30 November 2015

மனைவிக்கே தெரியாமல்....?

சாம்பிள் டீ கொடுத்தது இதற்குதானா :)

              ''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
              ''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்னு சொல்றாளே !''


 முட்டையை கோழிக் குஞ்சாய்  பொறித்த  இன்குபெட்டர்  வேற !             
              ''என் குழந்தை எடை குறைவாய் பிறந்ததால், இன்குபெட்டரில் இருக்குன்னு ,பிராய்லர் பண்ணை நடத்தினவர் கிட்டே சொன்னது தப்பா போச்சு !''
               ''ஏன் ?''
              ''இன்குபெட்டர்  ஒண்ணு என்கிட்டே சும்மாதான் இருக்கு ,வேணும்னா வாங்கிக்கங்கன்னு  சொல்றாரே !''

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

             '' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
          
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''

             ''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது 

தரம் ஊதினா போகுதே !''
  1. உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !
         ''ஹலோ ,யாரு தினேஷா ?''

        ''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 

         ''சாரி ,ராங் நம்பர் !''

மனைவிக்கு தெரியாமல்....?

           "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல்
 வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
              
            "எதை ?"
              "பேங்க் பாலன்ஸ்சைதான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

? யை ! ஆக்குவதுதான் வாழ்க்கை!

         முடியுமா என்பதே  தவறு ..


'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல்  உதிர்வதில்லை!

29 November 2015

டைவர்ஸ்... அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?


சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் ?
                ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பமுடியலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
                ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''
டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?
         ''அதிர்சசியான  செய்தியைச் சொன்னால் விக்கல்  நின்னு விடும்னு மனைவியிடம் ,உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
          
              ''விக்கல் நின்றதா ?''
           ''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           

தணிக்கையா ? தனியா  கையிலேயா ?
              "வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
                        "தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு  பண்றாங்களோ என்னவோ ?"

             அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் !

மாறும் உலகில் மாறாதிருப்பது .......
கரப்பான் பூச்சியும் ,
அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் கூச்சமும் !


28 November 2015

இவர் வாய்ஜாலம் மனைவியிடம் பலிக்குமா :)

                    ''பிரபலமான tv தொகுப்பாளருக்கு ,யாருமே பொண்ணு தர மாட்டேங்கிறார்களாமே,ஏன்  !''
                    ''பெண்டாட்டியிடமும்   கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவார்ங்கிற பயம்தான் !''

சொல்றதுக்கு  நல்லாவா இருக்கும் ? 

                ''பத்து வீடு பார்த்ததில் நடுத்  தெருவிலே இருக்கிற வீடு நல்லாயிருக்கே ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''

             ''நடுத்  தெருவிலே இருக்கேன்னு சொன்னா எல்லோரும்  சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''
வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி :)

               ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
               ''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...
1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 

அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !இதுவும் பழிக்கு பழியா ?
          ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 


 திருமண அகழி !

மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனையே male !

27 November 2015

இதென்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)

 உயிரோடு இருக்கும் வரை செலவுதானே :)            

                ''அரிசி மூட்டை இப்போதான் வாங்கின மாதிரியிருக்கு ,அதுக்குள்ளே தீர்ந்து போயிருச்சா ?''

                        ''என்னங்க செய்றது ,வாய்க்கரிசி  விழுகிற வரைக்கும் வயிற்றிலே  விழுந்து கிட்டே இருக்கே !''
                                                 


இதென்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

               ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''

                  ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''
பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

             '' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''

              ''சம்பாதிக்கவேண்டிய வயசுலே பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

பார் இல்லா பாருலகம் உண்டா?

''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''

''என்ன பாடுவார்?''

''  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னுதான்  !''

 கால் வைத்தாலே கலவரம் !

நீதி கேட்டு நீண்ட பயணம் ...
பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
தலைவர்  முடித்துக் கொண்டார் ...
பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

26 November 2015

தம்பதிகளை பணம் படுத்தும் பாடு:)

அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே :)
             ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வந்திருதே !''
            ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''


அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் :)

           ''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
           ''அகலக்கால் வைச்சு டிக்கெட்கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி  வாங்கிப் போட்டுகிட்டாரே ? 

ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட் போலிருக்கு:)

            ''இனி மேல் நீங்க  சுகரை கண்ணாலே கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னா, சந்தோசமா சரின்னு சொல்றீங்களே,எப்படி?''
          ''ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !


தம்பதிகளை பணம் படுத்தும் பாடு :)


ஜோடிப் பொருத்தப் போட்டி ...
வென்ற பணத்தை பங்கு போடுவதில் வந்தது ...
 தம்பதிகளுக்குள் டைவர்ஸ் ! 

25 November 2015

அனுஷ்கா ...அன்று கொடுத்ததும் ,இன்று கொடுப்பதும் :)

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் ?

              ' 'கல்யாண ஆல்பத்தில் உள்ள எல்லா 


போட்டோக்களிலும்   சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது 


மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் 


முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''

                   

                        ''அதில் ,கூட நிற்கிறவங்க நடிகையோட 


டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !'' 

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

      ''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
      
          ''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''
     

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...
இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கே உரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?


அனுஷ்கா தான் கொடுப்பதும் ,கெடுப்பதும் !

                ''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வரும்னு  சொல்றாங்களே ,உண்மையா?''


            ''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க !ஆனா இப்போ நடிகை ஆகி ரசிகர்கள்   தூக்கத்தை  கெடுக்கிறாங்களே!''
                                 

                                                
                                                                                            


                                               

 ரோஜாக்கள் ஜாக்கிரதை !

ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம் !

24 November 2015

புதிரான கவிதையா அவள்:)  எல்லோருக்கும் வராது ஞானம் !    

               ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
                ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''


பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !

           ''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு 

முன்னாடியே ஏன் சொல்லலே ?''
              
             ''சேலையை  கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி 

இருக்கும்ன்னு சொன்னேனே !''மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

              ''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்கலைன்னு கிண்டல் 

பண்றாரா ,எப்படிடீ?''

              ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

புதிரான கவிதையா அவள்?

பாரசீக கவிதையாய்...

 என் விழிகளில் தெரிகிறாய் நீ !

உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 

கவிதை எனக்கு  புரியும் ?

23 November 2015

மனைவியின் குரலுக்கு மரியாதை:)

  மகளின் வருத்தம் நியாயம்தானே ?       
      
            ''இங்கிலீஷ்  தெரியலைன்னா சும்மா இருங்கப்பா !''
        
           ''நான் என்னா தப்பா  சொல்லிட்டேன் ?''

          '' நான் அபார்ட்மெண்டுக்கு குடி போனதை ,அபார்சனுக்கு 
போயிட்டதா சொல்லி இருக்கீங்களே !''

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்கு கேடு ?

               ''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
            ''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

தலைவருக்கு பிடித்த ராகம் !

           ''தலைவரை பேட்டி கண்ட நிருபர்கள் எல்லாம் எதுக்கு சிரிக்கிறாங்க ?''
              
          'ராகத்தில்  தனக்கு அதிகம் பிடித்தது செஞ் 'சுருட்டி'ன்னு  சொன்னாராம் !''


தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி!

பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம் 
பிறகு சவமாய் போவதால்!

 மனைவியின் குரலுக்கு மரியாதை!
             ''என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே இருந்து நீக்கிட்டாங்க!''

            ''நம்பவே முடியலேயே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம் இருக்கா?''
22 November 2015

படித்தால் மட்டும் போதுமா :)

 பிடித்ததை தருவது நல்லதுதானே !

           ''என்ன சொல்கிறீர்கள்  அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''
              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா ?

          ''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு வைப்பார்னு சொல்றியே ,ஏன்?''
           ''சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடர் எழுதியவர் ஆச்சே !''


எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் eye !
நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே  பற்றிக் 

'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?

  
நேற்றைய ,சீரியஸ் கதையின் தொடர்ச்சி .......

படித்தால் மட்டும் போதுமா ?