11 January 2016

வீட்டுக்கொரு 'ஆமாம் சாமி 'இருக்கிற மாதிரி :)

  பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லணுமோ :)             

                 ''மேனேஜர் சார், லீவுக்கு காரணம் சரியில்லைன்னு ,நம்ம ராஜாவுக்கு  லீவைத் தர மாட்டேன்னு  சொல்றீங்களே  ,ஏன்  ?''

                 ''ஊருக்கு போய் இருக்கிற பெண்டாட்டியைக் கூட்டி வரப்போறேன்னு 
கேட்கிறாரே !''

மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம் :)

           ''பரவாயில்லையே , அந்த ஸ்கூல்லே இதுவரை யாருமே ஜீரோ மார்க் வாங்கியதில்லையாமே !''
         ''அட நீங்க வேற ,வினாத் தாளில் உள்ள கேள்விகளை அப்படியே அழகா எழுதியிருந்தாலே...குட் ஹாண்ட்ரைட்டிங்னு  போனஸ் மார்க்கை போட்டுடுவாங்களாம் !''


ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?

            ''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
            ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே  !''

வீட்டுக்கொரு 'ஆமாம் சாமி 'இருக்கிற மாதிரி ,நாட்டுக்கொரு ?
                    ''ஆம் ஆத்மின்னா  அர்விந்த் கேஜ்ரிவால் ஞாபகம் வர்றார் ,ஆமாம் ஆத்மின்னா ?''
                ''நம்ம பிரதமர்தான் !''
(இந்த பதிவு வெளியான சில ஆண்டுக்கு முன்  , அப்போது பிரதமராய்  இருந்தவர் உங்கள் நினைவுக்கு வருகிறாரா ?)
                                                  
எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் :)
 1.       ''தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்களா, எப்படி ?''
 2.           ''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''    
 3.                 

 4. 100க்கு பக்கம்தான் 108ம் :)

  100 கிலோமீட்டர் வேகத்தில்
   வாகனத்தில் சென்றவனின் கதி ...
  108 வாகனத்தில் சோகத்தில் !

28 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன் ஜி! 'கொல்'லுனு சிரிக்கற தலைவர் எங்களையும் சிரிக்க வைக்கிறார்!

  புதுசா படத்தோட ஜோக்! அட!

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,தலைவர் கொல்லாமல் விட்டாரே :)

   மேலேயுள்ள linkwithin கேட்ஜெட்டுக்கு படம் தேவையாயிருக்கே ஜி :)

   Delete
 2. யாரோட பொண்டாட்டிய...? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனுமுல்ல...!
  வேலை செய்றவனுக்கு வேலையக் கொடு... வேலை செய்யாதவனுக்கு சம்பளத்த கொடுங்கிறாங்களே...!
  காக்கா கூட்டத்தப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க...?

  நீங்க வேற அவுங்க ஸ்கூல்ல கம்யூட்டர்லயே ஜீரோவே இல்லாம எடுத்துட்டாங்களாம்... அவசரத் தேவைக்கு (O) ஓ போடுங்கிறாங்க!

  ஔவைக்கு இரட்டை நாக்குக்கிறது நிருபணமாயிடுச்சு...!

  ஆம்... அந்த ஆத்மா நினைவுக்கு வரத்தானே செய்வார்...!

  வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தொண்டர்களைப் பெற்ற தலைவர் அல்லவா...? சுள்ளியை...!

  அடிபட்டவர்களை 108 வாகனத்தில் தூக்கிச் சென்றால் மருத்துவமனையில் இறக்க ஆள் இல்லையாம்... எல்லாருக்கும் 111 தானாம்...!

