1 January 2016

ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா:)

வலையுலக  உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !


அடிச்சு விடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா :)
                ''என் பையன் எதிர்காலத்தில்  பெரிய ஞானியா வருவான்னு ஏன் சொல்றீங்க ?''
                ''புத்தரின் போதனைகள் எது என்ற கேள்விக்கு அவன் எழுதியிருப்பது எல்லாமே அவனோட போதனைகளா இருக்கே !'' 

 இப்போதைய ஆட்சியாளர்களின் மனநிலை இப்படி யிருக்கே:)
                 ''புழக்கத்தில் இருக்கிற ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாய் புது நோட்டுக்கள் வந்தா, நல்லது தானே ?''
                 ''ஆனால் அதில் காந்திக்குப் பதிலா கோட்சே படம் வந்தா ,நல்லாவா இருக்கும் ?''விசாரிக்காம பொண்ணைக் கொடுத்து விடுவதா :)
                   ''பண்ணையார் குடும்பம்னு சொன்னதை 

நம்பி பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டீங்களா  ,ஏன் ?''
              
               ''அவங்க  பாம்பு பண்ணை வச்சு 

நடத்துறவங்களாம் !''                       

              ''இந்த உண்மை எப்போ  உங்களுக்கு 

தெரிஞ்சது ?''
                        
            ''முகூர்த்த நேரத்திலே நாதஸ்வரத்திற்கு பதிலா   

மகுடி வாசிச்சப்போதான் !''
கல்லூரிப் பெண் அரிவாளால் தோழியை வெட்டிய கொடுமை !

ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் 

தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்" 

என்று இந்திய  உச்சநீதிமன்றம் சமீபத்தில் 

 தீர்ப்பளித்துள்ளது...

இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் 

                வேட்கை குறைவதற்குப் பதில் கூடித்தான் உள்ளது 

என்பதற்கு உதாரணம் ...

இப்போது வெளிவந்து இருக்கும் செய்தி ...

                          ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த தோழிக்கு அரிவாள் வெட்டு !
                     இந்தக் கொடுமை கர்நாடக மாநில கிராமம் ஒன்றில் 

நடந்து உள்ளது ...
  
                       கொணலூரில் உள்ள  கல்லூரியில் விடுதி தங்கிப் 

படிக்கும் 
                           இருபெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்து உள்ளனர் ...
  
                           கல்லூரி முதல்வரிடம் புகார் வந்ததால் இருபெண்களும் 

                      விடுதியில்இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் ...

                        இந்த நிலையில் கல்லூரிக்கு வர பஸ்ஸில் அமர்ந்து 

இருந்த பெண்ணை அழைக்க ...

அவர் வர மறுக்க ...

பொதுமக்களின் கண் முன்பே ...

                              வர மறுத்த பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் 

வெட்டு விழுந்து உள்ளது...

                        பெண்ணை பெண்ணே அரிவாளால் வெட்டும் அளவிற்கு   
                 
                      ஓரினச் சேர்க்கை வெறி அதிகரித்து உள்ள நிலையில் ...

                          உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு சாத்தியமாகுமா 

என்பது ஆயிரம் டாலர் கேள்விதான் !

                  
                                                                                                                      


  இதுவரை எடுத்த சபதங்களில்  இதுதான் சூப்பர் :)

  1.               '' இந்த புது வருசத்திலே 'ஸ்பெசல் 'சபதமா ,என்னது?''
  2.                   ''ஏற்கனவே எடுத்த பல வருஷ சபதங்களில் ,ஒன்றையாவது  இந்த வருசத்தில்  நிறைவேற்றணும்னுதான் !''
  3. ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா:)
  4. பெண்மை வீழ்க வென்று கூத்திடும் கயவர்கள் கூறும் காரணம் ...
  5. பெண்ணின் உடை கவர்ச்சியாம் !
  6. ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
  7. ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா ?

40 comments:

 1. 01. ஞானியாக எமது வாழ்த்துகள்
  02. ஆஹா இதென்ன கூத்து.
  03. இப்ப தெரிஞ்சு என்ன செய்யிறது
  04. அழிவின் ஆரம்பம்
  05. இது ஸூப்பர்
  06. அதானே.......

