலை ஜோக் அருமை சார்...
  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தலைக்கு மேலே நிறைய வேலை இருந்தாலும் கருத்துரைத்ததற்கு நன்றி !


27 August 2015

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

------------------------------------------------------------------------------------------------------------

    இது உண்மைதானா :)              
                 
               ''என்னங்க , நாய்கள் எல்லாம் என்னைக் கண்டவுடன்   குரைக்குதே,ஏன் ?'' 
       
        ''  பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியுமாமே  ,அதனால் ஆயிருக்கும் !''

பெயர் ராசியில்லாம போயிடுச்சே !

               ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு 

...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
              
     ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''

புதிய காதலரா பழைய கணக்கை முடிப்பாரு ?

              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ''எனக்கு ஐஸ் வாங்கித் தந்த கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?


 1. KILLERGEE DevakottaiWed Aug 27, 12:10:00 a.m.
  01. கைது பண்ணியவர் பேரு ராஜ ராஜ சோழனோ ?
  02. ஐஸ்காரன் கணக்கு இருக்கட்டும் இவங்க கணக்கு என்னாச்சு ?
  03. சொன்னவரு 90 க்குள்ளே இருக்காரா ? 10 குள்ளே இருக்காரா ?
  1. 1 கைது செய்தவர் சிபி (ஐ ) சக்கரவர்த்தி ஆச்சே !
   2.அவ்வளவுதான் ,மூழ்கத் தொடங்கியாச்சு !
   3.இவ்வளவு அறிவுபூர்வமா பேசுவதால் எதில் இருப்பார்ன்னு புரிஞ்சுக்குங்க !

26 August 2015

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா :)

---------------------------------------------------------------------------------

சான்ஸ்  கிடைக்கும் போது விடுவாளா மனைவி :)             
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
            ''விக்கல் நின்றதா ?''
             ''விக்கல் நின்னுடுச்சு ,நான் சொன்னதை உண்மைன்னு நினைச்சு,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !'' 

                      

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் ?

     
         ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
        
         ''நல்ல வேளை.தொந்தி இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
   தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

  கரந்தை ஜெயக்குமார்Tue Aug 26, 06:08:00 a.m.
தொந்தியால் இப்படி ஒரு பயனும் உள்ளதா?
 1. விழுந்தால் மீசையில் கூட மண் ஒட்டாதாமே!

  1. அம்பாளடியாள் வலைத்தளம்Tue Aug 26, 03:10:00 p.m.
   அப்போ இனி நீங்க தொந்தியைக் குறைக்காதீங்க ஜீ :))
   1. தொந்தியை விட எனக்கு மூக்கு நீளமாச்சே!
    1. உலகளந்த நம்பிTue Aug 26, 06:00:00 p.m.

     //''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது...//

     ஏட்டய்யா ஓடினாரா? நம்ப முடியல பகவான்ஜி.
    2. என்ன இப்படி கேட்டுட்டீங்க ?அவரோட துப்பாக்கியை திருடிக்கிட்டு ஓடினால் விடுவாரா ?
25 August 2015

சினிமா மோகம் படுத்தும் பாடு !

---------------------------------------------------------------------------------

நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
'' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?'' 
                    ''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
  இது பாசமில்லே ,பயம் !

                ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
             ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டின்னு ஜோதிடர் சொல்றாரே !''


ராதா எப்பவுமே ராதாதான் !

           ''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
            ''அதெல்லாம் இல்லை சார் !''
            ''என்னாஅதெல்லாம் இல்லே ?''
              ''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு சொல்லமாட்டேன் சார் !''


சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

சாத்தானின் சமையல் அறையை  ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?