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தன் பெண்டாட்டி என்பதால்தானே பின் வாங்குகிறார் :)

   காக்கைங்க சொல்லியா தரனும் ,பிறவி குணம் ஆச்சே :)

   நாமும் சேர்ந்து o போடுவோமா :)

   அவ்வை இருந்தால் சாபம் இட்டிருப்பார்கள் :)

   அவர்தான் நம் அந்தராத்மாவில் இன்னும் வாழ்கிறாரே :)

   பொறுக்கிங்க ,அதையும் செய்வார்கள் :)

   இறக்க ஆள் இல்லையென்றால், இவரும் இறக்க வேண்டியதுதானா :)


   Delete
 3. அனைத்தும் ரசித்தேன் ஜி...

  ReplyDelete
  Replies
  1. குறிப்பிட்டு ஒன்றை சொல்லுங்களேன் ஜி :)

   Delete
 4. Replies
  1. குறிப்பிட்டு ஒன்றை சொல்லுங்களேன் ஜி :)

   Delete
 5. தொடரட்டும் நகைப்பணி
  தம +

  ReplyDelete
  Replies
  1. குறிப்பிட்டு ஒன்றை சொல்லுங்களேன் ஜி :)

   Delete
 6. Replies
  1. அலுவலகர்தான் சரியில்லை :)

   Delete
 7. தலையாட்டி பிரதமரை அவ்வளவு லேசில் மறந்துவிட முடியுமா??? நண்பரே......

  ReplyDelete
  Replies
  1. தஞ்சாவூரை மறந்தாலும் தலையாட்டி பொம்மையை மறக்கமுடியுமா :)

   Delete
 8. பிச்சைக்காரனுக்கு ஓர் ஆத்திசூடியா
  பணக்காரனுக்கு ஓர் ஆத்திசூடியா
  ஒரு போதும்
  பாவலர் ஔவையார்
  பிழை விட்டிருக்க மாட்டாரே!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷனா வைச்சு விசாரிக்கமுடியும் :)

   Delete
 9. 01. இது பொய்தான் அவளுக்கா வரத்தெரியாது
  02. இதுவும் நல்லாத்தான் இருக்கு குழந்தைகளுக்கு சிரமம் இல்லை.
  03. குழப்பமாகத்தான் இருக்கு.
  04. மண்’’ மோகன் சங்கு இல்லையே..
  05. அடடே... ஸூப்பர் தடிகள்
  06. உண்மையே...

  ReplyDelete
  Replies
  1. அதானே , இவர் இப்படித்தான்னு தெரியுமே :)
   அதான் ஆல்பாஸ் ஆயிடுதே :)
   குழப்பம் தீர என்ன வழி,பாப்பையா சாலமன் அய்யா தலைமையில் பட்டிமன்றம் நடத்தலாமா :)
   இப்போ பதவியில் இல்லைதான் :)
   தடிகளை நம்பித்தானே தலைவர் இருக்கார் :)
   போறவங்க புரிஞ்சிகிட்டா சரி :)

   Delete
 10. Replies
  1. இப்படி சொன்னா எப்படி :)

   Delete
 11. வணக்கம்
  ஜி

  அனைத்தும் அருமை ஜி.. த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. த ம எண்ணை மட்டும்தான் மாற்றுவீர்களா ,ரூபன் ஜி :)

   Delete
 12. அட படம் நல்லாருக்குதே ஜி!

  நல்ல ஸ்கூலு...ஹஹஹ்..ஆமாம் சாமீ வில்லுப்பாட்டு பாடும் அவர் பாவம் இப்போது எப்படியோ?!!!!

  100 டு 108 அஹ்ஹ உண்மைதானே ஜி

  ReplyDelete
  Replies
  1. கருத்தும் ஓஹோதான் :)

   உலகத் தரப் பள்ளியா இருக்குமோ :)

   இப்போ அவரைப் பற்றி யார் கவலைப் பட்டா :)

   சாலை வார என் பங்களிப்பு இது :)

   Delete
 13. ஆமாம் ஆமாம். போனவர் வருகிறார் .

  தொடரகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனி, அவர் காலில் விழுந்து அழைத்தாலும் வர மாட்டார் ,வரவே மாட்டார் :)

   Delete
 14. Replies
  1. அடியாட்களை நினைச்சா ,சிரிப்புதான் வருதா :)

   Delete