  ReplyDelete
  Replies
  1. ஞானியாகி 'ஆன்மீக ஆராய்ச்சி 'எல்லாம் பண்ணும் எண்ணமில்லை எனக்கு :)
   கூத்து உண்மையாகும் நாள் வந்து கொண்டிருக்கே :)
   அவரும் மகுடி வாசிக்க பழகிக்க வேண்டியதுதான் :)
   அவர்களிக் கேட்டால் ,இதுவும் ஆணாதிக்க எண்ணம் என்பார்களோ :)
   இதுகூட நிறைவேறாமல்தான் போகப் போகிறது :)
   ஆணுடைக் கவர்ச்சியைப் பார்த்து ,கருமம் கருமம் என்று தலையில் அடித்துக் கொள்வார்களோ :)

   Delete
  2. கில்லர்ஜி,என் தளத்தில் புலவர் இராமனுஜம் அய்யா வாக்களிக்க முடியவில்லை என்று சொன்னார் ,உங்களாலும் முடியவில்லையா :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  புதிய வருடத்தில் இந்த கேள்வியா?,..ஹா..ஹா..
  பெண்ணின் ஆடையில் ஜி... இரசித்தேன் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கேள்வி தானே நம்மை டோசிக்க வைக்கும் :)

   Delete
 3. வணக்கம் ஜி எல்லாமே சுப்பர் !

  வளர்பிறை வண்ணம் போலே
  வாழ்மனை சிறக்க மக்கள்
  இளமையின் பூரிப் பாக
  எழிலுற நெஞ்சம் எல்லாம்
  அளவிலாச் செல்வம் சேர்த்தும்
  அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
  வளமுடன் வாழ்க வென்று
  வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 4. அன்பு நண்பரே,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
  TM +

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 5. புத்தராவே ஆகி விட்டான் போல!

  ஊஹூம்... நல்லா இருக்காது.

  மகுடியா...ப....ப....ப்ப....பாம்பு....!


  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. குட்டிப் புத்தரோ :)

   புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி :)

   பழக பழக பாம்பு பயமும் போகுமோ :)

   வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 6. அனைத்தும் அருமை. பண்ணையார் குடும்ப நகைச்சுவையினை அதிகம் ரசித்தேன். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளத்தின் பெயரிலேயே புத்தா இருப்பதால் ,குட்டிப் புத்தரையும் ரசித்தீர்கள் தானே :)

   Delete
 7. பெரிய அஞ்ஞானியா வருவான்னு சொல்லுங்க...! சீக்கிரமே பெரியார் ஆயிடுவான்...!

  கோட்...சே... நல்லாயிருக்குமா...? அதுக்கு கோட்டு போட்ட காந்தி வந்தாலும் பரவாயில்லை...!

  பரவாயில்லை... கல்யாணத்த படம் எடுக்கிற செலவு மிச்சம்தானே...! பாம்பு படம் எடுத்துக்குமுல்ல...!

  இனம் இனத்தோட சேர விடமாட்டேங்கிறீங்களே...! என்னம்மா... இப்புடிப் பண்றீங்களேம்மா...?!

  எடுத்த சபதம் முடிப்பேன்... ஆமாம்... அடுத்த கனமே... அப்பவே முடிச்ச மாதிரி... உடனே அதையே மறந்திடுவேன்...!

  ஆ...பாசம்...! இப்பபெல்லாம் பெண்கள் ஆபாசமா வர்ரத பாக்கறதே இல்ல... ஆ...பாசம்தான்...!

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு பெரியார் கிடைக்கப் போகிறார் ,நாடு திருந்துமா :)

   சேச்சே கோட்சே தானா :)

   நல்ல கலர் படமா எடுக்குமா :)

   இயற்கை உறவாக இது தெரியவில்லையே :)

   சபதம்னா இப்படித்தான் இருக்கணும் :)

   இந்த பாசம் புல்லரிக்க வைக்குதே :)

   Delete
 8. புத்தாண்டில் நகைச்சுவைகளும் படங்களும் மிக அசத்தலாக உள்ளன.

  புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies

  1. 3 comments:
   //
   Bagawanjee KA said...
   புத்தாண்டில் நான் படித்த முதல் பதிவு ,அட்டகாசம் :)
   Friday, January 01, 2016 12:26:00 AM
   //

   புத்தாண்டில் எனது முதல் பதிவுக்கு வந்து தாங்கள் இட்ட முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி!

   Delete
  2. உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
  3. நாம் இருவருமே நகைச்சுவைப் பிரியர்கள் ஆச்சே ,ஆண்டு முழுவதும் நம் பந்தம் :)

   Delete
  4. //நம் பந்தம் :)//


   நான் செய்த பாக்கியம்...!

   Delete
 9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 10. அரிவாள் வெட்டா...? அது சரி நாடு நல்லதை நோக்கிப் பயணிக்கிறது போல...

  ஆபாசம் உடையில் குறையும் போது பார்வையும் மாறும்....

  ரசித்தேன் ஜி.


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மோகம் அதிகமானதால் ஏற்பட்ட மோசமான விளைவோ இது:)

   மாறும் ,ஆனால் பார்வைப் படாமல் போகாது ,அப்படித்தானே :)

   அன்பான வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 11. வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தாமதம் ஆனதுக்கு மன்னியுங்கள் ஜி ,அன்பான வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 12. பகவான்ஜீ, உங்களுக்கு புத்தண்டு வாழ்த்துக்கள்.
  ஆபாசம் பெண்ணின் உடையிலா,ஆணின் மனதிலா
  ஆணின் மனதில் தான்.

  ReplyDelete
  Replies
  1. aankila புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 13. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. aankila புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 14. நகைச்சுவைகள் ரசித்தேன் சில சிந்தனையை தூண்டவும் செய்தது... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. #சில சிந்தனையை தூண்டவும் செய்தது.#
   பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லியுள்ளீர்களே ,நன்றி !
   aankila புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி :)

   Delete
 15. புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது

  ReplyDelete
  Replies
  1. aankila புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 16. இதே பிஜேபி ஆட்சி தொடர்ந்தால் கோட்சேயின் படம் ரூபாய் நோட்டில் வந்தாலும் ஆச்சரியமாக இருக்காது

  ReplyDelete
  Replies
  1. அடுத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதால் அடக்கி வாசிப்பது போலிருக்கே:)

   Delete
 17. அருமையான ஜோக்ஸ்! இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)

   Delete
 18. வணக்கம் பகவானே!

  பொதுவாகவே உங்கள் ஒவ்வொரு பதிவிலும் உங்களது பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்திப் போகிறீர்கள். இது எழுத்தை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்க்கன்றி அரிதானது.

  நகைச்சுவை என்பது தமிழ் மரபில் மிக அரிதானது.

  அதை எழுதுதலும் மிகக் கடினமானதென்ற நிலைப்பாடுடையவன் நான்.

  மிக மிக இயல்பாக வருகின்ற உங்கள் நகைச்சுவைத் துணுக்குகளின் ஊடே, வலம் வருகின்ற பிற தகவல்கள், கருத்துகள், கவிப்பொருட்கள் இவற்றைக் காணுந்தோறும் பலமுறை வியந்திருக்கிறேன்.

  அத்தகு வியப்புடன் இப்புத்தாண்டு, தமிழ் மனங்களில் தங்களது எழுத்துகள் முதலிடம் பெறும் வகையில் அமையும் என்னும் வாழ்த்தினைத் தங்கட்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் என்று காப்பி பேஸ்ட் செய்யாமல் ,என் பதிவுகளைப் பற்றி ,உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் வடித்திருக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை :)
   உங்களின் கூற்றுப்படி ,தமிழ் மரபில் சிலேடைகள் மட்டுமே நகைச்சுவை வரம்பில் வருவது போல் தெரிகிறது !மற்றபடி 'நீர் விழுந்தூம்பு'என்று அந்த காலத்தில் நடந்தது என்று ,இந்த காலத்தில் மொக்கை போடுகிறார்கள் என்றே நினைக்கிறேன் :)
   உங்களின் தமிழறிவைக் கண்டு நான் வியக்கிறேன் ,நீங்களும் வியப்பதாய் சொல்கிறீர்கள் ,நம் வியப்பு ,உவப்பாய் உள்ளதென்று நம் நண்பர்கள் சொல்ல வேண்டும் :)
   தமிழ் மணத் திரட்டியில் மட்டுமல்லாது ,தமிழ் மனங்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற உந்துதலைத் தரும் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete